விழுப்புரம் : விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பு பகுதிகளில் ஜல்லிகள் கொட்டியும், சாலை போடும் பணிகள் தாமதமாக நடைபெறுவதால், பொதுமக்கள சிரமப்பட்டு வருகின்றனர்.
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில், அரசு ஊழியர் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. 39 வார்டுக்கு உட்பட்ட பாரதி வீதி, திருக்குறள் வீதிகளில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடும்பங்களோடு வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய சாலை போடுவதற்காக ஜல்லிகள் கொட்டப்பட்டன.இதற்கு பின் பணிகள் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அந்த பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று வருவோர் சிரமப்பட்டு வருகின்றனர்.
மழை பெய்தால், அந்த சாலையை சுத்தமாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும், மேலும் சில இடங்களில் ஜல்லிகள் பரப்புவதற்காக, அந்த பகுதியில் ஜல்லிகள் மலை போல் குவிக்கப் பட்டுள்ளது. எனவே சாலை பணியை விரைந்து முடிக்க ஜல்லிகள் மட்டும் கொட்டுவதை வாடிக்கையாக கொள்ளாமல், மக்களின் சிரமத்தை அறிந்து, அந்த பகுதிகளில் புதிய சாலை பணிகளை துரிதமாக துவங்குவதற்கான நடவடிக்கையை, நகராட்சி அதிகாரிகள் எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE