பொது செய்தி

இந்தியா

கேரளாவில் ஒரே நாளில் 1,099 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

Updated : ஆக 17, 2020 | Added : ஆக 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் 1,099 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 28,878 ஆக அதிகரித்து. இதனால் கொரேனாவிலிருந்து மீண்டவர்களின் விகிதம் மாநில அளவில் 65 சதவீதமாக உள்ளது.இருப்பினும் அங்கு ஒரே நாளில் மேலும் 1,530 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் 1,099 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 28,878 ஆக அதிகரித்து. இதனால் கொரேனாவிலிருந்து மீண்டவர்களின் விகிதம் மாநில அளவில் 65 சதவீதமாக உள்ளது.



latest tamil news



இருப்பினும் அங்கு ஒரே நாளில் மேலும் 1,530 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,415 ஆக உயர்ந்தது. மேலும் 10 பேர் பலியானதைத் தொடர்ந்து இதுவரை அங்கு மொத்தம் 156 பேர் கொரோனாவுக்கு பலியாகி விட்டனர்.

அதிகபட்சமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் 519 பேருக்கும், மலப்புரம் மாவட்டத்தில் 221 பேருக்கும், எர்ணாகுளம் மாவட்டத்தில் 123 பேருக்கும், கோழிக்கோடு மாவட்டத்தில் 118 பேருக்கும், கோட்டயம் மாவட்டத்தில் 100 பேருக்கும், ஆலப்புழா மாவட்டத்தில் 86 பேருக்கும், கொல்லம் மாவட்டத்தில் 81 பேருக்கும், கண்ணூர் மாவட்டத்தில் 52 பேருக்கும், வயாநாடு மாவட்டத்தில் 49 பேருக்கும், காசர்கோடு மாவட்டத்தில் 48 பேருக்கும், பத்தணம்திட்டா மாவட்டத்தில் 44 பேருக்கும், இடுக்கி மாவட்டத்தில் 30 பேருக்கும், பாலக்காடு மாவட்டம் மற்றும் திருச்சூரில் 29 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


latest tamil news



மாநில அளவில் மொத்தம் 1,62,217 பேர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். அவர்களில் 1,48,793 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், தனிமை வார்டுகளிலும் இருந்து வருகின்றனர். 15,310 பேருக்கு சிகிச்சை தேவைப்படுவதால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balasubramanian ramanathan - vadakupatti,இந்தியா
17-ஆக-202007:18:37 IST Report Abuse
balasubramanian ramanathan கேரளாவை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் 10 நாட்களாக ஆந்திராவை அம்போன்னு கை வுட்டுடாங்களே ஆப்பு நாதா .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X