108 தேங்காய்களை உடைக்கச் சொன்ன துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்

Updated : ஆக 18, 2020 | Added : ஆக 18, 2020 | கருத்துகள் (62)
Share
Advertisement

நியூயார்க்: ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர்கமலா ஹாரிஸ், அட்டர்னிஜெனரல் தேர்தலில் போட்டியிட்ட போது, சென்னையில் உள்ள தன் சித்தியிடம், கோவிலில் வேண்டிக் கொண்டு, 108 தேங்காய்களை உடைக்க கூறியுள்ளார்.



latest tamil news


அமெரிக்காவில், நவம்பர், 3ம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். துணை அதிபர் பதவிக்கு,இந்திய அமெரிக்கரும், கலிபோர்னியா மாகாண செனட்டருமான கமலா ஹாரிஸ், 55, வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கமலா ஹாரிசின் தாய் ஷியாமளா, சென்னையை சேர்ந்தவர். இந்நிலையில், கமலா ஹாரிசுக்கும், இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்திற்கும் இடையிலான உறவு குறித்து, அமெரிக்காவின், 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ், நேற்று ஒரு கட்டுரையை வெளியிட்டது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த, 2010ல், கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் பதவிக்கான தேர்தலில், கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார். தேர்தலுக்கு முன்பு, சென்னையில் உள்ள தன் சித்தி சரளா கோபாலனை தொடர்புகொண்டு பேசிய கமலா ஹாரிஸ், பெசன்ட் நகர் கடற்கரைக்கு அருகே உள்ள கோவிலில், வேண்டிக் கொண்டு, 108 தேங்காய்களை உடைக்குமாறு கூறியுள்ளார்.சிறு வயதில், தன் தாத்தா கோபாலன் மற்றும் பாட்டி ராஜம் கோபாலனை சந்திக்க, கமலா ஹாரிஸ் பலமுறை சென்னைக்கு வந்துள்ளார்.


latest tamil news


பெசன்ட் நகர் கடற்கரையில், தன் தாத்தாவுடன் நடந்து போனதை அவர் மறக்கவில்லை. கமலா ஹாரிசுக்கு, அவரது தாத்தா, பல நீதிக் கதைகளை கூறியுள்ளார்.கமலா ஹாரிசின் குடும்ப நண்பரும், பக்கத்து வீட்டுக்காரருமான வியாஸ் என்பவர், “இந்த குடும்பம் மீது அனைவருக்கும் நல்ல மரியாதை உள்ளது. அவர்கள், நேர்மையான, வெளிப்படையான மற்றும் மகிழ்ச்சியான மனிதர்கள்,” என்றார்.இதேபோல், ஜெயந்தி என்பவர், “கமலா ஹாரிஸ், துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது ஆச்சரியமளிக்கவில்லை. ஏனென்றால், அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவரும் வலிமையான ஆளுமைகளாகவே உள்ளனர்,” என்றார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) நீ இப்போது தேங்காய் உடைப்பது உன் ..எதிரானதே தாயே
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
19-ஆக-202005:25:15 IST Report Abuse
meenakshisundaram pillaaiyaarai எத்தனையோ முறை உடைத்த தமிழக 'கூட்டம்' இப்போ இன்னா சொல்லுது ?
Rate this:
Cancel
Jit Onet - New York,யூ.எஸ்.ஏ
18-ஆக-202018:34:49 IST Report Abuse
Jit Onet இவ்வளவு பேசுறீங்களே, இந்தியாவில் இருக்கும் உங்கள் அனைவருக்கும் சில கேள்விகள் : 1) அமெரிக்காவின் சப்போர்ட் என்றால் என்னதான் வேண்டும் இந்தியாவுக்கு? பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிராக குரல் கொடுத்தால் போதுமா, h1b தடையில் இருந்து விலக்கு வேண்டுமா? 3 ) அணு மூலப்பொருள் கொள்முதலுக்கு ஆதரவு வேண்டுமா 4) ஐநாவில் ஆதரவு குரல் மற்றும் வீட்டோ வாக்கு வேண்டுமா ? 5) ராணுவ தளவாடங்கள் வேண்டுமா ....இவை எல்லாம் செய்தாகிவிட்டது. ஆனால் அமெரிக்க வேண்டுகோள்களான பல விஷயங்களுக்கு இந்தியா முடியாது என்று கூறியிருக்கிறது (ஈரானிடம் தடை, ஆப்கனிஸ்தானில் படைகள் ...) . இந்தியா பெரிய தளவாடங்கள் வாங்குவது ரஷ்யா (s400) , பிரான்சு (rafale). இப்படி இந்தியா மட்டும் எல்லா நாடுகளிடமும் 'நட்புறவோடும்' 'வர்த்தக' உரிமைகளோடும் இருக்கவேண்டும், ஆனால் அமெரிக்கா மட்டும் நமது எதிரியை அவர்கள் எதிரியாக கருதவேண்டும் என்று கேட்பது நியாயமா? இருந்தும் மோடி மற்றும் ஜெய்சங்கர் தங்களது திறமையினால் சாதுர்யத்தினால் அமெரிக்காவிடம் வெளியுறவு கொள்கைகளை நிலுவை செய்திருக்கின்றனர். இதற்கு மேலும் அமெரிக்க ஆதரவு வேண்டுமென்றால், இந்தியா வெளிப்படையாக அமெரிக்காவின் எதிரிகளை தங்கள் எதிரிகளாக சொல்லவேண்டி வரும். அதற்க்கு தயாரா இந்தியர்கள் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X