கேரளாவில் ஒரே நாளில் 1,131 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

Updated : ஆக 18, 2020 | Added : ஆக 18, 2020 | கருத்துகள் (1) | |
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் மேலும் 1,131 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 30,025 ஆக அதிகரித்துள்ளது. மாநில அளவில் கொரோனா மீட்பு விகிதம் 65 சதவீதமாக உள்ளது.இருப்பினும் அங்கு ஒரே நாளில் மேலும் 1,725 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் மேலும் 1,131 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 30,025 ஆக அதிகரித்துள்ளது. மாநில அளவில் கொரோனா மீட்பு விகிதம் 65 சதவீதமாக உள்ளது.



latest tamil news



இருப்பினும் அங்கு ஒரே நாளில் மேலும் 1,725 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 46,140 ஆனது. புதிதாக 13 பேர் பலியானதால் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 45 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். 75 பேர் வெளிமாநிலத்திலிருந்து வந்துள்ளனர். 1,572 பேருக்கு பிறர் மூலம் தொற்று ஏற்பட்டது. 94 பேருக்கு யார் மூலம் தொற்று ஏற்பட்டது என்று கண்டறிய முடியவில்லை.

அதிகபட்சமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் 461 பேருக்கும், கொல்லம் மாவட்டத்தில் 48 பேருக்கும், பத்தணம்திட்டா மாவட்டத்தில் 2 பேருக்கும், ஆலப்புழா மாவட்டத்தில் 139 பேருக்கும், கோட்டயம் மாவட்டத்தில் 89 பேருக்கும், இடுக்கி மாவட்டத்தில் 23 பேருக்கும், எர்ணாகுளம் மாவட்டத்தில் 129 பேருக்கும், திருச்சூர் மாவட்டத்தில் 156 பேருக்கும், பாலக்காடு மாவட்டத்தில் 137 பேருக்கும், மலப்புரம் மாவட்டத்தில் 306 பேருக்கும், கோழிக்கோடு மாவட்டத்தில் 46 பேருக்கும், வயநாடு மாவட்டத்தில் 15 பேருக்கும், கண்ணூரில் 77 பேருக்கும், காசர்கோடு மாவட்டத்தில் 97 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டது.


latest tamil news



மாநிலம் முழுவதும் 1,64,029 பேர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். அவர்களில் 1,50,332 பேர் வீடுகளிலும் தனிமை வார்டுகளிலும் உள்ளனர்.கேரளாவில் தற்போது 13,697 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
18-ஆக-202007:28:50 IST Report Abuse
duruvasar இந்த செய்தி தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பேர் குணமடைந்து போன்ற இனிப்பான செய்தி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X