தமிழிசை கவர்னரா ? எம்எல்ஏ சர்ச்சை டுவிட்

Updated : ஆக 21, 2020 | Added : ஆக 21, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
ஐதராபாத்: தெலுங்கானா கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்திரராஜன் மாநில கவர்னரா, பாஜ., தலைவரா என சந்தேகம் எழுவதாக சர்ச்சைக்குரிய வகையில் டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.தெலுங்கானாவில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்தாலும் சோதனைகள் ஆமை வேகத்தில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஐதராபாத்
Governor, TamilisaiSoundararajan, TRS_MLA, SaidiReddy, Tweet, ActsLike, BJP_President, கவர்னர், தெலுங்கானா, தமிழிசை சவுந்திரராஜன், டிஆர்எஸ், எம்எல்ஏ, டுவிட்

ஐதராபாத்: தெலுங்கானா கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்திரராஜன் மாநில கவர்னரா, பாஜ., தலைவரா என சந்தேகம் எழுவதாக சர்ச்சைக்குரிய வகையில் டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தெலுங்கானாவில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்தாலும் சோதனைகள் ஆமை வேகத்தில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளன. இந்நிலையில், அம்மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‛கொரோனாவை கட்டுப்படுத்துவதில் டி.ஆர்.எஸ் அரசு மெத்தனமாக செயல்படுகிறது.
இதுகுறித்து அரசுக்கு 5, 6 முறை கடிதம் எழுதியும் எந்தப் பலனும் இல்லை. கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பது என்பது தெலுங்கானா அரசுக்கு சுமையாக மாறி விட்டதோ என தோன்றுகிறது. முதல்வர் சந்திரசேகர ராவிடம் இதுகுறித்து பேசும்போது சற்று காட்டமாகவே கூறியுள்ளேன்,' என பேட்டியளித்தார். இது தெலுங்கானா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது.


latest tamil newsஇந்நிலையில், தமிழிசையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஹூசுர்நகர் தொகுதி எம்எல்ஏ சைதி ரெட்டி, டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
நாட்டின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, கிராமங்களில் கூட அதிகளவில் சோதனைகள் மேற்கொள்ளப்படுவது தெலுங்கானா மாநிலத்தில் தான். முதல்வர் சந்திரசேகர ராவ் மேற்கொண்டுவரும் பல்வேறு திட்டங்களை மற்ற மாநிலங்களை காப்பி அடிக்கின்றன. மற்ற மாநிலங்களுக்கு நமது முதல்வர் ரோல்மாடலாக திகழ்கிறார். கவர்னர் தமிழிசையின் கருத்தை பார்க்கும்போது, அவர் தெலுங்கானா மாநில கவர்னரா, பாரதிய ஜனதா கட்சி தலைவரா என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.


latest tamil news
பதிவு நீக்கம்


இந்த டுவிட்டர் பதிவு, தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித்தலைமையின் உத்தரவுப்படி, சைதி ரெட்டி, அந்த டுவிட்டர் பதிவை நீக்கிவிட்டார். டிஆர்எஸ் கட்சியின் இந்த உத்தரவுக்கு அம்மாநில பாஜ., கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amal Anandan - chennai,இந்தியா
21-ஆக-202022:21:29 IST Report Abuse
Amal Anandan தெலுங்கானா அரசு கொரோனாவை கையாளும் விதம் சரியாகவே இல்லை. அவர்கள் சோதனை செய்யும் அளவும் மிகக்குறைவு. சந்திரசேகருக்கு போதாத காலம்.
Rate this:
Cancel
Thiru - Chennai,இந்தியா
21-ஆக-202018:00:37 IST Report Abuse
Thiru மேதகு ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் மிகவும் திறமைசாலி, . மேலும் நேர்மையான முன் நாள் காங்கிரஸ் தலைவரின் மகள், நல்ல டாக்டர் ... எனக்கு டிநகரில் ஒரு ஆட்டோக்காரர் சொன்னது "ரூ.50 மட்டுமே டாக்டர் பீஸ் வாங்குகிறார் ". எல்லோராலும் எளிதாக அணுகமுடியும். ஆனால் திருடர் முன்னேற்ற கழகம் மற்றும் மதம் மாற்றும் குபைல்கள் அவரை இழிவாக சித்தரித்து வாட்"meems" ஆனுப்பி பரவ செய்தனர் . நாம்தான் ஏதேனும் ஆராயாமல் வாரிஜாலத்திற்கும் போலி கேலிக்கும் மயங்கும் மக்களாயிற்றே. அவர் தமிழகத்திற்கு ஆளுநராக வரவேண்டும். .
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
23-ஆக-202004:15:56 IST Report Abuse
Amal Anandanஇவரை கேலியாகத்தானே எப்போதும் சித்தரிக்கிறது....
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
21-ஆக-202017:59:49 IST Report Abuse
Balasubramanian Ramanathan சண்டைக்கு கிளம்புவார்களே அறம் காக்கும் அருமை சகோதரர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X