பீஜிங் : 'இந்தியாவுடனான கருத்து வேறுபாட்டை களைந்து, இருநாட்டு சுமுக உறவை வலுவாக்கும் முயற்சிக்கு தயார்' என, சீனா தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, தன் சுதந்திர தின விழா உரையில், 'எல்லையில் ஆக்கிரமிப்பு வாயிலாக, இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைக்க முயல்பவர்களுக்கு, நம் பாதுகாப்பு வீரர்கள், தக்க பதிலடி தருவர்' என பேசினார்.
இது குறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், ஸாவோ லிஜியான் கூறியதாவது: பிரதமர் மோடியின் பேச்சை கேட்டோம். சீனாவும், இந்தியாவும், 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட, இரு நெருங்கிய நாடுகள். எங்களுக்குள் சுமுக உறவு மலர்வது, இரு நாடுகளில் மட்டுமின்றி, உலக நாடுகள் முழுதும், அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் உருவாக்கும்.
எனவே, கருத்து வேறுபாடுகளை களைந்து, அரசியல் ரீதியிலான சுமுக நம்பிக்கையை உருவாக்கி, இரு நாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்ட, சீனா தயாராக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE