கலெக்டரிடம் விருது வாங்கிய பிச்சைக்காரர்!

Added : ஆக 18, 2020 | கருத்துகள் (2)
Advertisement
மதுரை: பிச்சை எடுத்த பணத்தில், 80 ஆயிரம் ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கிய பிச்சைக்காரருக்கு, சுதந்திர தின விழா சான்றிதழ், விருதை, கலெக்டர் வழங்கினார்.துாத்துக்குடி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன், 65; திருமணமானவர். வேலை தேடி மும்பை சென்றவர், வேலை கிடைக்காமல், பிச்சை எடுக்க துவங்கினார். ஊர் திரும்பிய அவரை, குடும்பத்தினர் சேர்த்து
கலெக்டரிடம் விருது வாங்கிய பிச்சைக்காரர்!

மதுரை: பிச்சை எடுத்த பணத்தில், 80 ஆயிரம் ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கிய பிச்சைக்காரருக்கு, சுதந்திர தின விழா சான்றிதழ், விருதை, கலெக்டர் வழங்கினார்.



துாத்துக்குடி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன், 65; திருமணமானவர். வேலை தேடி மும்பை சென்றவர், வேலை கிடைக்காமல், பிச்சை எடுக்க துவங்கினார். ஊர் திரும்பிய அவரை, குடும்பத்தினர் சேர்த்து கொள்ளவில்லை.இதனால், தொடர்ந்து பிச்சை எடுத்து வந்தார். தற்போது, மதுரையில் பிச்சை எடுத்து வருகிறார்.

பிச்சை எடுத்த பணம், 10 ஆயிரம் வீதம், எட்டு முறை, 80 ஆயிரம் ரூபாயை, கொரோனா நிவாரண நிதியாக, மதுரை கலெக்டர் வினயிடம் வழங்கினார்.இதனால், சுதந்திர தின விழாவில், அவருக்கு விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியாததால், அன்று விருது வழங்க முடியவில்லை.

நேற்று இத்தகவல் தெரிந்து, பூல் பாண்டியன், கலெக்டர் அலுவலகம் வந்தார். அவருக்கு கலெக்டர் விருது, சான்றிதழ் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasu Kutty - New York,யூ.எஸ்.ஏ
19-ஆக-202001:55:13 IST Report Abuse
Rasu Kutty அவர் பெயர் சரிதானா ?
Rate this:
Cancel
M.RAGHU RAMAN - chennai,இந்தியா
18-ஆக-202017:18:09 IST Report Abuse
M.RAGHU RAMAN பாவம்.... அவரு பிச்சையெடுத்து சேர்த்த பணம் தேவையா? திருப்பி அவரிடம் கொடுத்து, அவருக்கு கூடுதல் நிதி வழங்கி ஒரு பெட்டிக்கடை வைத்து கொடுத்து, இனிமேல் பிச்சைஎடுக்கக்கூடாது என்று அறிவுரை சொல்வதை விட்டுவிட்டு அவர் பணத்தை பாக்கெட்டில் போட்டுக்கொள்வது கேவலமாக தெரியவில்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X