பிளாஸ்மா தானம்; கால்களை கழுவிய துணை சபாநாயகர்| Assam Deputy Speaker washes plasma donor's feet to honour him | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பிளாஸ்மா தானம்; கால்களை கழுவிய துணை சபாநாயகர்

Updated : ஆக 17, 2020 | Added : ஆக 17, 2020 | கருத்துகள் (2)
Share
திஸ்பூர்: அசாம் துணை சபாநாயகர், தனக்கு பிளாஸ்மா தானம் அளித்தவரின் கால்களை கழுவிய சம்பவம் அரங்கேறியுள்ளது.அசாம் சட்டசபை துணை சபாநாயகராக இருப்பவர் அமினுல் ஹக் லஸ்கர். இவருக்கு கடந்த ஜூலை 28ம் தேதி கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அவருக்கு மூச்சுத்திணறலும் இருந்ததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று
Assam, assam Deputy Speaker, Plasma Donation, coronavirus, covid 19, அசாம், துணை சபாநாயகர், பிளாஸ்மா, தானம், கால் கழுவுதல்

திஸ்பூர்: அசாம் துணை சபாநாயகர், தனக்கு பிளாஸ்மா தானம் அளித்தவரின் கால்களை கழுவிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

அசாம் சட்டசபை துணை சபாநாயகராக இருப்பவர் அமினுல் ஹக் லஸ்கர். இவருக்கு கடந்த ஜூலை 28ம் தேதி கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அவருக்கு மூச்சுத்திணறலும் இருந்ததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள அந்த மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி இல்லாததால், அவரது சிகிச்சைக்காக கவுகாத்தியிலிருந்து பிளாஸ்மா கொண்டு வர வேண்டியிருந்தது.


latest tamil news



பிளாஸ்மா தெரபி சிகிச்சையின் விளைவாக பூரண நலத்துடன் குணமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி லஸ்கர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து தனக்கு பிளாஸ்மா தானம் செய்த நபிதுல் இஸ்லாம் என்பவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக, அவருடைய கால்களை கழுவி மரியாதையை செய்தார்.
இதுகுறித்து துணை சபாநாயகர் அமினுல் ஹக் லஸ்கர் கூறியதாவது: பிளாஸ்மா நன்கொடையாளர்கள் மனித உயிர்களை காக்கிறார்கள். நான் கொரோனா தொற்றுக்குள்ளான போது, அறிமுகமில்லாத ஒருவரால் நன்கொடை செய்யப்பட்ட பிளாஸ்மா, என் உயிரைக் காப்பாற்றியது. நான் கடவுளை நேரில் பார்த்ததில்லை. ஆனால் பிளாஸ்மா தானம் செய்தவரின் வழியாக கடவுளை காண்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X