அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரவுடிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை: முதல்வர் இ.பி.எஸ்., திட்டவட்டம்

Updated : ஆக 23, 2020 | Added : ஆக 22, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
நாமக்கல் : ''ரவுடிகளை ஒடுக்க, அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., கூறினார்.நாமக்கல்லில், வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பின், முதல்வர் அளித்த பேட்டி: தமிழகத்தில், நேற்று முன்தினம் வரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 3 லட்சத்து, 61 ஆயிரத்து, 435. நோய்
CM, EPS, Tamil Nadu, Edappadi K Palaniswami, Edappadi Palaniswami, Edappadi, Palaniswami

நாமக்கல் : ''ரவுடிகளை ஒடுக்க, அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., கூறினார்.

நாமக்கல்லில், வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பின், முதல்வர் அளித்த பேட்டி: தமிழகத்தில், நேற்று முன்தினம் வரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 3 லட்சத்து, 61 ஆயிரத்து, 435. நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தான் இந்தக் கூட்டம். இதில், தி.மு.க., உட்பட எதிர்க்கட்சியினர் யாரையும் தடை செய்யவில்லை; யாரும் வரலாம்.

அவர்கள் வரும்போது, கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். யாரையும் புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம், அரசுக்கு கிடையாது. யார் வேண்டுமானாலும் கோரிக்கை வைக்கலாம். நாங்க கூடத்தான் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். அனைத்தும் நிறைவேறுகிறதா என்ன?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில், சட்டம் - ஒழுங்கை பேணி காப்பதில், முதல் மாநிலமாக, தமிழகம் விளங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதில் முதன்மையாக விளங்கும் மாநிலம் தமிழகம் என, ஒரு பத்திரிகை, கவுரவப்படுத்தி பரிசும் கொடுத்துள்ளது.

ஒரு சில சம்பவத்தை வைத்து எடை போட்டு விடக்கூடாது. ஒட்டுமொத்தமா பார்க்க வேண்டும். ரவுடிகளை அடக்க வேண்டும். ரவுடித்தனம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

முன்னதாக, ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் பேசுகையில், ''நோய் பரவல், தமிழகத்தில் பெருமளவில் தடுக்கப்பட்டிருக்கிறது. பொது மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் தான், இந்நோய் பரவலை தடுக்க முடியும்,'' என்றார். நிகழ்ச்சியில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajam Krishnamoorthy - Mumbai,இந்தியா
23-ஆக-202008:35:27 IST Report Abuse
Rajam Krishnamoorthy Roudisum never until politician roudy ends, both Tamil Nadu political parties are cheating the peoples by giving falls promise and police department has no backbone to action against political roudy. Same condition almost all states, we need man like Annadurai IPS in police department. Next any party come to power will increase roudisum so no one can control them until Tamilians change their attitude to vote against these two political party.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
22-ஆக-202021:16:50 IST Report Abuse
RajanRajan அப்போ தமிழகம் அமைதி பூங்கான்னு ஆளாளுக்கு வுட்டு கூவினாங்களே. அதெல்லாம் ஜோக்கா???
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
22-ஆக-202021:13:01 IST Report Abuse
RajanRajan ஊழல் அரசியல்வாதிகள் அதிகாரிகளை என்ன பண்ணுவீங்க அண்ணா? என்கவுன்டர் பண்ணிடலாமா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X