பொது செய்தி

இந்தியா

பிரணாப் வீடு திரும்புவார்: மகன் அபிஜித் உருக்கம்

Updated : ஆக 17, 2020 | Added : ஆக 17, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி : ''என் தந்தை விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என, எங்கள் குடும்பத்தினர் திடமான நம்பிக்கையுடன் உள்ளோம்,'' என, பிரணாப் முகர்ஜியின் மகன், அபிஜித் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கடந்த, 10ம் தேதி, டில்லியில் உள்ள வீட்டில், கீழே விழுந்ததாக தெரிகிறது. இதனால், தலையில் ரத்த காயம் ஏற்பட்ட நிலையில், ராணுவ மருத்துவமனையில்
Pranab Mukherjee, Pranab Mukherjee's health condition, coronavirus, covid 19, Abhijit Mukherjee

புதுடில்லி : ''என் தந்தை விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என, எங்கள் குடும்பத்தினர் திடமான நம்பிக்கையுடன் உள்ளோம்,'' என, பிரணாப் முகர்ஜியின் மகன், அபிஜித் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கடந்த, 10ம் தேதி, டில்லியில் உள்ள வீட்டில், கீழே விழுந்ததாக தெரிகிறது. இதனால், தலையில் ரத்த காயம் ஏற்பட்ட நிலையில், ராணுவ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு, அவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.

இதையடுத்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், பிரணாப் முகர்ஜியின் மூளையில் ரத்தக்கட்டு இருந்தது தெரிய வந்தது. அறுவை சிகிச்சை மூலம், அந்த ரத்தக்கட்டு அகற்றப்பட்டது. எனினும், பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில், எந்த முன்னேற்றமும் இல்லை. தீவிர சிகிச்சை பிரிவில், வெண்டிலேட்டர் உதவியுடன், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.


latest tamil news



இந்நிலையில், பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, 'டுவிட்டரில்' கூறியிருந்ததாவது: என் தந்தைக்கு, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கிறது. உடல்நிலை முன்னேற்றம் அடைகிறது. அவர் விரைவில் குணமடைந்து, வீடு திரும்புவார் என, எங்கள் குடும்பத்தினர் திடமான நம்பிக்கையுடன் உள்ளோம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
17-ஆக-202012:05:07 IST Report Abuse
N Annamalai முன்னாள் ஜனாதிபதி நலம் பெற வேண்டுகிறேன் .
Rate this:
Cancel
17-ஆக-202007:28:29 IST Report Abuse
ஆப்பு குணமடந்து வீடு திரும்பினால் வாழ்த்துக்கள். இல்லேன்னாலும் நஷ்டம் இல்லை. வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கு இடமேது? எல்லாத்தையும் நன்றாக வாழ்ந்து அனுபவிச்சுட்டார். நாளை எனக்கும் இதேதான் நடக்கும்.
Rate this:
Cancel
modirsshead - ப்ளோரிடா,யூ.எஸ்.ஏ
17-ஆக-202002:09:15 IST Report Abuse
modirsshead பாவம் இவரு அப்பாவி... இப்போ தாகூர் மாத்திரி வேஷம் போட்டுக்கிட்டு அலையுது... அடுத்து வேற என்ன என்ன வேஷம் போடா போகுதோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X