பொது செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வு பயத்தால் கோவை மாணவி தற்கொலை

Updated : ஆக 19, 2020 | Added : ஆக 19, 2020 | கருத்துகள் (49)
Share
Advertisement

கோவை: 'நீட்' தேர்வு பயத்தால், 19 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.latest tamil news
கோவை, ஆர்.எஸ்.புரம் வெங்கடசாமி சாலை கிழக்குப் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். ஐ.டி.ஐ.,யில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள், சுபஸ்ரீ, 19. நாமக்கல் மாவட்டத்தில் சி.பி.எஸ்.சி., பாடப்பிரிவில் பிளஸ்2 முடித்த இவர், கடந்தாண்டு நீட் தேர்வு எழுதினார். அதில், 451 மதிப்பெண்கள் பெற்றவருக்கு பல் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்தது. இருப்பினும் 'எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர வேண்டும்' என, கோவையில் உள்ள தனியார் அகாடமியில் நீட் பயிற்சி பெற்று வந்தார்.


latest tamil news'கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்ட நீட் தேர்வு, வரும் செப்., மாதம் நடைபெறும்' என, அறிவிப்பு வெளியானது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், 'நீட் தேர்வு நடத்த எந்த தடையும் இல்லை' என, உத்தரவிட்டனர்.

இதனால், ஏற்கனவே நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவி சுபஸ்ரீக்கு மீண்டும் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மன உளைச்சலுக்கு உள்ளான சுபஸ்ரீ, வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 'நீட் தேர்வு குறித்து மாணவர்கள் பயப்பட வேண்டாம்' என, கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், மாணவி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
21-ஆக-202012:41:02 IST Report Abuse
mathimandhiri iddhu
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
20-ஆக-202012:43:39 IST Report Abuse
Krishnamurthy Venkatesan நடத்தாத பரீச்சைக்கு பயந்து தற்கொலை என்பது அந்த பெண்ணின் தன்னம்பிக்கை இன்மையை காட்டுகிறது. ஏற்கனவே நீட்டில் வெற்றி பெற்று பல் மருத்துவம் கிடைத்துள்ளது. A BIRD IN HAND IS WORTH THAN TWO IN THE BUSH - இந்த PROVERB இவருக்கு மறந்து போனது எனோ?
Rate this:
Cancel
Siva - Chennai,இந்தியா
19-ஆக-202023:43:53 IST Report Abuse
Siva Failing NEET doesn't mean end of the world. Trust me. I didn't even get an engineering degree, but I was able to achieve everything I wanted and even more. You need to keep working hard towards your goal without giving up. NEET is a national standard test which is required to ensure quality education and provide access to talented Kids across different school boards. Those who didn’t pass should go back to the drawing board and start preparing for a re-take. Suicide is coward's way of giving up. Parents should teach their kids how to prepare for the unexpected. Always plan for contingency. I have no pity for those who seek this way out to get out of trouble.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X