அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வை கைவிட திட்டம்? தனித்து களமிறங்க பா.ஜ., புது வியூகம்

Updated : ஆக 18, 2020 | Added : ஆக 16, 2020 | கருத்துகள் (54)
Share
Advertisement
சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வை கழற்றி விட்டு, தனித்து போட்டியிட, பா.ஜ., புது வியூகம் வகுத்துள்ளதாக தெரிகிறது. இதை செயல்படுத்தும் நோக்கில் தான், நேற்று நடந்த அக்கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், மாநில தலைவர் முருகன், பரிசு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.தமிழக சட்டசபைக்கு, இன்னும் எட்டு மாதங்களில், பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், கணிசமான
ADMK, BJP, Murugan, அதிமுக, பாஜ, முருகன்

சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வை கழற்றி விட்டு, தனித்து போட்டியிட, பா.ஜ., புது வியூகம் வகுத்துள்ளதாக தெரிகிறது. இதை செயல்படுத்தும் நோக்கில் தான், நேற்று நடந்த அக்கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், மாநில தலைவர் முருகன், பரிசு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைக்கு, இன்னும் எட்டு மாதங்களில், பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், கணிசமான எம்.எல்.ஏ.,க்களை பெற்று விட வேண்டும் என்பதை இலக்காக வைத்து, பா.ஜ., தேர்தல் பணிகளை துவக்கி உள்ளது. பா.ஜ., மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, நேற்று நடந்தது.

இதில், மாநில தலைவர் முருகன் பேசியதாவது: வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ., சார்பில், 20 முதல், 25 பேர் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,க்களாக சட்டசபைக்கு செல்ல வேண்டும். அதற்கேற்ப, அனைவரும் உழைக்க வேண்டும். வெற்றி பெறுவோம் என்று சொன்னால் போதாது; செயலில் ஈடுபட வேண்டும்.

எம்.ஜி.ஆரை போல, மக்களை ஈர்க்கும் சக்தி, பிரதமர் நரேந்திர மோடியிடம் உள்ளது. மத்திய அரசின் நலத்திட்டங்களை, மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். தமிழக அரசியலில், இன்னும் ஆறு மாதங்களில், மிகப்பெரிய மாற்றம் நிகழப் போகிறது.

வரும் சட்டசபை தேர்தலில், நாம் கை காட்டுபவர்கள் தான், ஆட்சி கட்டிலில் அமரப் போகின்றனர். தமிழகத்தில், பா.ஜ., வேட்பாளரை வெற்றி பெற வைக்கும், மாவட்ட தலைவருக்கு, 'இனோவா கார்' பரிசாக வழங்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.

இது குறித்து, பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது: அ.தி.மு.க., கூட்டணியில் கேட்கும் தொகுதிகளை, அக்கட்சி வழங்கினால், கூட்டணியில் நீடிப்பது; இல்லையெனில் தனித்து போட்டியிடுவது என, பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது.

அதை மனதில் வைத்தே, திராவிட கட்சிகள் பாணியில், கட்சி தலைமை, அதிரடி நடவடிக்கைகளை துவக்கி உள்ளது. அவர்கள் பாணியில் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

சென்னை, தி.நகரில் உள்ள, பா.ஜ., தலைமை அலுவலகத்தில், நேற்று வாஜ்பாய் நினைவு தினத்தை ஒட்டி, அவரது படத்திற்கு முருகன், மலர் துாவி மரியாதை செலுத்தினார். அதன்பின், அவர் கூறுகையில், ''வரும் சட்டசபை தேர்தல் முடிவில், பா.ஜ.,விற்கு கணிசமான எம்.எல்.ஏ.,க்கள் இருப்பர். தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்கிறது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aaaaa - Bbbbbb,இந்தியா
24-ஆக-202013:37:44 IST Report Abuse
Aaaaa தைரியமாக ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளிப்பதாக அறிவிக்கலாம். கொடுக்க வேண்டியிருக்காது
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
23-ஆக-202021:14:42 IST Report Abuse
Natarajan Ramanathan தீயசக்தியான தீயமுகவை அழிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பாஜக அதை கண்டிப்பாக செய்யவேண்டும்.
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
22-ஆக-202010:33:38 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan அருமையான முடிவு. கிரிமினல்கள் நிறைந்த கட்சிகளோடு சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு அவர்களுக்கு ஜால்ரா போடுவதை விட தனித்துநிற்பது நலம். சென்ற தேர்தலில் தனித்து நின்றிருந்தால் சில MPக்கள் கிடைத்து இருப்பார்கள். அதிமுகவுடன் சேரந்ததால் மனம் வெயும்பி பலர்வாக்களிக்கவே இல்லை. எலி வலையானாலும் தனிவலை சிறந்தது அப்போதுதான் தவறுகளைத் தட்டிக் கேட்க முடியும். காங்கிரஸின் அழிவுக்குக் காரணம் கூடாத நட்புதான். அதிக சட்டமன்ற அடிமைகள் திமுகவுக்கு கொடுத்துள்ளனர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X