பொது செய்தி

தமிழ்நாடு

நிதியுதவி அளித்த பிச்சைக்காரருக்கு விருது வழங்கினார் கலெக்டர்

Updated : ஆக 18, 2020 | Added : ஆக 17, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
பிச்சைக்காரர், நிதியுதவி, சுதந்திரதின விருது, கலெக்டர்

மதுரை: மதுரையில், பிச்சைக்காரர் ஒருவர், எட்டு முறை, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு, 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிய நிலையில், அவருக்கு சுதந்திரதின விருது அறிவிக்கப்பட்டது. ஆக.,15ல் விருது வழங்க அவரை தேடிய போது கிடைக்காத அவர், விஷயமறிந்து இன்று வந்து தனது விருதை கலெக்டரிடம் பெற்றுக் கொண்டார்.
துாத்துக்குடி மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்தவர் பூல் பாண்டியன், 65; திருமணம் முடிந்த சில ஆண்டுகளில், வேலை தேடி மும்பை சென்றார். வேலை கிடைக்காததால், பிச்சை எடுக்க துவங்கினார். ஊர் திரும்பிய அவரை, குடும்பத்தினர் ஒதுக்கினர். இதனால், தொடர்ந்து பிச்சை எடுத்தார். செலவு போக மீத பணத்தை, கல்வி நிறுவனங்களுக்கு சேர், டேபிள் வாங்க வழங்கியுள்ளார்.


latest tamil news



தற்போது, மதுரையில் தங்கியிருக்கும் இவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, ஏற்கனவே, 8 முறை தலா, 10 ஆயிரம் ரூபாயை, கலெக்டர் வினய்யிடம் வழங்கியுள்ளார். இவரை கவுரவிக்கும் வகையில், சுதந்திர தின விழாவில் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மதுரை முழுவதும் அவரை அதிகாரிகள் தேடிய போதும், கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், சுதந்திர தின விழாவில் அவருக்கு விருது வழங்கப்படவில்லை.

இந்நிலையில், விஷயமறிந்து இன்று கலெக்டர் அலுவலகம் வந்த அவருக்கு, அறிவித்த விருதை வழங்கி கலெக்டர் கவுரவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Thoothukudi,இந்தியா
18-ஆக-202016:31:34 IST Report Abuse
Raja ஊழல் செய்து கொள்ளை அடித்தவர்களுக்கு கூட கொடுக்க மனம் வரவில்லை. இவரைப் பாராட்ட வேண்டும்.
Rate this:
Cancel
palani kuppuswamy - sanjose,யூ.எஸ்.ஏ
18-ஆக-202005:50:31 IST Report Abuse
palani kuppuswamy பிச்சைக்காரர் என்று கூறுவது தவறு ....நாடு மக்களுக்ககாக பெரிய மனது கொண்டு பெரிய மாமனிதர் ....ஊர்வலம் மாநாடு ...என்று நடத்தி ...உண்டி குலுக்கி ... கும்ப நிதி சேர்க்கும் அரசியல் வியாதிகளுக்கு மத்தியில் ஒரு தியாக சுடர்,...வாழ்க உம் தொண்டு.
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
17-ஆக-202023:10:32 IST Report Abuse
Siva ஐயா பூல் பாண்டியை போல வேலை இல்லை பிச்சை எடுத்தேன் என்று சொல்ல மன தைரியம் வேண்டும். இதற்கு முன் உழைக்க வக்கில்லை ஊர்திரும்பணும் என்று பிச்சை எடுத்தேன் என்று வாக்குமூலம் தந்த ஐயா அவர்களுக்கு தமிழ் நாடு முழுவதும் சிலை மாலை மரியாதை. எனவே உங்களுக்கும் சிலை வைக்க வாய்ப்பு இருக்கு....... வாழ்க தமிழன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X