பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலை மூடலால் காப்பருக்கு கடும் தட்டுப்பாடு!

Updated : ஆக 21, 2020 | Added : ஆக 20, 2020 | கருத்துகள் (43)
Share
Advertisement
சென்னை : 'ஸ்டெர்லைட் ஆலை மூடலால், நாட்டின் தாமிர தேவைக்கு பற்றாக்குறை ஏற்பட்டு, வெளிநாடுகளில் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது; இது, பொருளாதாரத்தின் பின்னடைவை ஏற்படுத்தும்' என, தொழில்துறையினர் வேதனை தெரிவித்து உள்ளனர்.இந்திய சந்தையில், தாமிரத் தொழிலில் பெரும்பங்கு வகிப்பது, இந்துஸ்தான் காப்பர், ஹிண்டல்கோ மற்றும் வேதாந்தா நிறுவனங்கள். வேதாந்தா
Sterlite Copper verdict, Sterlite case, Madras HC, Thoothukudi, Madras high court, dismisses, Vedantas pleas, Tuticorin

சென்னை : 'ஸ்டெர்லைட் ஆலை மூடலால், நாட்டின் தாமிர தேவைக்கு பற்றாக்குறை ஏற்பட்டு, வெளிநாடுகளில் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது; இது, பொருளாதாரத்தின் பின்னடைவை ஏற்படுத்தும்' என, தொழில்துறையினர் வேதனை தெரிவித்து உள்ளனர்.

இந்திய சந்தையில், தாமிரத் தொழிலில் பெரும்பங்கு வகிப்பது, இந்துஸ்தான் காப்பர், ஹிண்டல்கோ மற்றும் வேதாந்தா நிறுவனங்கள். வேதாந்தா குரூப் நிறுவனம், துாத்துக்குடியில், 3,000 கோடி ரூபாய் முதலீட்டில், ஸ்டெர்லைட் என்ற பெயரில், தாமிர உருக்காலையை, 1997ல் உருவாக்கியது.

வெற்றிகரமாக செயல்பட்ட இந்த ஆலையை விரிவாக்க முயன்றபோது, எதிர்ப்பு கிளம்பியது. இந்த போராட்டம் ஆலையை மூடும் அளவுக்கு சென்று விட்டது. கடந்த, 2018ல் ஆலை மூடி, 'சீல்' வைக்கப்பட்டது. ஆலையை மூடிய அரசின் நடவடிக்கை சரியானதுதான் என, சென்னை உயர்நீதிமன்றமும் உத்தர விட்டுள்ளது.

இந்நிலையில், ஆலையை திறக்க, சட்ட ரீதியான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என, ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


600 கோடி வர்த்தகம் பாதிப்பு


இதுகுறித்து, ஸ்டெர்லைட் முதன்மை செயல் அதிகாரி பங்கஜ்குமார் அறிக்கை:நாட்டின் தாமிர உருக்குத் திறனில், ஸ்டெர்லைட் ஆலை, 40 சதவீதத் திறனைக் கொண்டுள்ளது. ஆலை மூடப்பட்டதால், ஆண்டுக்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தாமிரத்தை, இரண்டரை ஆண்டுகளாக இறக்குமதி செய்யும் நிலைக்கு, இந்தியா தள்ளப்பட்டுஉள்ளது.

ஆலை செயல்படாததால், நாள் ஒன்றுக்கு, 5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், துாத்துக்குடியில், ஆண்டுக்கு, 600 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆலையின் மூலப்பொருளை பெற்று உற்பத்தி செய்யும், பல்வேறு தொழிற்சாலைகளின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

எங்களிடம் தாமிரம் கிடைக்காமல், வெளிநாடுகளில் இருந்தும் பெறமுடியாமல், பல்வேறு ஆலைகள் செயல்படாமல் உள்ளன. ஆலையை திறக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


குறைந்தது உற்பத்தி


தொழில்துறையினர் கூறியதாவது: இந்தியாவில், 2019 -- 20ம் நிதியாண்டில், 340 ஆயிரம் டன் சுத்திகரிக்கப்பட்ட தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது, 2018 - -19ம் நிதியாண்டில், 379 ஆயிரம் டன்னாக இருந்தது.இதனால், சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தின் இறக்குமதி, 69 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், 18 ஆண்டுகளில் முதல்முறையாக, நிகர இறக்குமதியாளராக இந்தியா மாறி உள்ளது.

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆண்டுக்கு, 42.5 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த ஆலை, 2018, மே, 28ல் நிரந்தரமாக மூடப்பட்டதால், 2019 - 20ம் நிதியாண்டில் தாமிர உற்பத்தி, 46.1 சதவீதம் குறைந்தது. இது தவிர, உர உற்பத்திக்கு தேவையான முக்கியமான மூலப் பொருளை இறக்குமதி செய்யும் ஒரே நிறுவனம் ஸ்டெர்லைட்தான். தமிழகத்தின் சந்தையில், 100 சதவீதம் இடம் வகிக்கிறது.

