தமிழ்நாடு

ஞாயிறு திருமண வைபவங்கள்: சிறப்பு அனுமதி கோரி வழக்கு

Updated : ஆக 16, 2020 | Added : ஆக 16, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: ஞாயிறன்று நடக்கும் திருமண வைபவங்களுக்கு செல்பவர்கள், திருமணம் சம்பந்தப்பட்ட பணிகளை மேற்கொள்பவர்களுக்கு, சிறப்பு அனுமதி வழங்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.திருச்செந்துாரைச் சேர்ந்த, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:வைரஸ் தொற்று காரணமாக, பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில், பல நிபந்தனைகள்
 ஞாயிறு திருமண வைபவங்கள் சிறப்பு அனுமதி கோரி வழக்கு


சென்னை: ஞாயிறன்று நடக்கும் திருமண வைபவங்களுக்கு செல்பவர்கள், திருமணம் சம்பந்தப்பட்ட பணிகளை மேற்கொள்பவர்களுக்கு, சிறப்பு அனுமதி வழங்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்துாரைச் சேர்ந்த, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:வைரஸ் தொற்று காரணமாக, பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில், பல நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஞாயிறு மட்டும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அன்று ஓட்டல்கள் திறக்கப்படாததால், குடும்பத்தை விட்டு தொலைவில் இருப்பவர்களுக்கு, உணவு கிடைக்காத நிலை உள்ளது.


latest tamil news
கிராமப்புறங்களில், ஓட்டல்கள், டீ கடைகளுக்கு நேரடியாக பால் விற்பனை செய்பவர்களுக்கும், ஞாயிறு கடை அடைப்பால் பாதிப்பு ஏற்படுகிறது. சந்தை மூடப்படுவதால், விளைவித்த காய்கறிகள், பழங்களை, விவசாயிகள் எடுத்து வர முடியாது; அவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.ஊரடங்கு உத்தரவால், பல திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டன. வரும், 23, 24, 28, 30, 31; செப்., 4, 14, 16 ஆகிய நாட்கள், முகூர்த்த நாட்கள் என்பதால், திருமண வைபவங்கள் நடக்கும். 23, 24ம் தேதி மற்றும் 30, 31ம் தேதி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில் வருகிறது. ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால், திருமண வேலைகளில் சிரமங்கள் ஏற்படும். எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல், ஞாயிறன்று முழு ஊரடங்கை அமல்படுத்துகின்றனர்.

எனவே, வரும், 23, 24, 30, 31 ஆகிய தேதிகளில், திருமண வைபவங்களுக்கு செல்பவர்கள், திருமண நிகழ்ச்சி தொடர்பான பணிகளை மேற்கொள்பவர்களுக்கு, சிறப்பு அனுமதி வழங்க வேண்டும். ஞாயிறு அன்று, ஓட்டல்கள், மெஸ்கள், பெட்ரோல் நிலையங்கள் திறக்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
16-ஆக-202015:04:49 IST Report Abuse
madhavan rajan திருமணங்கள் தள்ளிவைத்தால் பரவாயில்லை. பலருக்கு நோய்த்தொற்று பரவாமல் இருப்பதுதான் முக்கியம். விழாக்களுக்கு செல்பவர்கள் பலரும் சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணிதல் போன்றவைகளை மதிப்பதில்லை. பலர் நோய்த்தொற்றுக்கும் ஆளாகியிருக்கிறார்கள். பொறுப்பில்லாமல் விழாக்களை நடத்துவோம் என்று கூறுபவர்களுக்கு ஆதரவு தரக்கூடாது. இறப்பு போன்றவை தவிர்க்கமுடியாதது. மற்றவையெல்லாம் அவ்வளவு அவசரமானது அல்ல.
Rate this:
Cancel
16-ஆக-202013:54:38 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் ஏம்பா இப்ப தான் சென்னை 1000 கீழே வருது உனக்கு பிடிக்கல அதாவது பதள, கொஞ்சம் பொறுத்து பண்ணுங்களேன் இல்லை அவ்வளவுக்கு ஆகும் செலவை ஒரு அநாதை இல்லத்திற்கு கொடுக்கலாமே மனமிருந்தால்
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
16-ஆக-202012:27:48 IST Report Abuse
தத்வமசி மக்கள் கொரோனாவை மதிக்கவில்லை. டாஸ்மாக்கிலும், சந்தைகளிலும், சாலைகளையு ம் பார்த்தால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடு போலவே இல்லை. எல்லா கடைகளும் திறந்துள்ளன. அங்கெங்கே மருத்துவ முகாம். தெருவடைப்பு. சில இடங்களில் நாடகம் போலவே தெரிகிறது. மருத்துவமனைகளில் எந்த கவனிப்பும் இல்லை என்று புலம்புகின்றனர் சென்று வந்தவர்கள். கொரோனா பாதித்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் சுதந்திரமாக திரிந்து வந்தனர். அவர்களே கடைக்குச் சென்று தனக்கு வேண்டிய டீ காபி, ஜூஸ், போண்டா, பஜ்ஜி, பிரெட் போன்றவைகளை வாங்கி சாப்பிட்டு, காலாற நடந்து சென்று வருகிறார்கள் என்று நண்பர்கள் கூறுகிறார்கள். ஞாயிறன்று மட்டும் கொரோனா முழித்துக் கொண்டு மற்ற நாட்களில் தூங்கிவிடும் போல இருக்கிறது. அரசு தனது வருமானத்தை எந்த விதத்திலும் குறைத்துக் கொள்ளவில்லை. ஆனால் வாழ்வாதாரம் இழந்தவர்கள் கோடானு கோடி பேர். பொருளாதாரம் இழந்தவரர்கள் கோடானுகோடி பேர். இதற்கெல்லாம் வருங்காலம் இவர்களை சரித்திரத்தில் என்ன சொல்லி எழுதப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இன்று வாழ்க கோஷம் இருக்கலாம். நாளை விமர்சனம் உண்மையை சொல்லும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X