பொது செய்தி

இந்தியா

பிளாஸ்மா தானம்; கால்களை கழுவிய துணை சபாநாயகர்

Updated : ஆக 17, 2020 | Added : ஆக 17, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
திஸ்பூர்: அசாம் துணை சபாநாயகர், தனக்கு பிளாஸ்மா தானம் அளித்தவரின் கால்களை கழுவிய சம்பவம் அரங்கேறியுள்ளது.அசாம் சட்டசபை துணை சபாநாயகராக இருப்பவர் அமினுல் ஹக் லஸ்கர். இவருக்கு கடந்த ஜூலை 28ம் தேதி கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அவருக்கு மூச்சுத்திணறலும் இருந்ததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று
Assam, assam Deputy Speaker, Plasma Donation, coronavirus, covid 19, அசாம், துணை சபாநாயகர், பிளாஸ்மா, தானம், கால் கழுவுதல்

திஸ்பூர்: அசாம் துணை சபாநாயகர், தனக்கு பிளாஸ்மா தானம் அளித்தவரின் கால்களை கழுவிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

அசாம் சட்டசபை துணை சபாநாயகராக இருப்பவர் அமினுல் ஹக் லஸ்கர். இவருக்கு கடந்த ஜூலை 28ம் தேதி கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அவருக்கு மூச்சுத்திணறலும் இருந்ததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள அந்த மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி இல்லாததால், அவரது சிகிச்சைக்காக கவுகாத்தியிலிருந்து பிளாஸ்மா கொண்டு வர வேண்டியிருந்தது.


latest tamil newsபிளாஸ்மா தெரபி சிகிச்சையின் விளைவாக பூரண நலத்துடன் குணமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி லஸ்கர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து தனக்கு பிளாஸ்மா தானம் செய்த நபிதுல் இஸ்லாம் என்பவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக, அவருடைய கால்களை கழுவி மரியாதையை செய்தார்.
இதுகுறித்து துணை சபாநாயகர் அமினுல் ஹக் லஸ்கர் கூறியதாவது: பிளாஸ்மா நன்கொடையாளர்கள் மனித உயிர்களை காக்கிறார்கள். நான் கொரோனா தொற்றுக்குள்ளான போது, அறிமுகமில்லாத ஒருவரால் நன்கொடை செய்யப்பட்ட பிளாஸ்மா, என் உயிரைக் காப்பாற்றியது. நான் கடவுளை நேரில் பார்த்ததில்லை. ஆனால் பிளாஸ்மா தானம் செய்தவரின் வழியாக கடவுளை காண்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ulaganathan.maa - Thiruneelakudi ,இந்தியா
17-ஆக-202014:53:57 IST Report Abuse
ulaganathan.maa மனித நேயம் மரித்துப்போகாமல்,இவர் போன்றவர்கள் காப்பாற்றி வருகிறார்கள்.நெஞ்சம் நெகிழ்கிறது.தானம் கொடுத்தவருக்கு பெற்றுக்கொண்டவர்க்கும் வாழ்த்துகள்.
Rate this:
Cancel
pren -  ( Posted via: Dinamalar Android App )
17-ஆக-202013:55:12 IST Report Abuse
pren பண்ணது சிறந்த செய்யலா என்று எனக்கு தெரியல..... .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X