அரசியல் செய்தி

தமிழ்நாடு

எதிர்க்கட்சிகளை புறக்கணிக்குது அதிமுக அரசு: ஸ்டாலின்

Updated : ஆக 23, 2020 | Added : ஆக 21, 2020 | கருத்துகள் (57)
Share
Advertisement
சென்னை: 'அரசு விழாக்கள், ஆய்வு கூட்டங்களில், எதிர்க்கட்சி எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை பங்கேற்கவிடாமல், வேண்டுமென்றே தொடர்ந்து, அ.தி.மு.க., அரசு புறக்கணிப்பது கண்டனத்துக்குரியது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறிஉள்ளார்.அவரது அறிக்கை: தர்மபுரியில் நடந்த, கொரோனா குறித்த ஆய்வு கூட்டத்தில், தி.மு.க., - எம்.பி., செந்தில்குமாரை அனுமதிக்கவில்லை. 'நான் நடத்தும் ஆய்வு கூட்டங்களில்,
DMK, MK Stalin, Stalin, AMDK, அதிமுக, திமுக, ஸ்டாலின்

சென்னை: 'அரசு விழாக்கள், ஆய்வு கூட்டங்களில், எதிர்க்கட்சி எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை பங்கேற்கவிடாமல், வேண்டுமென்றே தொடர்ந்து, அ.தி.மு.க., அரசு புறக்கணிப்பது கண்டனத்துக்குரியது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறிஉள்ளார்.

அவரது அறிக்கை: தர்மபுரியில் நடந்த, கொரோனா குறித்த ஆய்வு கூட்டத்தில், தி.மு.க., - எம்.பி., செந்தில்குமாரை அனுமதிக்கவில்லை. 'நான் நடத்தும் ஆய்வு கூட்டங்களில், எம்.பி.,யை எப்படி அனுமதிக்க முடியும்' என, முதல்வர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பியிருப்பது ஜனநாயக விரோதம்; பண்பாடற்ற செயல்; அநாகரிகத்தின் உச்சம்.

வேலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும், தி.மு.க., - எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்.அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம், கட்சி நடத்தும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்க அனுமதி கேட்கவில்லை. கொரோனா நோய், மரணங்களை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தான் அனுமதி வேண்டும் என, தி.மு.க., - எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கேட்கின்றனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அவமதிக்கும் போக்கை, முதல்வரும், அ.தி.மு.க., அமைச்சர்களும் கைவிட வேண்டும். கைவிடாவிட்டால், மேலும் கடுமையாக மக்கள் தண்டிப்பர்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.


'தவறான செயல்பாடு'


தி.மு.க., - எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா பரவலுக்கு, அ.தி.மு.க., அரசின் முறையற்ற திட்டமிடல் மற்றும் தவறான செயல்பாடே காரணம். நோய் தொற்று, 3.40 லட்சத்துக்கும் மேற்பட்டோரை பாதித்து, 6,000த்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். கட்சி பேதங்களை தாண்டி, அதற்கான காரணங்களை ஆராய்ந்து, முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
23-ஆக-202018:31:37 IST Report Abuse
S.Ganesan திமுக எம் பி என்ன கொரோனா சிறப்பு மருத்துவரா? ஏற்கனவே ஸ்டாலின் பல ஆலோசனைகளை தான் வழங்கி உள்ளதாக மார் தட்டுகிறார். இவர்கள் பேச்சை கேட்டால் வேறு வினையே வேண்டாம்
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
23-ஆக-202000:19:47 IST Report Abuse
Ramesh R நீங்க உங்க காட்ச்சியில் சீனியர்களை புறக்கணிகிறீர்களே
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
23-ஆக-202000:05:00 IST Report Abuse
s t rajan எதிர் கட்சிகள் எதிரிகள் போல் நடந்து கொண்டால்.... ஒதுக்கப் பட்டால் போதாது , ஒடுக்கப் படவேண்டும், நாட்டு நலன் கருதி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X