பொது செய்தி

இந்தியா

சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள்: இந்தியாவில் 1.5 பில்லியன் டாலர் முதலீடு!

Updated : ஆக 17, 2020 | Added : ஆக 17, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி: சீனாவில் இருந்து வெளியேறும், 24க்கும் மேற்பட்ட மொபைல்போன் தயாரிப்பு நிறுவனங்கள், இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க, 1.5 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளன. அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போர் மற்றும் கொரோனா தொற்று காரணமாக, சீனாவில் இருந்து வெளியேற பல்வேறு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. குறிப்பாக, சீனாவில் இருந்து வெளியேறும் பன்னாட்டு

புதுடில்லி: சீனாவில் இருந்து வெளியேறும், 24க்கும் மேற்பட்ட மொபைல்போன் தயாரிப்பு நிறுவனங்கள், இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க, 1.5 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளன.



latest tamil news




அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போர் மற்றும் கொரோனா தொற்று காரணமாக, சீனாவில் இருந்து வெளியேற பல்வேறு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. குறிப்பாக, சீனாவில் இருந்து வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டை ஈர்ப்பதில், வியட்நாம், கம்போடியா, மியான்மர், பங்களாதேஷ், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் பலன் பெற்றுள்ளதாக, 'ஸ்டாண்டர்டு சார்ட்டட் சர்வே'யில் தெரியவந்துள்ளது.


latest tamil news



இந்நிலையில், 'இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், மொபைல்போன் தயாரிப்பு மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்கும் நிறுவனங்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதிகரிக்கும் விற்பனையில் 4 முதல் 6 சதவீத ஊக்கத்தொகை சலுகை பெற தகுதியுடையவை' என, கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி அறிவித்தார். '153 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் உற்பத்திக்கு இந்த அறிவிப்பு வழிவகுப்பதுடன், நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் ஒரு மில்லியன் வேலைகளை உருவாக்க முடியும்' என, மத்திய அரசு தெரிவித்திருந்தது.


latest tamil news



இந்நிலையில், தென்கொரியாவின் சாம்சங், அமெரிக்காவின் ஆப்பிள் போன்களை தயாரிக்கும் பாக்ஸ்கான், தைவானை சேர்ந்த விஸ்ட்ரான் கார்ப் மற்றும் பெகாட்ரான் கார்ப் இந்தியா ஆகிய நிறுவனங்கள், இந்தியாவில் ஸ்மார்ட் போன் தொழிற்சாலை அமைப்பதற்கு 1.5 பில்லியன் டாலர் முதலீடு செய்வதை உறுதி செய்துள்ளன.

இதனிடையே, மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஊக்க சலுகை வழங்குவதை நீட்டித்துள்ள மத்திய அரசு, வாகனங்கள், ஜவுளி மற்றும் உணவு பதப்படுத்துதல் துறைகளுக்கு ஊக்கச் சலுகையை விரிவுப்படுத்த ஆலோசித்து வருகிறது. 'இது ஐந்து ஆண்டுகளில் 55 பில்லியன் டாலர் கூடுதல் முதலீட்டை கொண்டு வருவதோடு, இந்தியாவின் பொருளாதார உற்பத்தியில் 0.5 சதவீதத்தை சேர்க்கும்' என, 'கிரெடிட் சூயிஸ் குழும ஏ.ஜி.,யின், நீல்காந்த் மிஸ்ரா தலைமையிலான ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


latest tamil news



'மேக் இன் இந்தியா திட்டத்தின் இலக்கை எட்டும் வகையில், தற்போதைய 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உற்பத்தி அதிகரிக்கும். ஆசியாவில் மிக குறைந்த வரிவிதிப்பு கொண்ட நாடாக இந்தியா திகழ்ந்து வரும் நிலையில், புதிய முதலீடுகளை ஈர்க்க முடியும். இது மேக் இன் இந்தியா திட்டத்திற்கு கிடைத்த பெரிய வெற்றி' என, போபா செக்யூரிட்டிசின் ஆய்வாளர் அமிஷ் ஷா தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbu - Kolkata,இந்தியா
17-ஆக-202019:07:51 IST Report Abuse
Anbu நம்ம அரசியல்வியாதிகள் கேட்கும் கமிஷனை அவங்க குடுக்க ரெடியா ???? ......
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
17-ஆக-202018:15:05 IST Report Abuse
konanki இந்த நிறுவனங்கள் தமிழகத்தில் வரப் போவதில்லை. மற்ற மாநிலங்களில் வரப் போகிறது. தமிழ் நாடு தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் எல்லா மக்களும் ஹிந்தி படிக்கிறார்கள்.ஆகவே ஹிந்தி படித்தவர்களுக்கு வேலை. தமிழக ஏழை எளிய மக்கள் உங்கள் அரசியல் கூட்டங்களில் 200 ரூபாய்க்கு சாராயத்திற்கு வீழும் விட்டில் பூச்சிகள்.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
17-ஆக-202018:04:26 IST Report Abuse
konanki இந்த நிறுவனங்கள் எதுவுமே தமிழ் நாட்டிற்கு வராது. அதனால் தமிழகத்தில் காற்று/தண்ணீர்/நில மாசு பிரச்சனை எதுவுமே வராது. தமிழர்கள் வழக்கம் போல் சுற்று சூழலை பாதுகாக்கும்/மேம்படுத்தும் மணல் திருட்டு, கனிமங்கள் கொள்ளை,நீரை உறிஞ்சும் சாராய ஆலைகள் அபிவிருத்தி,நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு, பஞ்சமி நிலம் திருட்டு, கோவில் நிலம் அபகரிப்பு போன்ற செயல்களை ஆளும் கட்சி எதிர் கட்சிகள் சமபங்கு டன் தொடர்ந்து செய்யலாம். ஊடகங்கள் சேனல்கள் நெறியாளர்கள் சமூக ஆர்வலர்கள் இடது சாரி சிந்தனையாளர்கள் அறிவு ஜிவிகள் காசுக்காக டிவியில் பொய் பிரச்சாரம் செய்யும் ஓலி பெருக்கிகள் எல்லாம் முழு ஆதரவு தரும்.
Rate this:
kanchi siva - chennai,இந்தியா
17-ஆக-202019:26:17 IST Report Abuse
kanchi sivaஅருமை சார் ....நல்ல கருத்து...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X