மரணத்தின் விளிம்பில் இருந்து கர்ப்பிணியை மீட்டெடுத்தது 'மியாட்'

Added : ஆக 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை, கொரோனா தொற்றுடன், ஆக்ஸிஜன் அளவு, 60 சதவீதம் என்ற அளவில், மரணத்தின் விளிம்பில் இருந்த கர்ப்பிணியை, சென்னை, 'மியாட்' மருத்துவமனை மீட்டெடுத்து காப்பாற்றியுள்ளது.சென்னையைச் சேர்ந்தவர் சவுமியா, 24; மென்பொருள் நிபுணர். இவரது கணவர் சதீஷ். கர்ப்பிணியான சவுமியாவுக்கு, ஐந்தாவது மாதத்தில், கொரோனா தொற்று ஏற்பட்டு, உடல்நிலை பாதிக்கப்பட்டது.பலவீனம்ஜூலை, 19ல், ஆபத்தான

சென்னை,
கொரோனா தொற்றுடன், ஆக்ஸிஜன் அளவு, 60 சதவீதம் என்ற அளவில், மரணத்தின் விளிம்பில் இருந்த கர்ப்பிணியை, சென்னை, 'மியாட்' மருத்துவமனை மீட்டெடுத்து காப்பாற்றியுள்ளது.சென்னையைச் சேர்ந்தவர் சவுமியா, 24; மென்பொருள் நிபுணர். இவரது கணவர் சதீஷ். கர்ப்பிணியான சவுமியாவுக்கு, ஐந்தாவது மாதத்தில், கொரோனா தொற்று ஏற்பட்டு, உடல்நிலை பாதிக்கப்பட்டது.பலவீனம்ஜூலை, 19ல், ஆபத்தான நிலையில், சென்னை, மணப்பாக்கம், மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு, தோல் சாம்பல் நிறமாக மாறி இருந்தது. நாடித்துடிப்பு பலவீனமாகி, ஆக்சிஜன் செறிவு அளவு, 95 சதவீதத்தில் இருந்து, 60 சதவீதத்திற்கு சென்றது.இதையடுத்து, தனிமைப்படுத்தப்பட்ட, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். உயிர் காக்கும் நிபுணர்கள், 'ரெம்டெசிவிர்' மருந்து வழங்க துவங்கினர். மியாட் சீனியர் மகப்பேறு மருத்துவர்கள், 'ஸ்கேன்' செய்து, குழந்தை உயிருடன் இருப்பதை உறுதி செய்தனர்.'மல்டி டிசிப்பிலனரி' குழுவின் மூத்த வல்லுனர்கள், சவுமியாவையும், குழந்தையையும், காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.முயற்சியை கைவிடாமல், மல்டி டிசிப்பிலனரி குழுவினர், சவுமியாவை வெண்டிலேட்டரில் வைத்தனர்.மூன்று நாள், வெண்டிலேட்டரில் இருந்த பின், அவரது உடலில், சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. இருப்பினும், சரியான முறையில் சவுமியாவால் பதில் அளிக்க முடியவில்லை.கொரோனா, மூளையை பாதித்து இருக்கலாம்; அதற்கு, 'இம்யூனோகுளோபின்'கள் தேவைப்படலாம் என, மருத்துவர்கள் கண்டறிந்தனர்.அனுபவம்விலைமதிப்பற்ற, இம்யூனோகுளோபின்கள் வாங்கி, இருப்பு வைக்கப்பட்டது. 24 மணி நேரத்தில், சவுமியாவின் தசை சக்தி மேம்பட்டது. நடந்து செல்லும் அளவிற்கு தேறினார்.பின், தனி அறைக்கு மாற்றப்பட்டார். 16 நாள் பராமரிப்பிற்கு பின், ஆக., 4ம் தேதி, சவுமியா, வீடு திரும்பினார். இந்த நோய் தொற்று சூழலில், மியாட் முழு நேர, மல்டி டிசிப்பிலனரி குழுவினரின் ஒருமித்த அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தால், சவுமியா மற்றும் பிறக்க இருக்கும் குழந்தையை காப்பாற்ற முடிந்தது என, மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.உயர்திரு. வெங்கடேஷ் சார் அவர்கள் விருப்பச் செய்திசென்னை பதிப்பில் அவசியம் சேர்க்குமாறு கூறியுள்ளார் சார் நன்றி

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar -  ( Posted via: Dinamalar Android App )
19-ஆக-202016:40:21 IST Report Abuse
Sundar நல்ல விளம்பரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X