பொது செய்தி

தமிழ்நாடு

பெண் போலீஸ் அதிகாரிக்கு 'சல்யூட்' அடித்த திருவண்ணாமலை கலெக்டர்

Updated : ஆக 17, 2020 | Added : ஆக 17, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் பெண் போலீஸ் அதிகாரியை பாராட்டி பரிசு வழங்கிய கலெக்டர் கந்தசாமி திடீரென மேடையிலிருந்து கீழறங்கி, அவருக்கு 'சல்யூட்' அடித்தது அனைவரையும் ஆச்சர்யபட வைத்தது.நேற்று முன்தினம் சுதந்திர தின விழா மாவட்ட நிர்வாகம் சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு கலெக்டர் பாராட்டும்
திருவண்ணாமலை, கலெக்டர், சல்யூட், பெண் போலீஸ் அதிகாரி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் பெண் போலீஸ் அதிகாரியை பாராட்டி பரிசு வழங்கிய கலெக்டர் கந்தசாமி திடீரென மேடையிலிருந்து கீழறங்கி, அவருக்கு 'சல்யூட்' அடித்தது அனைவரையும் ஆச்சர்யபட வைத்தது.

நேற்று முன்தினம் சுதந்திர தின விழா மாவட்ட நிர்வாகம் சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு கலெக்டர் பாராட்டும் சான்றிதழும் வழங்கினார். அப்போது தொள்ளார் போலீஸ் ஸ்டேசன் அதிகாரி அல்லிராணிக்கு பரிசு வழங்கிய கலெக்டர், அல்லி ராணியை மேடையில் ஏறச்சொன்னார். உடன் மேடையிலிருந்து கீழறங்கிய கலெக்டர், அல்லிராணியை பார்த்து 'சல்யூட்' அடித்து, தனது பாராட்டை தெரிவித்தார். கலெக்டரின் செயல் அங்கிருந்த பொதுமக்கள், அதிகாரிகளை ஆச்சர்யபட வைத்தது. இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.


latest tamil news


இது குறித்து விசாரணையில், கடந்த ஜூன் 10ஆம் தேதி, எரிப்பட்டு கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் மாற்றுத்திறனாளி உயிரிழந்து கிடப்பதாக தெள்ளார் போலீஸ் ஸ்டேசனுக்கு புகார் வந்தது. சம்பவ இடத்திற்கு அல்லிராணி சென்றார். கொரோனா அச்சம் காரணமாக உயிரிழந்தவர் அருகில் செல்ல பலரும் தயங்கினர். அதனை பொருட்படுத்தாமல் இறந்த உடலை ஒருவரின் உதவியோடு தானே தூக்கி ஆட்டோவில் வைத்து பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.


latest tamil news



பிரேதப் பரிசோதனையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது கண்டறியப்பட்டது. இதற்கிடையே, அல்லிராணியின் துணிச்சலான இந்த செயல் பாராட்டுகளைப் பெற்று வந்தது. இதையறிந்த கலெக்டர் கந்தாமி, சுதந்திர தினத்தன்று அல்லிராணியின் செயலை பாராட்டி அவருக்குப் பாராட்டு வழங்கப்பட்டது. கலெக்டர் கந்தசாமியின் இந்த செயல் திருவண்ணாமலை போலீசார் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ulaganathan.maa - Thiruneelakudi ,இந்தியா
17-ஆக-202015:01:01 IST Report Abuse
ulaganathan.maa ஆட்சியர் கந்தசாமி நிர்வாகத்தில் பல புரட்சிகளை அறிமுகம் செய்தவர் செய்பவர். அதுபோலவே பெண்ணென்ன ஆணென்ன என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல், மேடையிலிருந்து இறங்கிவந்து வணக்கம் செய்தது அவருடைய பெருந்தன்மை. எத்தனை பேருக்கு இந்த கண்ணியம் வரும்?
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
17-ஆக-202012:42:49 IST Report Abuse
RaajaRaja Cholan இதை போல் அணைத்து அரசு அதிகாரிகளும் சமூக அக்கறையோடு இருந்தால் இந்த இந்திய திருநாட்டை மிஞ்ச ஒருத்தன் கிடையாது அண்ட் மார்தட்டி சொல்லலாம் . இந்த மாதிரி செய்திகள் நிறைய வந்தால் நன்றாக இருக்கும் . மன இறுக்கம் குறையும்
Rate this:
Cancel
17-ஆக-202012:34:31 IST Report Abuse
ரமணன் நல்ல அதிகாரிகளை பார்ப்பது அரிதான காலத்தில் அருமையான நிகழ்வு வாழ்த்துகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X