நாட்டாமை ஆபீசரின் ராஜாங்கம்... நற்சான்று கிடைக்காதவர் ஆதங்கம்!

Updated : ஆக 18, 2020 | Added : ஆக 18, 2020
Advertisement
வெளியூர் செல்ல, 'இ-பாஸ்' பிரின்ட் எடுத்து கெண்டிருந்தாள் சித்ரா.''ஹாய்... சித்து அக்கா!''''என்னடி திடீர்னு. யார் கூட வந்த?''''நானேதான் வந்தேன். ஏக்கா, 'இ-பாஸ்' எடுத்துட்டுத்தான் வரணுமா?'' சிரித்தாள் மித்ரா.''அதுதான், இப்ப இல்லையே. அதனால, 'வடை போச்சே'னு, கரைவேட்டி கட்டின சில புரோக்கர்கள் புலம்பறாங்களாம். அதிலும், 'ஆட்டோ அப்ரூவல்' என்பதால, காசு பார்க்க
 நாட்டாமை ஆபீசரின் ராஜாங்கம்... நற்சான்று கிடைக்காதவர் ஆதங்கம்!

வெளியூர் செல்ல, 'இ-பாஸ்' பிரின்ட் எடுத்து கெண்டிருந்தாள் சித்ரா.''ஹாய்... சித்து அக்கா!''''என்னடி திடீர்னு. யார் கூட வந்த?''
''நானேதான் வந்தேன். ஏக்கா, 'இ-பாஸ்' எடுத்துட்டுத்தான் வரணுமா?'' சிரித்தாள் மித்ரா.


''அதுதான், இப்ப இல்லையே. அதனால, 'வடை போச்சே'னு, கரைவேட்டி கட்டின சில புரோக்கர்கள் புலம்பறாங்களாம். அதிலும், 'ஆட்டோ அப்ரூவல்' என்பதால, காசு பார்க்க முடியாதுன்னு, நொந்து நுாடுல்ஸ் ஆகிட்டாங்களாம்,''

''ஆனா, மக்களுக்கு செம 'ரிலாக்ஸ்' போங்க,'' என்ற மித்ரா, ''கொரோனா காலத்திலும், 'டிரான்ஸ்பர்' போடறாங்களே'ன்னு, ஒரே புலம்பல்ஸ்,''''ஏன், ஏதாவது பிரச்னையா?''

''நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்துக்கு, கோவையில இருந்து நாலு பேர 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்க. பஸ் இல்லாததால், ஒரே கார்ல நாலு பேரும் வந்துட்டு இருந்தாங்க. அதுல, ரெண்டு பேருக்கு கொரோனா வந்துடுச்சு,''

''அப்றம் என்னாச்சு?''

''இது தெரிஞ்சவுடன், ஆபீசுல இருக்கறவங்க, 'டெஸ்ட்' எடுக்க, ஜி.எச்.,க்கு போனாங்க. அங்க, 'டெஸ்ட்' எடுக்கற ஸ்டாப்புக்கும் கொரோனாவாம். அடுத்த நாள் 'டெஸ்ட்' எடுத்தும் ரிசல்ட் வர லேட்டாச்சாம்''

''இவங்களுக்கே இந்ந நிலைன்னா, அப்பாவி மக்கள் கதி,'' ஆதங்கப்பட்டாள் சித்ரா.''நீங்க சொல்றது கரெக்ட்தான் அக்கா. கொரோனா அவார்டு கிடைக்கலேன்னு, பல துறையினர் அப்செட் ஆகிட்டாங்களாம்,''

''உண்மைதான்டி. ஊரக வளர்ச்சித்துறை, வி.ஏ.ஓ., அவங்க உதவியாளர்ளை கண்டுக்காம விட்டுட்டாங்களாம். ஒருவாரத்துக்கு முன்னாடியே, லிஸ்ட் போயும், இப்டி பண்றாங்கன்னு, பட்டிமன்றமே நடக்குது,''

''நாங்க வெடியவெடிய டூட்டி பார்த்தோம். வேலை செய்யாத, கூட்டுறவுத்துறைக்கு கொடுத்ததை பார்த்து, கொந்தளிச்சுட்டாங்களாம். இதையெல்லாம் கண்டுக்க வேண்டிய ஆபீசர், ரொம்ப கூலா இருக்கிறாராம்,''

''இதிலும் கூட அரசியலாங்க்கா,'' சொன்ன மித்ரா, ''கார்ப்ரேஷனில், குப்பை அள்றதுக்கு வராதவங்களுக்கு 'பிரசன்ட்' போட்டு, பணத்தை சுருட்டறாங்களாம். இது தெரிஞ்ச, 'மாஜி' கவுன்சிலர் ஒருத்தர், 'நீங்க பணத்தை சம்பாதிச்சுட்டு போங்க. குப்பை அள்ற வேல மட்டும் நிற்கக்கூடாது, அதிகாரிகிட்ட ஓபனா, சத்தம் போட்டாராம்,''

