புதுடில்லி: மலேசியாவில் கொரோனா வைரஸின் ஓர் புதிய பிரிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சாதாரண கொரோனா வைரஸைக் காட்டிலும் பத்து மடங்கு வீரியம் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இதுவரை கொரோனாவுக்கு ஏழரை லட்சம்பேர் உலகம் முழுவதும் பலியாகியுள்ளனர். இந்நிலையில் தெற்கு ஆசிய நாடுகளில் வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸ், வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தாக்கம் நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருகிறது. கொரோனா வைரஸில் பல பிரிவுகள் உண்டு. தீவிரமான பிரிவு உயிரைப் பறிக்கும் அளவுக்கு வீரியம் உடையது. அதேசமயத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாத மிதமான பிரிவும் உண்டு.
தற்போது மலேசியாவில் இந்தியாவில் இருப்பதைக் காட்டிலும் 10 மடங்கு வீரியம் உள்ள கொரோனா பிரிவு தாக்கியுள்ளதாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர். இவ்வாறாக மாற்றம் அடைந்துகொண்டே இருக்கும் கொரோனாவின் தன்மையால் இதற்கு நிரந்தரமான ஒர் தடுப்புமருந்து கண்டுபிடிப்பது என்பது மிகவும் சிரமமான விஷயமாக உள்ளது.

இதனாலேயே உலக விஞ்ஞானிகள் குழம்பிப் போயுள்ளனர். டி614-ஜி என்ற இந்த நியூட்ரிசன் மலேசியாவில் 45 பேரை தாக்கியுள்ளது. இந்தியாவில் இருந்து விமானம் மூலமாக மலேசியா திரும்பிய உணவக முதலாளி ஒருவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். ஆனால் அவர்மூலமாக அவரது உற்றார் உறவினர் நண்பர்கள் ஆகியோருக்கு பரவி தற்போது இந்த பிரிவு 45 பேரை தாக்கியுள்ளது. ஊரடங்கை சரியாக பின்பற்ற இந்த குணமாக முதலாளி 5 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நோர் ஹிஷாம் அப்துல்லா பொது மருத்துவமனை இயக்குனர் இதுகுறித்து கூறுகையில் இதுவரை கொரோனாவுக்குக் கண்டுபிடித்த தடுப்பு மருந்து இந்தவகை கொரோனாவைப் போக்க பயனற்றது என தெரிவித்தார். ஆகவே இந்தியர்கள் கொரோனாவை குறைவாக எடைபோடக்கூடாது. தற்போது கொரோனாவின் வீரியமற்ற பிரிவு நம்மைத் தாக்கவந்தால் அலட்சியமாக இருக்காமல் ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்கவேண்டும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE