'டிக்டாக்'கை தொடர்ந்து சீன செயலியான 'அலிபாபா'வும் முடக்கம்? டிரம்ப் அதிரடி

Updated : ஆக 16, 2020 | Added : ஆக 16, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க அரசின் தனிப்பட்ட தகவல்களை சீன செயலியான 'டிக்டாக்' களவாடுவதாக குற்றம்சாட்டிய டிரம்ப் அரசு, அந்த செயலியை அமெரிக்காவில் முடக்கியது. 'சீனாவுக்கு சொந்தமான மொபைல்போன் செயலிகள் அமெரிக்க நிறுவனங்களிடம் விற்கப்படுமேயானால் அவை அமெரிக்காவில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்' என, டிரம்ப் அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், பத்திரிகையாளர்

வாஷிங்டன்: அமெரிக்க அரசின் தனிப்பட்ட தகவல்களை சீன செயலியான 'டிக்டாக்' களவாடுவதாக குற்றம்சாட்டிய டிரம்ப் அரசு, அந்த செயலியை அமெரிக்காவில் முடக்கியது. 'சீனாவுக்கு சொந்தமான மொபைல்போன் செயலிகள் அமெரிக்க நிறுவனங்களிடம் விற்கப்படுமேயானால் அவை அமெரிக்காவில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்' என, டிரம்ப் அரசு தெரிவித்திருந்தது.latest tamil news
இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ''சீனாவைச் சேர்ந்த பிரபல ஆன்லைன் விற்பனை தளமான 'அலிபாபா'வை அமெரிக்காவில் முடக்கக் திட்டமிட்டுள்ளோம்,'' எனத் தெரிவித்துள்ளார்.'அரசியல் லாபத்துக்காக பழிவாங்கும் டிரம்ப் சர்வதேச சட்டத்தை மீறி வருகிறார்' என, சீன வெளியுறவுத்துறை காட்டமாகத் தெரிவித்திருந்தது.


latest tamil news'ஜாக் மா நிர்வகிக்கும் அலிபாபா நிறுவனம் அமேசான் நிறுவனத்துக்கு அடுத்து மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தகத் தளமாக விளங்குகிறது. இதற்கு ஆசிய ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. அலிபாபாவை முடக்கினால் அமெரிக்கர்கள் பலரது எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்' என, அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


latest tamil news'டிக் டாக் போன்ற பொழுதுபோக்கு செயலிகளை தடை செய்வதால் பெருவாரியான அமெரிக்கர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், அலிபாபா போன்ற மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக சந்தை முடக்குவது அமெரிக்காவில் பலரது வாழ்வாதாரத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் சிரமத்தைக் ஏற்படுத்தும். இந்தநிலை தொடர்ந்து நீடித்தால், அமெரிக்காவின் மொத்த கொள்முதல் உற்பத்தி மற்றும் அன்னிய செலாவணி பாதிக்கப்படும்' என, பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
16-ஆக-202021:22:08 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி ட்ரம்ப் சீன அலிபாபாவை தடை செய்தால் அது அமெரிக்க நிறுவனமான அமேசானுக்குத்தான் லாபம். அப்படி இருக்க இதனால் அமெரிக்கர்கள் எப்படி பாதிப்பார்கள்? தொடரட்டும் ட்ரம்பின் அதிரடி. அடுத்தும் அவர்தான் அமெரிக்காவுக்கு அதிபர். அவர் வந்தால்தான் சீனாவின் கொட்டம் ஒடுக்கப்படும். அதுதான் பாரதத்துக்கும் நல்லது.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
16-ஆக-202019:57:45 IST Report Abuse
 Muruga Vel ராஷ்டிரபதிக்கே உரிய அதிகாரத்தை பயன் படுத்துவதில் டிரம்புக்கு நிகர் ட்ரம்ப் தான் ...சீனாவுக்கு எதிராக பயன் படுத்திய அத்தனை அஸ்திரங்களும் ராஷ்டிரபதிக்கே உரிய தனிப்பட்ட அதிகாரம் ..எந்த சபையும் கேள்வி கேட்க முடியாது ..
Rate this:
Cancel
Balam - Chennai,இந்தியா
16-ஆக-202019:02:13 IST Report Abuse
Balam He his misusing his utive power too much. By he of this year he will be either in the prison or thrown out of America and soon his Trump empire will be buried for sure... This much of arrogance and envy of an country where this idiot does not able to prove not even one single spy claim...purely a as idiot... Already in UN council they have isolated this f country now they will learn the lesson very soon that they can't do moral police on entire plannet.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X