விநாயகர் சிலைக்கு பா.ஜ., தலைவர் முருகன் முதல்வரிடம் அனுமதி கோரினார்

Added : ஆக 17, 2020 | கருத்துகள் (16) | |
Advertisement
சென்னை; -தமிழக பா.ஜ., தலைவர் முருகன், நேற்று முதல்வர் இ.பி.எஸ்.,சை சந்தித்து, விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, விநாயகர் சிலைகள் அமைத்து வழிபட, அனுமதி அளிக்கும்படி கோரிக்கை விடுத்தார்.தமிழக பா.ஜ., தலைவர் முருகன், நேற்று இரவு, 7:00 மணிக்கு, முதல்வரை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.சந்திப்புக்கு பின், அவர் கூறியதாவது:பொதுமக்கள் மிக விமரிசையாக கொண்டாடும், விநாயகர் சதுர்த்தி விழாவை,
 விநாயகர் சிலைக்கு  பா.ஜ., தலைவர் முருகன் முதல்வரிடம் அனுமதி கோரினார்

சென்னை; -தமிழக பா.ஜ., தலைவர் முருகன், நேற்று முதல்வர் இ.பி.எஸ்.,சை சந்தித்து, விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, விநாயகர் சிலைகள் அமைத்து வழிபட, அனுமதி அளிக்கும்படி கோரிக்கை விடுத்தார்.

தமிழக பா.ஜ., தலைவர் முருகன், நேற்று இரவு, 7:00 மணிக்கு, முதல்வரை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.சந்திப்புக்கு பின், அவர் கூறியதாவது:பொதுமக்கள் மிக விமரிசையாக கொண்டாடும், விநாயகர் சதுர்த்தி விழாவை, அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, சமூக இடைவெளியை கடைப்பிடித்து நடத்த, முதல்வரை சந்தித்து அனுமதி கோரினோம்.

ஊர்வலம் இல்லாமல், விநாயகர் சிலை அமைத்து வழிபட்டு, கரைப்பதாக உறுதி அளித்துள்ளோம். அதிகாரிகளை ஆலோசித்து தகவல் தெரிவிப்பதாக, முதல்வர் உறுதி அளித்தார். முதல்வருடனான சந்திப்பு திருப்தியாக இருந்தது.இவ்வாறு, அவர் கூறினார்.முன்னதாக, தமிழக போலீஸ் டி.ஜி.பி., திரிபாதி, முதல்வரை சந்தித்து பேசினார். அப்போது, விநாயகர் சிலைகள் அமைத்து வழிபட, அனுமதி அளிப்பது குறித்து, ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivas.... - Chennai,இந்தியா
18-ஆக-202017:12:52 IST Report Abuse
Srinivas.... இவர்கள் செய்யும் அனைத்தும் போலி வேஷம். இத்தனை வருடங்களாக இல்லாத கரிசனம் பிஜேபிக்கு இந்துக்கள் மேல் இப்போது வந்துள்ளது எப்படி?
Rate this:
sridhar - Chennai,இந்தியா
18-ஆக-202019:46:38 IST Report Abuse
sridharதேர்தல் நெருக்கத்தில் பாருங்கள் , சுடலை கூட விபூதி பூசி பக்தி பழமமாக காட்சி தருவார். ஹிந்துக்களுக்கு ஒரு உணர்வு வந்து கொண்டிருக்கிறது....
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
18-ஆக-202017:06:56 IST Report Abuse
Thiagarajan Kodandaraman தெய்வநம்பிக்கை அதிகம் கொண்டுள்ள முதல்வர் இதில் உறுதியாக சாதகமாக முடிவுஎடுப்பார் .மக்களின் எதிர்பார்ப்புக்கு மதிப்பளிப்பார் ..ஏற்கனவே முக்கியமான பல பண்டிகைகளை கொண்டாட முடியாமல் இந்த கொரநா காரணத்தால் போய் விட்டது
Rate this:
Cancel
Rajalakshmi - Kuwait City,குவைத்
18-ஆக-202014:02:09 IST Report Abuse
Rajalakshmi பக்தர்கள் யானைகளுக்கு நிறைய வாழைப்பழம், விளாம்பழம் , தேங்காய் , நெல்பொரி , வெல்லம் என தாராளமாக அள்ளி அள்ளிக்கொடுங்கள். மனிதர்களுக்கு இலவச உணவு வழங்குவதை விட யானைக்கும் , காக்கைக்கும் , பசுவிற்கும் தாராளமாக நித்தமுமே இப்படி கொடுங்கள். நிறைய அகத்திக்கீரை பசுவிற்கு கொடுக்கவும். இதைவிட சிறந்த பூஜை இருக்குமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X