செவ்வாய்தோறும் கிளை கூட்டம்; தேர்தலுக்கு தயாராகுது பா.ஜ.

Updated : ஆக 18, 2020 | Added : ஆக 18, 2020 | கருத்துகள் (20) | |
Advertisement
சென்னை : மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் பா.ஜ.வுக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத நிலை உள்ளது.வரும் தேர்தலில் 25 எம்.எல்.ஏ.க்களையாவது சட்டசபைக்கு அனுப்புவது என கட்சி தலைமை இலக்கு நிர்ணயித்துள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ளதால் இலக்கை அடையும் நோக்கில் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை பா.ஜ. துவக்கி உள்ளது.இதுகுறித்து கட்சி நிர்வாகிகள்
Tamil Nadu, BJP, Bharatiya Janata Party, tamil nadu election, பாஜ

சென்னை : மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் பா.ஜ.வுக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத நிலை உள்ளது.

வரும் தேர்தலில் 25 எம்.எல்.ஏ.க்களையாவது சட்டசபைக்கு அனுப்புவது என கட்சி தலைமை இலக்கு நிர்ணயித்துள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ளதால் இலக்கை அடையும் நோக்கில் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை பா.ஜ. துவக்கி உள்ளது.

இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் 65 ஆயிரம் ஓட்டுச் சாவடிகள் உள்ளன. இவற்றில் 50 ஆயிரம் ஓட்டுச் சாவடிகளில் சாவடிக்கு 40 பேர் கொண்ட குழுவை கட்சி நியமித்துள்ளது.மீதமுள்ள ஓட்டுச் சாவடிகளிலும் குழு அமைக்கும் பணி நடந்து வருகிறது. செவ்வாய்கிழமை தோறும் ஒவ்வொரு கிளை கூட்டமும் நடத்தப்பட வேண்டும்.


latest tamil newsஇக்கூட்டத்தில் மாநில தலைவர் உட்பட அனைத்து நிர்வாகிகளும் தங்களுக்கு ஓட்டு உள்ள கிளை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். கூட்டத்தில் அந்த ஓட்டுச் சாவடியில் உள்ள வாக்காளர்கள் குறித்த விபரங்களை சேகரிக்க வேண்டும். தினமும் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று மத்திய அரசு செயல்படுத்தி உள்ள மக்கள் நல திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும்.

ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும் குறைந்தது 250 பேரை கட்சி ஆதரவாளர்களாக மாற்ற வேண்டும் என நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கட்சி நிர்வாகிகள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஆக-202022:54:01 IST Report Abuse
ஸ்டாலின் :: ஹிந்து என்பவர்கள் யார் தமிழர்கள் என்பவர்கள் யார் வந்தேறிகள் யார் இதற்க்கு யாராவது தெரிந்தவராகில் விளக்கம் கொடுக்கலாம் ஹிந்து என்று உள்ளதா இல்லை இல்லை இடையில் சொருகியதா
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
20-ஆக-202012:04:23 IST Report Abuse
Sridharஉச்ச கோர்ட்டின் தீர்ப்புப்படி முஸ்லிம், கிறித்துவர், பார்சி, யூதர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் தவிர்த்து இந்திய நாட்டில் வசிப்பவர்கள் அனைவரும் ஹிந்துக்கள். தமிழர்கள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க சம்மதித்து வாக்களித்ததால் அவர்களும் ஹிந்துக்கள் ஆகிறார்கள். வந்தேறிகள் என்று பார்த்தால், தமிழகத்தில் இருக்கும் ஏறக்குறைய அனைவருமே வந்தேறிகள் தாம். ஒருசிலர் ஆப்பிரிக்காவிலிருந்தும் வேறு பலர் ஆந்திர கர்நாடகவிலிருந்தும் வந்தேறியவர்கள். வேறு மதத்தவர்களில், மதம் மாறியவர்களை தவிர்த்து மற்றவர்கள் பாலைவன பகுதியிலிருந்து வந்தேறியவர்களாக இருக்கக்கூடும். கைபர் போலன் வழியாக வந்தவர்கள் என்று சொல்லப்படும் 'ஆரியர்கள்' வடஇந்தியாவிலிருந்து வந்திருக்கலாம். ஆனால் அவ்வாறு வந்ததற்கான சான்றுகள் தெளிவாக இல்லாதபோதும், அப்படி வந்தவர்களில் எவ்வளவு பேர் எந்தெந்த வர்ணங்களை சேர்ந்தவர்கள் என்பதற்கான விவரங்களும் நம்மிடம் இல்லை. பட்டியியலின மக்களும் வடநாட்டிலிருந்து குடிபெயர்ந்திருக்கலாம். சொல்லப்போனால், சமுதாய கொடுமைகளிலிருந்து தப்பிக்க அவர்கள் தான் அதிகமாக புலன் பெயர்ந்த மக்களாக இருக்கவேண்டும். நாமளே ஒரு வந்தேறியாக இருந்துகொண்டு இவ்வளவு நாட்களாக பட்டியலின மக்களை வந்தேறி வந்தேறி என்று வெறுப்பை உமிழ்ந்து கொண்டு இருந்திருக்கிறோம் என்று நினைக்கும்போது மிக கேவலமாக இருக்கிறது....
Rate this:
Cancel
அச்சம் தவிர் தமிழா அடங்க மறு வீறு கொள் வெற்றி நமதே இந்த ஹிந்துக்கள் பற்றி தெரியாது பால் காவடி எடுக்கமாட்டான் அழகு குத்த மாட்டான் பாத யாத்திரை போக மாட்டான் ஆனா இதை அனைத்தையும் தமிழன் செய்வான் அப்போ தமிழன் வோட்டு யாருக்கு பிஜேபி க்கு கிஇடையது என்னவோ சஷ்டியை இவர்கள் தான் கண்டுபிடித்து போல் புயல் என்றால் வரமாட்டான் அப்புறம் வோட்டு மட்டும் ஏப்படி
Rate this:
Cancel
19-ஆக-202022:50:27 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் கூடை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனான் கதை தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X