ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு: கட்சிகள் கருத்து

Updated : ஆக 18, 2020 | Added : ஆக 18, 2020 | கருத்துகள் (68) | |
Advertisement
சென்னை: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.துணை முதல்வர் ஓபிஎஸ்: ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை தொடரும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன். அரசு ஏற்கனவே அறிவித்தபடி பல கோடி மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அமைச்சர்
sterlite case, madras high court, m k stalin, politics, ஸ்டெர்லைட்ஆலை, ஸ்டாலின், ஓ.பி.எஸ்., ஓ.பன்னீர்செல்வம், கமல்ஹாசன், கனிமொழி, அமைச்சர் ஜெயக்குமார்,

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.துணை முதல்வர் ஓபிஎஸ்:latest tamil newsஸ்டெர்லைட் ஆலைக்கு தடை தொடரும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன். அரசு ஏற்கனவே அறிவித்தபடி பல கோடி மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அமைச்சர் ஜெயக்குமார்:


வரவேற்கத் தகுந்த தீர்ப்பு. ஏற்கனவே அரசு எடுத்த நிலைப்பாட்டை உயர்நீதிமன்றம் வலு சேர்த்துள்ளது. அரசின் நிலைப்பாடு என்பதே கொள்கை முடிவு தான். தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குமாறு நடிப்பவர்களை எழுப்ப முடியாது. இந்த ஆலையே தேவையில்லை என்பது தான் அரசின் நிலைப்பாடுதி.மு.க., தலைவர் ஸ்டாலின்:latest tamil newsஸ்டெர்லைட் ஆலைக்கு திறக்க அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, மனித குலத்தை மகத்தான தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை வரவேற்று தமிழக அமைச்சரவையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மகத்தான தீர்ப்பை அளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடுவதை தமிழக அரசு ஒரு சட்டமாக அறிவிக்க வேண்டும்.


தி.மு.க., எம்.பி., கனிமொழி:


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. சுற்றுச்சூழலை விலையாக கொடுத்து கிடைக்கும் வளர்ச்சி ஆபத்தானது என்பதை இத்தீர்ப்பு உணர்த்துகிறது.ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ:


ஸடெர்லைட் ஆலை தீர்ப்பு நீதிக்கு கிடைத்த வெற்றி, மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. 26 ஆண்டுகள், நீதிமன்றத்திலும், மக்களுக்காகவும் போராடியதற்கு கிடைத்த வெற்றி.பாஜ.,வின் வானதி சீனிவாசன்:latest tamil newsஸ்டெர்லைட் வந்த ஆரம்பகாலத்திலேயே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்திருக்கிறோம். ஆனால், இப்போது பல்வேறு விஷயங்களை பார்க்க வேண்டியுள்ளது. இப்போது நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்று கொள்கிறோம்.மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன்latest tamil news
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.K - Hamburg,ஜெர்மனி
19-ஆக-202015:08:17 IST Report Abuse
N.K குடியிருப்பு பக்கத்துல தொழிற்சாலை இருக்கக்கூடாதுன்னு போராடி மூடின மாதிரி, விவசாய நிலங்கள் இருந்த இடத்துல குடியிருப்பு வரக்கூடாதுன்னு போராடமாட்டாங்க, ஏனெனில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் இதை போராட்டத்தை தூண்டிவிடுற கட்சிகாரங்கதான்
Rate this:
Cancel
Gopalakrishnan Ra - Madurai,இந்தியா
18-ஆக-202021:07:05 IST Report Abuse
Gopalakrishnan Ra தாமிரம் மிகவும் முக்கியமான உலோகம் . தாமிரத்தில் இருந்து ஏகப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. தாமிர பாத்திரத்தில் நீர் வைத்து குடிப்பது நல்லது என்று கேள்விப்படுகிறோம். உலகம் முழுவதும் தாமிர தொழில் சாலைகள் உள்ளன. எந்த நாட்டிலும் மூடியதாக தெரியவில்லை. நாம் இப்போது வெளிநாடுகளில் இருந்து தாமிரம் இறக்குமதி செய்யவேண்டி இருக்கிறது. தொழில்சாலைகளை திறப்பது கடினம். மூடுவது ஒரு நிமிடம் போதும். ஒரு காலில் புண் ஏற்பட்டால் காலை வெட்டி எரிந்து விடுவதில்லை. அதற்க்கு தக்க மருந்து தடவி அதனை சரி செய்கிறோம். அதுபோல் ஒரு கம்பனியால் மாசு ஏற்படும் என்றால் அந்த மாசுக்களை நீக்க வழிவகை செய்யவேண்டும். அதைவிடுத்து உடனே தொழில்சாலைகளை மூடினாள் வேலைவாய்ப்பு பறிபோகும். சுற்றுப்புற சூழல் பாதிக்கும் என்று கூறி தொழில்சாலைகளை மூடினாள் நாட்டில் எத்தனையோ தொழில்சாலைகள் மூடவேண்டும். சிமெண்ட் தொழில்சாலைகள், சாயப்பட்டறைகள், தோல் பதனிடும் தொழில்சாலைகள் ,சாராய தொழில்சாலைகள் இப்படி எத்தனையோ தொழில்சாலைகள் மூடவேண்டிவரும். தொழில்சாலைகளும் விவசாயமும் நாட்டின் இரு கண்கள்.
Rate this:
kasinathan karthikeyan.k - singapore,சிங்கப்பூர்
19-ஆக-202009:34:20 IST Report Abuse
kasinathan karthikeyan.kஅப்பன்னா........உங்க வீட்டு பக்கத்துல.......ஆரம்பிக்கலாம்...
Rate this:
N.K - Hamburg,ஜெர்மனி
19-ஆக-202015:05:10 IST Report Abuse
N.K நிலம் மலிவு கிடைக்குதேன்னு தொழிற்சாலை பக்கத்துல வாங்கி வீடு கட்டிக்கவேண்டியது, அப்பறம் வீட்டுக்கிட்ட தொழிற்சாலை இருக்கக்கூடாதுன்னு இழுத்து மூடவேண்டியது..கேட்ட உங்க வீட்டு பக்கத்துல ஆரம்பிக்கலாம்னு பேசவேண்டியது..அதிகமான உருக்காலைகள் போராட்டக்காரர்கள் தூக்கிப்பிடிக்கும் சீனாவில்தான் உள்ளது. இரும்புத்தாது ஏற்றுமதி செய்து, எக்கு (ஸ்டீல் ) இறக்குமதி செய்யும் விந்தையான நாடு நம்நாடு. இத்தனைக்கும் உள்ளவன் அத்தனை பெரும் பொறியியல் படிச்சுட்டு கல்லூரியை திட்டிகிட்டு கிடப்பான். இருக்கும் வளங்களை சரியாக பயன்படுத்தத் தெரியாது, கேட்டால் கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன்தோன்றிய மூத்த குடி என்று வசனம் பேசுவான்....
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
18-ஆக-202020:09:28 IST Report Abuse
bal இந்த நீதி மன்றம் ஏன் சாராய ஆலைகள் பிளாஸ்டிக் ஆலைகள் கூவம் நதி தொழில் பேட்டையிலிருந்து காவிரியில் சேரும் மாசுக்கு வாய் திறக்கவில்லை...ஓஹ் அதற்கு மனு போட்டால் தான் சட்டம் பேசுவார்களோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X