'டைம்ஸ்' சதுக்கத்தில் முதல்முறையாக ஏற்றப்பட்டது இந்திய தேசிய கொடி

Updated : ஆக 17, 2020 | Added : ஆக 17, 2020 | கருத்துகள் (4) | |
Advertisement
நியூயார்க்: இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற, 'டைம்ஸ்' சதுக்கத்தில், முதல்முறையாக மூவர்ண கொடி ஏற்றப்பட்டுள்ளது.இந்தியாவின், 74வது சுதந்திர தினம், நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் உள்ள இந்திய வம்சாவளியினரும், இதை சிறப்பாக கொண்டாடினர். இதை முன்னிட்டு, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள,

நியூயார்க்: இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற, 'டைம்ஸ்' சதுக்கத்தில், முதல்முறையாக மூவர்ண கொடி ஏற்றப்பட்டுள்ளது.இந்தியாவின், 74வது சுதந்திர தினம், நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.



latest tamil news



இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் உள்ள இந்திய வம்சாவளியினரும், இதை சிறப்பாக கொண்டாடினர். இதை முன்னிட்டு, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள, புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில், இந்திய தேசியக் கொடி நேற்று முன்தினம் ஏற்றப்பட்டது. இந்திய துாதர் ரந்தீர் ஜெய்ஸ்வால், மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார். டைம்ஸ் சதுக்கத்தில், இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது இதுவே முதன்முறை. இந்த விழாவில், இந்திய துாதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.இதில், பாரம்பரிய உடை அணிந்தவாறு பங்கேற்ற இந்திய வம்சாவளியினர், 'ஜெய் ஹிந்த், பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம்' உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். எப்.ஐ.ஏ., எனப்படும் அமெரிக்காவில் உள்ள இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு, இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது.


latest tamil news



விழாவில் பேசிய இந்திய துாதர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வது குறித்தும், புதிய இந்தியாவை கட்டமைப்பது குறித்தும், பிரதமர் மோடி கோடிட்டு காட்டியுள்ளார். அந்த குறிக்கோளுடன், நம் நாட்டை முன்னெடுத்துச் செல்ல, நாம் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும். டைம்ஸ் சதுக்கத்தில், கொடி ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்துள்ள எப்.ஐ.ஏ., அமைப்பிற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வு மூலம், வரலாறு உருவாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
17-ஆக-202014:08:43 IST Report Abuse
Vijay D Ratnam அமெரிக்காவில் இந்தியர்கள், ஹிந்துக்கள் கடந்த இருபது வருடங்களில் பன்மடங்கு பெருகி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பிராமண சமூகம் மிகப்பெரிய அளவில் குடியேறி இருக்கிறது. அவர்கள் இல்லாத துறையே இல்லை. நம் இந்தியாவில் கோட்டா அயோக்கியத்தனம் தலைவிரித்தாடுவதால் தகுதி திறமை உள்ளவர்களின் டார்கெட் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவாக இருக்கிறது. ஜெர்மனி, ஃபிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, ஜப்பான் என்று இந்தியர்கள் அதிகளவில் இமிக்ரேட் ஆகிறார்கள். அதிலும் இந்தியர்கள் இல்லாத இடமே அமெரிக்காவில் இல்லை என்ற நிலை வந்திருக்கிறது. பயங்கரவாதம், மதப்பிரச்சாரம், போதை மருந்து, கடத்தல், திருட்டு, ஹவாலா போன்ற சமூக விரோத செயல்கள் எதுவும் செய்யாத இந்தியர்களை அமெரிக்கர்கள் பணிக்கு அமர்த்த விரும்புவதால் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நல்ல ஆங்கில அறிவு, கல்வி, மரியாதையாக டீசண்ட்டாக நடந்துகொள்வது, கொடுக்கும் சம்பளத்துக்கு மேல் விசுவாசத்தோடு உழைக்கும் இந்தியர்களை அமெரிக்கர்கள் விரும்புகிறார்கள். இதை மற்ற நாட்டு குடியேறிகளிடம் அமெரிக்கர்கள் துளி கூட எதிர்பார்க்க முடியாது.
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
17-ஆக-202008:30:18 IST Report Abuse
M.COM.N.K.K. இந்தியாவிற்கு மிகசிறந்த கௌரவமாக பார்க்கிறோம்
Rate this:
Cancel
Raman -  ( Posted via: Dinamalar Android App )
17-ஆக-202007:33:07 IST Report Abuse
Raman A great news
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X