'மத்திய பிரதேச கவர்னர் பதவியா; பயந்து ஓடும் சீனியர்கள்

Updated : ஆக 17, 2020 | Added : ஆக 17, 2020 | கருத்துகள் (8) | |
Advertisement
ஏதாவது பதவி கிடைக்காதா என, பா.ஜ., தலைவர்கள் ஏங்கி வரும் நிலையில், 'மத்திய பிரதேச கவர்னர் பதவியா; ஆளை விடுங்கள்' என, சீனியர் தலைவர்கள் ஓட்டம் பிடிக்கின்றனராம். ம.பி., கவர்னராக இருந்த லால்ஜி டாண்டன் சமீபத்தில் காலமானார்.இந்த பதவிக்கு தயாரா என, பல சீனியர் தலைவர்களிடம், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அபிப்ராயம் கேட்டுள்ளனர். ஆனால், அத்தனை பேரும்,

ஏதாவது பதவி கிடைக்காதா என, பா.ஜ., தலைவர்கள் ஏங்கி வரும் நிலையில், 'மத்திய பிரதேச கவர்னர் பதவியா; ஆளை விடுங்கள்' என, சீனியர் தலைவர்கள் ஓட்டம் பிடிக்கின்றனராம். ம.பி., கவர்னராக இருந்த லால்ஜி டாண்டன் சமீபத்தில் காலமானார்.



latest tamil news




இந்த பதவிக்கு தயாரா என, பல சீனியர் தலைவர்களிடம், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அபிப்ராயம் கேட்டுள்ளனர். ஆனால், அத்தனை பேரும், சொல்லி வைத்தாற்போல, நழுவிக் கொண்டனர். உத்தர பிரதேசத்தில், பா.ஜ., தலைவராக இருந்த, லஷ்மிகாந்த், ம.பி., கவர்னராக ஒப்புக் கொண்டதாக செய்தி அடிபட்டது. ஆனால், லஷ்மிகாந்த், 'இது சுத்த பொய்' என, மறுப்பு தெரிவித்துவிட்டார்.


latest tamil news




மத்திய பிரதேச கவர்னர்களாக இருந்த ராம் பிரகாஷ் யாதவ் மற்றும் ராம் நரேஷ் யாதவ் ஆகியோர் பதவியில் இருந்த போது காலமாயினர். இதை சுட்டிக்காட்டி தான், பா.ஜ., தலைவர்கள் கிசுகிசுத்துக் கொள்கின்றனர். 'ம.பி., தலைநகர் போபாலில் உள்ள ராஜ்பவன் ராசியானது அல்ல; ஏதோ சாபத்தில் உள்ளது' என, விவாதித்துக் கொள்கின்றனர். 'ம.பி., தவிர வேறு எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் கவர்னராக செல்லத் தயார்; ஆனால், ம.பி., வேண்டாம்' என, பிடிவாதமாக உள்ளனராம், சீனியர் தலைவர்கள்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
17-ஆக-202017:17:31 IST Report Abuse
vnatarajan கவர்னர் அறையை ஜோதிடரிடம் கேட்டு வாஸ்து பிரகாரம் மாற்றிக்கொள்ளவேண்டியதுதானே.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-ஆக-202015:14:16 IST Report Abuse
தமிழவேல் வயசானதை எல்லாம் ஓய்வகத்தில போட்டுட்டு.........................
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-ஆக-202011:31:41 IST Report Abuse
Malick Raja ஐந்தறிவின் வெளிப்பாடுகளில் இதெல்லாம் சகஜமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X