பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.100 கோடி விநாயகர் சிலைகள் தேக்கம்

Updated : ஆக 16, 2020 | Added : ஆக 16, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி அளிக்கப்படாததால், மாநிலம் முழுதும், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் தேக்கமடைந்துள்ளன.விநாயகர் சதுர்த்தி, வரும் 22ம் தேதி, கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவலால், சிலை பிரதிஷ்டைக்கு, அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனால், தயாராகியுள்ள சிலைகள், தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.சிலை தயாரிப்பாளர்கள் கூறியதாவது: மாவட்டத்துக்கு, 2,000 முதல், 10
விநாயகர், சிலைகள், தேக்கம்

விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி அளிக்கப்படாததால், மாநிலம் முழுதும், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் தேக்கமடைந்துள்ளன.

விநாயகர் சதுர்த்தி, வரும் 22ம் தேதி, கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவலால், சிலை பிரதிஷ்டைக்கு, அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனால், தயாராகியுள்ள சிலைகள், தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிலை தயாரிப்பாளர்கள் கூறியதாவது: மாவட்டத்துக்கு, 2,000 முதல், 10 ஆயிரம் சிலைகள் வரை தயார் செய்யப் பட்டுள்ளன. சிலைகளுக்கு முதலிலேயே பணம் பெற்றுக்கொள்ளும் தயாரிப்பாளர்கள் குறைவுதான். அப்படியே பணம் பெற்றாலும், தயாரிக்கப்பட்ட சிலையை, அடுத்த ஆண்டு பயன்படுத்துவதும் சிரமம்.


latest tamil news


எப்போதும் சிலைகள், அந்தந்த ஆண்டுக்குத் தகுந்தாற்போல், தயாரிக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு, கொரோனா அரக்கனை அழிக்கும் நோக்கில், சிலைகளின் வடிவமைப்பில் புதுமைகள் செய்யப்பட்டிருந்தன. மாநிலம் முழுதும், 100 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்பிலான சிலைகள் தேக்கமடைந்துள்ளன. சிலை தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம்தான். சிலை பிரதிஷ்டைக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
16-ஆக-202015:45:25 IST Report Abuse
vnatarajan டாஸ்மாக் கடைகளை திறக்கும்போது ஏன் சிலைகள் வைப்பதை சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கக்கூடாது
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
16-ஆக-202015:01:47 IST Report Abuse
Balaji இந்த தடை நியாயமற்றது. குறிப்பாக டாஸ்மாக் திறந்திருக்கும் பொது இதை ஏன் தடுக்க வேண்டும்? பண்டல் அமைத்து சிலை நிறுவி கூட்டம் கூட தடை விதித்து அனுமதித்திருக்கலாமே? மேலும் கடலில் கரைப்பது தான் பிரச்சினை என்றால், இந்த சிலைகளை கடலுக்கு பதில் இதை தயாரிக்கும் தொழிலாளர்களுக்கே கொடுத்து அவர்கள் இவற்றை மரூ சுழற்சி செய்ய வழி செய்திருக்கலாமே?
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
16-ஆக-202010:10:26 IST Report Abuse
அசோக்ராஜ் சரி சரி. ஆயிரம் பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கவே போலீஸ் போதவில்லையே? அது தவிர பனிமய மாதாவை விடவா விநாயகர் ஒஸ்தி? திராவிஷ மண்ணு ஆச்சே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X