போலீஸ்செய்திகள்: ராமநாதபுரம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ்செய்திகள்: ராமநாதபுரம்

Added : ஆக 17, 2020
Share
244 மது பாட்டில்கள் பறிமுதல்கமுதி: நேற்று முழு ஊரடங்கால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், கமுதி,அபிராமம், பெருநாழி பகுதியில் அனுமதியின்றி மது விற்றது கண்டுபிடிக்கப் பட்டது. கமுதியில் ராக்கெட்ராஜாவிடமிருந்து 168, அபிராமம் அண்ணாநகரில் வினோத்குமார், சத்தியமூர்த்தியிடம் 40, பெருநாழிகட்டாலங்குளத்தில் செந்துார் பாண்டியனிடம் 36 என, 244 மது பாட்டில்கள் பறிமுதல்

244 மது பாட்டில்கள் பறிமுதல்
கமுதி: நேற்று முழு ஊரடங்கால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், கமுதி,அபிராமம், பெருநாழி பகுதியில் அனுமதியின்றி மது விற்றது கண்டுபிடிக்கப் பட்டது. கமுதியில் ராக்கெட்ராஜாவிடமிருந்து 168, அபிராமம் அண்ணாநகரில் வினோத்குமார், சத்தியமூர்த்தியிடம் 40, பெருநாழிகட்டாலங்குளத்தில் செந்துார் பாண்டியனிடம் 36 என, 244 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

மணல் கொள்ளை

கீழக்கரை: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியில் அனுமதியின்றி டிராக்டர் மூலம் மணல் கொள்ளையில் ஈடுபட்ட மேலவலசையை சேர்ந்த பாலுச்சாமி 55 மீதுகீழக்கரை சிறப்பு எஸ்.ஐ., ரமேஷ் வழக்கு பதிவு செய்தார்.

புகையிலை பறிமுதல்

முதுகுளத்துார்: முதுகுளத்துார்,பேரையூர், கீழத்துாவல், கடலாடி, இளஞ்செம்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட கிராமங்களில் பொதுமுடக்கத்தில் பெட்டிகடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டியிருந்த 200க்கும் மேற்பட்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மூதாட்டி பலி

திருவாடானை: திருவாடானை அருகே மாவூரை சேர்ந்தவர் வெள்ளையம்மாள் 75. நேற்று முன்தினம் தினையத்துார் சாலையில் நடந்து சென்ற இவர் மீது கார் மோதியதில் அதே இடத்தில் பலியானார். திருவாடானை போலீசார் கார் டிரைவரை தேடிவருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X