அரசியல் செய்தி

தமிழ்நாடு

கனிமொழியால் எம்.பி.,க்களுக்கு வந்த சிக்கல்'

Updated : ஆக 17, 2020 | Added : ஆக 17, 2020 | கருத்துகள் (94)
Share
Advertisement
ஹிந்தி தெரியாததால் இந்தியரா என, விமான நிலையத்தில் கேட்டு, மத்திய துணை ராணுவ பாதுகாப்பு அதிகாரி அவமானப்படுத்தினார்' என, குற்றம் சாட்டினார், தி.மு.க., - எம்.பி., கனிமொழி. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தர விடப்பட்டது.'உங்களை இந்தியரா எனக் கேட்ட அதிகாரி யார்; அவரை அடையாளம் காட்ட முடியுமா; இது தொடர்பாக புகார் அளியுங்கள்' என, கனிமொழியிடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால்,
Kanimozhi, DMK, Kanimozhi Karunanidhi, MPs

ஹிந்தி தெரியாததால் இந்தியரா என, விமான நிலையத்தில் கேட்டு, மத்திய துணை ராணுவ பாதுகாப்பு அதிகாரி அவமானப்படுத்தினார்' என, குற்றம் சாட்டினார், தி.மு.க., - எம்.பி., கனிமொழி. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தர விடப்பட்டது.

'உங்களை இந்தியரா எனக் கேட்ட அதிகாரி யார்; அவரை அடையாளம் காட்ட முடியுமா; இது தொடர்பாக புகார் அளியுங்கள்' என, கனிமொழியிடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், கனிமொழி எந்த புகாரையும் அளிக்கவில்லை என, டில்லி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தால் பார்லிமென்டின், 700க்கும் மேலான, எம்.பி.,க்களுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது.

'கனிமொழி யார் என, தெரியாததால் தான் இந்த சிக்கல் வந்தது. எனவே, எம்.பி.,க்கள் இனிமேல் விமான நிலையத்தில் தங்கள் அடையாள அட்டையை அணிந்து வர வேண்டும்' என, விமான துறை அமைச்சகம் விரைவில் உத்தரவிட உள்ளதாம். இதனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளோர், எம்.பி.,க்கள் என்ற அடையாளம் தெரிந்து, எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள் என, விளக்கமும் அளிக்கப்பட உள்ளது.


latest tamil news


பார்லிமென்ட் வளாகத்தில், எம்.பி.,க்கள் நுழையும் போது, அவர்களின் முகத்தை அங்குள்ள செக்யூரிட்டி கேமராக்கள் ஸ்கேன் செய்து, உள்ளே செல்ல அனுமதிக்கும். இப்போது கொரோனா பிரச்னையால் அனைவரும் முக கவசம் அணிந்துள்ளனர். இதனால் ஸ்கேன் செய்வதில் பிரச்னை. அதோடு, கனிமொழி விவகாரத்தையும் கருத்தில் கொண்டு, 'இனிமேல், எம்.பி.,க்கள் தங்களுடைய அடையாள அட்டைகளை அணிந்து கொண்டு தான் பார்லிமென்டிற்குள் நுழைய வேண்டும்' என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா முடிவெடுத்துள்ளாராம்.

விரைவில் நடைபெறவுள்ள பார்லிமென்ட் கூட்டத்தொடரில், இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் சொல்லப்படுகிறது. கனிமொழியின் விவகாரம், தங்களுக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டதாக, அங்கலாய்க்கின்றனர், சில எம்.பி.,க்கள்.

Advertisement
வாசகர் கருத்து (94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
23-ஆக-202021:43:44 IST Report Abuse
sundarsvpr கனிமொழி தன்னுடைய அடையாள அட்டையில் தான் தி மு க கட்சியை சார்ந்தவர் என்பதனை குறிப்பிடவேண்டும். இல்லையெனில் கட்சி கூட்ட நுழை வாயிலில் தி மு கவா என்ற கேள்வி எழுப்பினால் அவமதிப்பாய்விடும்.
Rate this:
Cancel
Anbu Tamilan - kulalumpur,மலேஷியா
23-ஆக-202015:37:29 IST Report Abuse
Anbu Tamilan Design of DMK is like that. They will always issues and vanish. Media & People will discuss & fight. DMK will enjoy the fight. People should realize about DMK and Ignore. Just read her birth secret, kattumaram interview about her birth, such a wonderful father & good family. shame
Rate this:
Cancel
pazhaniappan - chennai,இந்தியா
22-ஆக-202018:18:52 IST Report Abuse
pazhaniappan இது ஏதோ கனிமொழி MP என்பதால் இந்தியரா என்று கேட்டது தவறு என்பதாக சொல்ல்லப்படுகிறது , சாதாரண குடிமகனாக இருந்தாலும் , ஹிந்தி தெரியவில்லை என்பதற்காக நீ இந்தியனா என்று கேட்டல் அது தவறு ,இந்தியர்கள் எல்லோருக்கும் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டிய வசியம் இல்லை பல்வேரூ மொழிகளை உள்ளடக்கியது இந்தியா , அதேபோல் பல்வேறு மதங்களை உள்ளடக்கியது ஹிந்து சைவம் வைணவம் , ஜைனம் , பவுத்தம் இப்படி பல மதங்களை உள்ளடக்கியதே ஹிந்து மதம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X