''மித்து, கார்ப்ரேஷன் மேட்டர் நான் ஒன்னு சொல்றேன். அங்குள்ள ஒரு ஆபீசருக்கு, ரெண்டு மாசத்துக்கு முன், 'டிரான்ஸ்பர்' போட்டாங்க. ஆனா, இப்பதான் போனாரு. கொரோனா காலத்தில், எப்படி டிரான்ஸ்பர்னு விசாரிச்சதில், 'துாய்மை பணியாளருக்கு, முக கவசம், கையுறை, மாத்திரை சரிவர அவர் கொடுக்கலையாம்,''

''இதுக்கு, அதிகாரி ஒருத்தர் கேட்டதற்கு, ''குப்பையில் இருந்து கொரோனா பரவுமா?'னு, பதில் சொன்னதுக்குத்தான், இந்த டிரான்ஸ்பர்னு, ஆபீசில் பேசிக்கிறாங்களாம்,''

''ஓ... அதுதான் மேட்டரா?'' என்ற மித்ரா, நடராஜா தியேட்டர் ரோட்டில், கார்ப்ரேஷன் காம்ப்ளக்ஸில், மூனு கடையை 'மாஜி' கவுன்சிலரின் கணவர் ஏலம் எடுத்தார். ரெண்டு கடைகளை அவர் வச்சிட்டு, இன்னொரு கடையை, 'உள் வாடகைக்கு விடப்படும்'னு போர்டு மாட்டினார். இது தெரிஞ்ச, ஆபீசர், அவரை எச்சரிச்சதால, போர்டை கழற்றிட்டாராம்,''''யார் கடையை, யார் வாடகைக்கு விடறதுன்னு, ஒரு நியாயம் இல்லாம போச்சு,'' சித்ரா சொன்னாள்.

''அக்கா... லிங்கேஸ்வரர் ஊர் அதிகாரிய பத்தி போனவாரம் பேசினோமில்ல. 'இதெல்லாம், யார் போய் சொல்றீங்கன்னு, மீட்டிங்கில், 'காச்... மூச்'னு சத்தம் போட்டாராம். இதை கேட்ட ஒருத்தர், 'ரெஸ்டாரன்ட்டுகளில், 'சரக்கு' விக்கறாங்க. இதெல்லாம் ரெய்டு பண்ண வேண்டியதுதானே,'னு, ஓபனா பேசறாங்களாம்,''----

''நீ சொல்றது கரெக்ட்தான் மித்து. இதேபோல, சிட்டி யில், எந்த ஒரு விஷயம் செய்தாலும், புதுசா வந்த அதிகாரி, அவருக்கு கீழுள்ள 'குளுகுளு' அதிகாரியிடம் கேட்டுத்தான், செய்றார். இதுக்கு என்ன காரணம்னு பார்த்தால், இருவரும் நண்பர்களாம். அதனால, பதவி வேறுபாடு பார்க்காம பழகுறாங்களாம்,''

''அக்கா... ரூரலில் ரெண்டு அதிகாரிகள் வச்சுதுதான் சட்டமாம். ஸ்டேஷன்களில் நடப்பதை, உயரதிகாரியிடம் மறைத்து விட்டு, இவர்களுக்கு 'ஜெய'மாகும் தகவலை 'காந்தம்' போல் ஈர்த்து சொல்கின்றனர். ரெண்டு போராட 'நாட்டாமை'யால், பல ஸ்டேஷன்களில், அந்தந்த அதிகாரிகள், 'தனி ராஜாங்கம்' நடத்தறாங்களாம்,''

''மித்து, நீ சொல்றது கரெக்ட்தான்டி. அதவிடு. பஞ்சாயத்து அதிகாரி ஒருத்தரை பத்தி போனவாரம் பேசினோம், ஞாபகமிருக்கா?''

''ம்... இருக்கு, ராமரோட தம்பி...'' என மித்ரா ஆரம்பிக்கவும், ''யெஸ், அவரேதான். தன்னோட ஆபீசில், 'யார் இந்தவேலய பார்த்ததுனு சத்தம் போட்டிருக்கார். சீக்கிரமே, 'புரமோஷன்' வருவதால், தன்னோட 'கலெக் ஷன்' வேட்டையை மீண்டும் ஆரம்பிச்சிட்டாராம். இவருக்கு யார், 'லட்சுமண ரேகை' போடுறாங்கன்னு' தெரியலையே,'' கூறியவாறு சிரித்தாள் சித்ரா.

''அக்கா... டைம் போனதே தெரியலை. நான் கெளம்பறேன்,'' மித்ரா சொன்னதும், ''பாத்து, ஜாக்கிரதையா போடி'' அட்வைஸ் செய்தாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X