இமாம் கொலை: 3 பேர் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இமாம் கொலை: 3 பேர் கைது

Added : ஆக 17, 2020 | கருத்துகள் (1)
Share
உளுந்துார்பேட்டை; பள்ளிவாசல் இமாமை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில், சிறுவன் உட்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா, பெரியபட்டு ஏரியில், கடந்த 14ம் தேதி, ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.திருநாவலுார் போலீசார் விசாரித்ததில், கொலை செய்யப்பட்டவர், கடலுார் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த சதாம்

உளுந்துார்பேட்டை; பள்ளிவாசல் இமாமை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில், சிறுவன் உட்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா, பெரியபட்டு ஏரியில், கடந்த 14ம் தேதி, ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.திருநாவலுார் போலீசார் விசாரித்ததில், கொலை செய்யப்பட்டவர், கடலுார் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த சதாம் உசேன், 33, என தெரிந்தது. இவர், பண்ருட்டி எல்.என்.புரம் பள்ளிவாசலில் இமாமாக இருந்துள்ளார்.

தொடர் விசாரணையில், எலவனாசூர்கோட்டை காசிம் அன்சாரி, 35, அஷரப் அலி, 20, மற்றும், 15 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் சேர்ந்து, கொலை செய்தது தெரிந்தது. சிறுவன் உட்பட மூவரை கைது செய்து, மூன்று கத்திகள், ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர்; ஒருவரை தேடி வருகின்றனர்.

எஸ்.பி., ஜியாவுல்ஹக் கூறுகையில், ''சதாம் உசேன், காசிம் அன்சாரி இடையே, பெண் தொடர்பாக தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் உள்ளது. இதனால், காசிம் அன்சாரி மற்றும் கூட்டாளிகள் சேர்ந்து, சதாம் உசேனை ஏரிக்கு அழைத்துச் சென்று, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்,'' என்றார்.கொலையாளிகள் கைது செய்யப்பட்டதை அடுத்து, சதாம் உசேன் உடலை, உறவினர்கள் வாங்கி சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X