புதுடில்லி: நாட்டின் உயரிய 'கேல் ரத்னா' விருதுக்கு ரோகித் சர்மா (கிரிக்கெட்), மாரியப்பன் (தடகளம்), ராணி ராம்பால் (ஹாக்கி), மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்), வினேஷ் போகத் (மல்யுத்தம்) என, 5 பேருக்கு வழங்கப்படுகிறது.
இந்திய ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் பிறந்த நாளான ஆக. 29ம் தேதியை, தேசிய விளையாட்டு தினமான கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில், விளையாட்டுத்துறையில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு மத்திய அரசு சார்பில் 'கேல் ரத்னா', 'அர்ஜுனா' உள்ளிட்ட விருது வழங்கி கவுரவிக்கப்படும்.இதற்கு தகுதியானவர்களை பரிந்துரைக்க சேவக், சர்தார் சிங், தீபா மாலிக் உள்ளிட்ட 12 பேர் கொண்ட தேர்வுக்குழு கூட்டம், சமீபத்தில் டில்லியில் நடந்தது.

கேல் ரத்னா விருது
இதில் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, 'பாரா' தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு, பெண்கள் ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா மற்றும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோருக்கு 'கேல் ரத்னா' விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டது.இதனை ஏற்றுக் கொண்ட மத்திய விளையாட்டு அமைச்சகம், அனைவருக்கும் 'கேல் ரத்னா' விருது அறிவித்தது. இதன்மூலம் முதன்முறையாக 5 பேருக்கு 'கேல் ரத்னா' விருது வழங்கப்படுகிறது.
4வது வீரர்
இந்திய கிரிக்கெட் வீரர்களில் கேல்ரத்னா விருதை பெறும் 4வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். இதற்கு முன்பு, சச்சின் டெண்டுல்கர், தோனி, விராட் கோஹ்லி, ஆகியோர் பெற்றுள்ளனர்.
தயான்சந்த் விருது
தமிழகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரர் ரஞ்சித் குமார், குல்தீப் சிங்(தடகளம்) ஜின்சி பிலிப்ஸ்(தடகளம்) என்.உஷா(குத்துச்சண்டை) நந்தன் பி பால்(டென்னிஸ்) உள்ளிட்ட 15 வீரர்களுக்கு தயான்சந்த் விருது வழங்கப்பட உள்ளது.
துரோணாச்சார்யா விருது
13 பயிற்சியாளருக்கு, இந்த ஆண்டு துரோணாச்சார்யா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மேந்திரா திவாரி(வில்வித்தை) ஷிவ் சிங்(குத்துச்சண்டை) நரேஷ் குமார்(டென்னிஸ்) ஜூட் பெலிக்ஸ்(ஹாக்கி), ஜஸ்பல் ராணா(துப்பாக்கிச்சுடுதல்) உள்ளிட்ட 13 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜூனா விருது பெறுபவர்கள்
அதானு தாஸ்(வில்வித்தை)
டூட்டி சந்த்(தடகளம்)
சாத்விக் சைராஜ்(பாட்மின்டன்)
சிராக் சந்திரசேகர்(பாட்மின்டன்)
விஷேஷ்(கூடைப்பந்து)
சுபேதார் மணிஷ் கவுசிக்(குத்துச்சண்டை)
வல்லினா(குத்துச்சண்டை)
இஷாந்த் சர்மா(கிரிக்கெட்)
தீப்தி சர்மா( கிரிக்கெட்)
சாவந்த் அஜய்(குதிரையேற்றம்)
சந்தேஷ்(கால்பந்து)
அதிதி அசோக்(கோல்ப்)
ஆகாஷ்தீப் சிங்(ஹாக்கி)
தீபிகா(ஹாக்கி)
தீபக்(கபடி)
கேல் சரிகா( கோ கோ)
தத்து பாபன்(துடுப்புப் படகு)
செளரப் செளத்ரி(துப்பாக்கிச்சுடுதல்)
மானு பாக்கர்(துப்பாக்கிச்சுடுதல்)
மதுரிகா(டேபிள் டென்னிஸ்)
திவிஜ் சரண்(டென்னிஸ்)
ஷிவா கேசவன்(குளிர்கால விளையாட்டு)
திவ்யா(மல்யுத்தம்)
ராகுல் அவரே(மல்யுத்தம்)
சுயாஷ் (நீச்சல், மாற்றுத்திறனாளி)
சந்தீப்(தடகளம், மாற்றுத்திறனாளி)
மணிஷ்(துப்பாக்கிச்சுடுதல், மாற்றுத்திறனாளி)
வரும் 29 ம் தேதி தேசிய விளையாட்டு தினத்தன்று, இந்த விருதுகளை ஜனாதிபதி வழங்க உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE