விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பது கடினம்: பினராயி

Updated : ஆக 20, 2020 | Added : ஆக 20, 2020 | கருத்துகள் (47)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தை பராமரிக்க, அதானி குழுமத்திடம் ஒப்படைக்கும் முடிவுக்கு கேரள அரசு ஒத்துழைப்பது கடினம் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.லக்னோ, ஆமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் கவுஹாத்தி ஆகிய ஆறு விமான நிலையங்களை பராமரிப்பதற்கான உரிமத்தை,
Difficult, Cooperate, Decision, HandOver, Airport, AdaniGroup, PinarayiVijayan

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தை பராமரிக்க, அதானி குழுமத்திடம் ஒப்படைக்கும் முடிவுக்கு கேரள அரசு ஒத்துழைப்பது கடினம் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

லக்னோ, ஆமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் கவுஹாத்தி ஆகிய ஆறு விமான நிலையங்களை பராமரிப்பதற்கான உரிமத்தை, அதானி குழுமம் பெற்றுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த விமானங்களில், மூன்றை பராமரிக்க ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெய்ப்பூர், கவுஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களை 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


latest tamil news


இந்நிலையில் மத்திய அரசின் முடிவை எதிர்த்து கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: மாநில அரசு முன்வைத்த வாதங்களுக்கு எந்தவித மதிப்பும் கொடுக்காமல் மத்திய அரசு ஒருதலைபட்சமாக எடுத்துள்ள முடிவைப் பார்க்கும்போது நாங்கள் அதற்கு ஒத்துழைப்பு கொடுப்பது கடினமாக இருக்கும். இது எங்கள் விருப்பத்திற்கு எதிராக எடுத்துள்ள முடிவு. இதனால் இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


latest tamil news


மாநில அரசு முக்கிய பங்குதாரராக உள்ளதால் தனியாரிடம் விமான நிலையத்தை ஒப்படைக்க வேண்டாமென நாங்கள் பலமுறை வைத்த கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கேரளா மாநில அரசு கொச்சி மற்றும் கண்ணூரில் உள்ள விமான நிலையங்களை சிறப்பாக நிர்வகித்து, மக்களுக்கு நல்ல விதமான அனுபவங்களை கொடுத்து வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesh Shetty - chennai,இந்தியா
29-ஆக-202009:57:48 IST Report Abuse
Ganesh Shetty சீனா நிறுவனம் ஒன்றில் ஒப்பந்தம் செய்தால் நாங்கள் ஆதரவு கொடுப்போம்😂😂😂
Rate this:
Cancel
Jit Onet - New York,யூ.எஸ்.ஏ
20-ஆக-202019:01:08 IST Report Abuse
Jit Onet ஜெயிலுக்கு போட ஊழல்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
20-ஆக-202018:12:20 IST Report Abuse
Endrum Indian ஏன்னா நாங்கள் ஈடுபட்டிருக்கும் கள்ளக்கடத்தல் வியாபார தங்கம் சவுதியில் இருந்து இந்த விமானநிலையத்திற்கு தான் வருகின்றது. அதானி குழுமம் வந்தால் எங்களுக்கு ரொம்ப ப்ரோப்லேம் ஆகி விடும்.
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
21-ஆக-202005:37:00 IST Report Abuse
Amal Anandanஅப்போ இவ்வளவு நாள் அந்த விமான நிலையம் மத்திய அரசிடம் இல்லையா? உளறலின் உச்சம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X