தென்மாநிலங்களில் உள்ள, 30 சிமென்ட் உற்பத்தி ஆலைகளுக்கு தேவையான ஜிப்சம் மற்றும் கசடு ஆகியவை வினியோகம் செய்யப்படுகிறது. இது, தமிழகத்தின் சந்தையில், 75 சதவீதம் இடம் வகிக்கிறது.


நடவடிக்கை தேவை


மேலும், 2018- - 19ம் நிதியாண்டில், சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தின் தேவை, 7 லட்சம் டன். இது ஆண்டுதோறும், 10 சதவீதம் வரை அதிகரிக்கும்.கடந்த, 2018 வரை, எதிர்மின்முனை கொண்ட தாமிரத்தின் மொத்த ஏற்றுமதியாளராக இந்தியா இருந்தது. ஸ்டெர்லைட் ஆலை மூடிய பின், தாமிரம் ஏற்றுமதி, 87.4 சதவீதம் குறைந்துள்ளது.

இதனால், தாமிரத்தின் தேவைக்கு, வெளிநாடுகளில் கையேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த சிக்கல் தீர, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதுதான் தீர்வாக இருக்கும். இதற்கு, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


அரசு மீண்டும் மனு:


அரசு மீண்டும் மனு உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்ய உள்ளது. அதேநேரம், தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில், 'கேவியட்' மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, அரசு தரப்பை கேட்ட பின்பே, உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கும். ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில், வழக்கறிஞர் ஹரி ராகவன், உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
20-ஆக-202023:03:00 IST Report Abuse
sankaseshan ராஜஸ்தானிலும் ஹிந்துஸ்தான் காப்பர் கம்பனி இயங்குகிறது அங்கும் பிரச்னை இல்லை தூத்துக்குடி பாவாடைகளால் பிரச்னை . நாடு வளர்ச்சி அடைந்தாl
Rate this:
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
21-ஆக-202006:56:46 IST Report Abuse
மதுரை விருமாண்டிஅங்கு ஸ்மெல்டர் இல்லை.. விஷம் இல்லை.....
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
20-ஆக-202022:54:28 IST Report Abuse
மதுரை விருமாண்டி சீனாவின் பெரும் செப்பு இறக்குமதி காரணமாக உலக சந்தையில் செப்புக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவது முதல் காரணம். செப்பு தாது (copper ore) இறக்குமதி செய்து தமிழ்நாட்டின் சுற்றுசூழலை விஷமாகி செப்பு தயார் செய்து வந்த நிலை மாறி, நேரடியாக செப்பு உலோகம் இறக்குமதி செய்கிறோம். விஷம் கொட்டவேண்டுமென்றால் தமிழ்நாடா?? வேதாந்தா மேல் இவ்வளவு கரிசனம் என்றால் குஜராத் தனது சபர்மதி ஆற்றங்கரையில் எங்காவது அந்த விஷ ஆலையை கட்டிக்கொள்ளட்டுமே..
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
21-ஆக-202006:27:22 IST Report Abuse
Darmavanஆம்பூர் வாணியம்பாடி நொய்யலாறு எப்படி. அங்கே மக்கள் சாகவில்லையா. அது பற்றி பேச எவனுக்கும் துணிவில்லை....
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
20-ஆக-202022:42:34 IST Report Abuse
மதுரை விருமாண்டி இந்த அறிக்கை சுத்த வடிகட்டிய பொய்யறிக்கை, மற்றும் அரசாங்கத்தையும் பொதுமக்களையும் தவறாக வழிநடத்தும் நோக்கில் முற்றிலும் ஏமாற்றும் அறிக்கை. இயற்கை அழிவை பற்றி, சுற்றுசூழல் மாசு பற்றி சற்றும் கவலைப்படாத வேதாந்தா நிறுவனம், செப்புத் தாதுவை இறக்குமதி செய்து, தாதுவிலிருந்து செம்பைப் பிரித்தெடுத்து, இந்த செயல்பாட்டில் பல்லாயிரம் உயிர்களை கொன்று, இயற்கை சூழலை மாசுபடுத்தியது.. அதற்கு இப்போது விடிவு ஏற்பட்டுள்ளது. இந்தியா இப்போது செப்பு தாது இறக்குமதி செய்வதற்கு பதிலாக செப்பு உலோகத்தை இறக்குமதி செய்ய போகிறது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சில நூறு வேலைகள் இழந்துவிட்டன. ஆனால் வேதாந்தா தூத்துக்குடி ஸ்மெல்ட்டரில் இருந்து வெளிப்படும் அதி பயங்கர மாசுக்கள், வாயுக்களில் இருந்து விடுதலை என்பதால் பல லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
21-ஆக-202006:30:04 IST Report Abuse
Darmavanதேசத்துரோகி எதிரிகளின் கை கூலி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X