ராஜஸ்தான் காங்., அலுவலகத்தில் சச்சின் பைலட்

Updated : ஆக 20, 2020 | Added : ஆக 20, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில காங்., தலைவர் பதவி பறிக்கப்பட்ட பின், முதன்முதலாக சச்சின் பைலட் இன்று(ஆக.,20) காங்., அலுவலகம் சென்றார்.ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய சச்சின் பைலட்டிடம் இருந்து, துணை முதல்வர், மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகள் பறிக்கப்பட்டன. இதனால், கெலாட் அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காங்., எம்.பி., ராகுல், அவரது
Sachin Pilot, Congress, சச்சின் பைலட்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில காங்., தலைவர் பதவி பறிக்கப்பட்ட பின், முதன்முதலாக சச்சின் பைலட் இன்று(ஆக.,20) காங்., அலுவலகம் சென்றார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய சச்சின் பைலட்டிடம் இருந்து, துணை முதல்வர், மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகள் பறிக்கப்பட்டன. இதனால், கெலாட் அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காங்., எம்.பி., ராகுல், அவரது சகோதரி பிரியங்கா ஆகியோரை சச்சின் பைலட் சந்தித்து பேசியதையடுத்து, ராஜஸ்தான் காங்., கட்சிக்குள் நிகழ்ந்து வந்த மோதலில் திருப்பம் ஏற்பட்டது.

சச்சின் பைலட் எழுப்பிய பிரச்னையை விவாதிக்க 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. ஒற்றுமைக்குபின் ராஜஸ்தான் சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்ற காங்., கட்சி, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.


latest tamil news


இந்நிலையில் ராஜிவ்வின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக சச்சின் பைலட் இன்று காங்., அலுவலகம் வந்தார். மாநில தலைவர், துணை முதல்வர் பறிக்கப்பட்டபின், முதன்முறையாக அவர் காங்., அலுவலகம் வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
20-ஆக-202023:00:01 IST Report Abuse
Nagarajan D வெளிய போவாராம சண்டை போடுவாராம, கட்சி உடனே பதவிகளை பிடுங்குமாம் அப்புறம் நீயே கட்சிக்கு வந்துருவியாம்... என்னங்கடா நடக்குது இங்க
Rate this:
Cancel
thamodaran chinnasamy - chennai,இந்தியா
20-ஆக-202020:14:38 IST Report Abuse
thamodaran chinnasamy கடைசியில் இவரும் அரைவேக்காடு போல் ஆகிவிட்டார். தலைமை சரியில்லாத கட்சிக்கு தலைமை தாங்கும் தகுதிப்படைத்த இவர் தகுதியற்று ஆனாதைப்போல் நிற்கின்றார் .
Rate this:
Murugaiyapillai Vedaraju - Chennai,இந்தியா
20-ஆக-202021:21:04 IST Report Abuse
Murugaiyapillai Vedarajuதலைமை தாங்க தகுதி என்பதைவிட, "பதவி வெறி பிடித்தவர்" என்பதே சரி எந்த கட்சி பதிவி தருகிறதோ அந்த கட்சிக்கு செல்வதுதான் இவரது கொள்கை இவரை வசந்த ராஜே சிந்தியா நன்கு அறிந்து இருந்தததால் தான் இவரது பதவி வெறி யுக்தி ஏடுபடவில்லை...
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
21-ஆக-202014:01:44 IST Report Abuse
 Muruga Velபைலட் பின்னால் அப்துல்லாக்கள் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X