பஹ்ரைனில் விநாயகர் சிலைகளை உடைத்த பெண்; நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவு

Updated : ஆக 17, 2020 | Added : ஆக 17, 2020 | கருத்துகள் (54)
Share
Advertisement
Bahrain, Lord Ganesh, idols, desecrating

மனாமா: பஹ்ரைனில் கடை ஒன்றில், புர்கா அணிந்த பெண் ஒருவர், விநாயகர் சிலைகளை உடைத்து வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது மத அடையாளங்களை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள ஜூபைர் பகுதியில் உள்ள ஒரு கடையில், புர்கா அணிந்த இரு பெண்கள், அங்கு அடுக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் தூக்கி போட்டு உடைத்துள்ளனர். கடையில் ஹிந்து கடவுள்களை ஏன் வைக்கிறீர்கள் என்றும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை கண்ட ஹிந்துக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த பஹ்ரைன் போலீசார் சிலைகளை உடைத்த 54 வயது பெண் மீது வழக்கு பதிந்து நோட்டீஸ் அனுப்பினர். அவரும் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து அப்பெண் மீது, சேதம் விளைவித்தது, மத அடையாளத்தை பகிரமங்கமாக அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டார். மேலும் நீதிமன்றத்தால் அவர் விசாரிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இச்சம்பவம் குறித்து பஹ்ரைன் மன்னரின் ஆலோசகரும், முன்னாள் வெளியுறவு துறை அமைச்சருமான காலித் அல் கலீபா கூறியதாவது: அப்பெண்ணின் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. மத அடையாளங்களை சேதப்படுத்தியது குற்றம். இது எங்கள் நாட்டு மக்களின் இயல்பு கிடையாது. அவர் காட்டிய வெறுப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. பஹ்ரைனில் அனைத்து மத மக்களும் ஒற்றுமையாக இணைந்து வாழ்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
21-ஆக-202011:30:13 IST Report Abuse
Muthukrishnan,Ram அந்த பெண்ணை முதலில் ஒரு நல்ல மெண்டல் ஆஸ்பத்திரியில் வைத்து ட்ரீட்மெண்ட் எடுத்து அதன் பின் நல்ல தண்டனையாக கொடுக்க வேண்டும். அவள் அந்த நாட்டுக்கு சொந்தக்காரி அல்ல என்று நினைக்கிறேன். பிழைக்க வந்த வந்தேரியாகத்தான் இருக்க வேண்டும்.
Rate this:
chinnathambi 2 - chennai,இந்தியா
22-ஆக-202021:52:11 IST Report Abuse
chinnathambi 2இந்த மாதிரி பெண் வெளி நாட்டில் செய்தால் அங்கு போலீஸ் மற்றும் நீதித்துறை நடவடிக்கை எடுக்கும் அது தமிழ் நாட்டில் செய்தால் அவருக்கு பாராட்டும், அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கவும் செய்யும். அந்த பெண் பஹ்ரினை திராவிட நாடு என்று நினைத்துவிட்டார் போல...
Rate this:
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
19-ஆக-202002:40:13 IST Report Abuse
கதிரழகன், SSLC வஹ்ஹாபி அரபி மிகவும் மோசமானவன். அவங்களுக்கு செக் வெக்கத்தான் மித்த அரபி நாடு எல்லாம் இந்து மதத்துக்கு அனுமதி தராக. "எங்க மத நூல் எல்லாம் உள்ளடக்கியதாக்கும்" ன்னு குண்டு சட்டியில் குதிரை ஒட்டினவங்க பய புள்ளைங்க அசந்து போயி நீக்கிறாக. "கல்லையும் பசுவையும் கும்பிடற மட பசங்க ன்னு நெனச்சா, வெள்ளைக்கானை மிஞ்சி எல்லா எண்ணை ஆலைகளையும் நடத்துறங்க, அமெரிக்க கம்பெனிக்கே தலைமை ஆகுராக, ஒரு வேலை அவங்க சாமிதான் நெசமோ "ன்னு சந்தேகம் வந்துடுச்சு அரபிகளுக்கு. நம்ம உள்ளூர் அரபி அடிமை எல்லாம் ஆஆ ன்னு வாய பொளந்து கிட்டு நிக்கிறாங்க. அரேபியே இந்துக்கள் காலுல விழுவானுக போல இருக்கே ன்னு
Rate this:
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
18-ஆக-202020:22:13 IST Report Abuse
Swaminathan Chandramouli பஹ்ரைன் விநாயகர் சிலையை உடைத்த புர்கா அணிந்த பெண்களின் மீது வழக்கு பதிந்து நீதி மன்றத்தால் விசாரிக்க படுவார்கள் தண்டனையும் கிடைக்கும் இங்கு தமிழகத்தில் பிள்ளையார் சிலையை உடைப்பவர்கள் மீது எந்த விதமான சட்ட நடவடிக்கையும் கிடையாது ஸ்ரீ ராமரை செருப்பால் அடித்த கூட்டம் இன்றும் தண்டனை பெறாமல் ஊரை சுற்றி கொண்டு இருக்கிறது இன்னொரு திமுகவை சேர்ந்த ஆண்டி ராசா கந்தர் சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமரிசனம் செய்தார் அவர் மீது அரசாங்கமோ நீதிமன்றமோ தானாக முன் வந்து சட்டநடவடிக்கை எடுக்கவில்லை இது எவ்வளவு மோசமான செயல் எல்லோருக்கும் இந்துக்கள் இந்து கடவுள்கள் என்றால் இளக்காரமாக ஆகிவிட்டது நம் தலையெழுத்து தமிழகத்தில் பிறந்து தொலைத்து விட்டோம்
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன்கோர்ட் மற்றும் தேசிய கொடியை அவதூறா பேசினா கேஸ் போட போலீஸ் யோசனை பண்றாங்க பெரிய இடமாச்சே என்னபண்றது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X