பொது செய்தி

இந்தியா

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனை; இந்தியாவில் இந்த வாரம் தொடங்குகிறது

Updated : ஆக 19, 2020 | Added : ஆக 19, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: ஆக்ஸ்போர்டு பல்கலை.யின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை, இந்தியாவில் இந்த வாரம் தொடங்கப்பட உள்ளது.உலகம் முழுவதும் பெரிதாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. இதற்கான தடுப்பு மருந்து கண்டறிவதும் சோதனை அளவிலேயே இருக்கின்றன. ஆனால், ரஷ்யா மட்டுமே இதுவரை கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டறிந்துள்ளதாக
Oxford, Corona Vaccine, Serum Institute, coronavirus Test, India, ஆக்ஸ்போர்டு, கொரோனா, வைரஸ், தடுப்பூசி, தடுப்புமருந்து, பரிசோதனை, இந்தியா, சீரம்,

புதுடில்லி: ஆக்ஸ்போர்டு பல்கலை.யின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை, இந்தியாவில் இந்த வாரம் தொடங்கப்பட உள்ளது.

உலகம் முழுவதும் பெரிதாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. இதற்கான தடுப்பு மருந்து கண்டறிவதும் சோதனை அளவிலேயே இருக்கின்றன. ஆனால், ரஷ்யா மட்டுமே இதுவரை கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளது. அதிலும் பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக உள்ளதாக பலரும் விமர்சனத்தை முன்வைக்கின்றனர். அதேநேரத்தில், ஆக்ஸ்போர்டு பல்கலை., கண்டறிந்துள்ள தடுப்பூசியை மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதிக்கும் நடவடிக்கைகள் தொடங்க உள்ளன.


latest tamil news


இந்த தடுப்பூசியை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நூறு கோடி டோஸ்கள் உற்பத்தி செய்ய இந்தியாவின் சீரம் இன்ஸ்டியூட்டுடன் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. கோவிஷீல்டு எனப்படும் இந்த தடுப்பூசியை பரிசோதிக்கும் நடவடிக்கை, இந்த வராத்தில் தொடங்கப்பட உள்ளது. மும்பையின் இரு மருத்துவமனைகளில் தொடங்கப்படும் பரிசோதனையில், சளி போன்ற பொதுவான அறிகுறிகளை கட்டுப்படுத்துவதன் மூலம், கொரோனாவில் இருந்து பாதுகாப்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் மேற்கொள்ளும் இந்த பரிசோதனை இந்தியாவில் உள்ள 17 மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட உள்ளது.

புனே, வர்தா மற்றும் நாக்பூரில் தலா ஒரு மருத்துவமனையில் பரிசோதனை நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 400 பேரிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறித்தும், 1,200 பேரிடம் தடுப்பூசியின் பாதுகாப்புத்தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. 18 வயது முதல் 99 வயதுக்கு உட்பட்ட யார் வேண்டுமானாலும் இந்த பரிசோதனையில் பங்கேற்கலாம் என்றும், பரிசோதனையில் பங்கேற்பவர் நல்ல உடல் திறனுடன் இருப்பது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
19-ஆக-202017:48:39 IST Report Abuse
sankar சளி போன்ற பொதுவான அறிகுறிகளை கட்டுப்படுத்துவதன் மூலம், கொரோனாவில் இருந்து பாதுகாப்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இதை தானே கப சுற குடிநீர் செய்யுது
Rate this:
Cancel
sathis_kk - Singapore,சிங்கப்பூர்
19-ஆக-202011:53:53 IST Report Abuse
sathis_kk இந்திய மக்கள் என்ன சோதனை எலிகளை? எப்படி இந்த சோதனையை இந்தியாவில் அனுமதிக்கலாம்? அவர்கள் தயாரிக்கிறார்கள்... அப்படியென்றால் அவர்களே அவர் நாட்டில் பரிசோதிக்க வேண்டியது தானே.... ஏன் இந்தியர்கள் மீது பரிசோதிக்கவேண்டும். நம் மீதி பரிசோதித்து அதன் பின் உலகம் முழுவதும் நல்ல விலைக்கு மருந்தை விற்பார்கள்? என்ன கொடுமை இது? இதைவிட கேவலம் என்ன இருக்கிறது ?
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
19-ஆக-202011:09:13 IST Report Abuse
Tamilnesan தயவு செய்து வெகு சீக்கிரம் தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடுங்கள். தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழப்பதை தவிருங்கள். மனித குலத்திற்கு நீங்கள் செய்யும் சேவை பேருதவியாக இருக்கும். இந்தியாவில் ஒரு நல்லது நடந்தால் ஆயிரம் பேர் இதை தடுக்க முன்வருவார்கள். ஏனெனில், இங்கு கார்பொரேட் கொள்ளையர்கள் இருக்கிறார்கள். அவர்கள், தடுப்பூசி விரைவில் வெளியாவதை தடுக்க பார்ப்பார்கள். ஏனெனில், தடுப்பூசி வெளியானால் அவர்கள் வியாபாரம் பாதிக்கும். ஏழை மக்களிடம் உயிர்பயம் காட்டி பணம் பறிக்கும் வியாபாரிகளிடம் இருந்து பொது மக்கள் உயிரை விரைவில் காப்பாற்ற உதவுங்கள். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும், தவணை முறையில் மரணம் நிகழும். கொரநா அரக்கனை நிரந்தரமாக விரட்ட தடுப்பூசி தான் தீர்வு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X