நெல்லிக்குப்பம்; கொரோனாவில் தாய், தந்தை இறந்த நிலையில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட அவர்களின் மகள் மற்றும் மாப்பிள்ளைக்கும் கொரோனா உறுதியானதால், உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்தவர், ராமதாஸ், 52; சர்க்கரை ஆலையில் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜேஸ்வரி, 45; பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில், சர்வேயராக பணியாற்றி வந்தார்.இவர், தொற்றால் பாதிக்கப்பட்டு, 9ம் தேதி இறந்தார். ராஜேஸ்வரி இறுதி சடங்கில் கலந்து கொண்ட கணவர் ராமதாஸ், திருமணம் நிச்சயிக்கப்பட்ட அவரது மகள் மற்றும் மாப்பிள்ளை ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
ராமதாஸ் மற்றும் மாப்பிள்ளை, சிதம்பரம் மருத்துவமனையிலும், மகள் குமாரபுரத்தில் உள்ள மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.இந்நிலையில், ராமதாஸ் நேற்று இறந்தார். இதனால், உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE