பொது செய்தி

தமிழ்நாடு

மின் கட்டண வசூல்: மாதந்தோறும் சாத்தியமா?

Updated : ஆக 22, 2020 | Added : ஆக 22, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
திருப்பூர்: ''மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்த வேண்டும் என்றால், ஊழியர் எண்ணிக்கை, உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு போன்றவை அவசியம்'' என்று மின்வாரிய ஊழியர்கள் கூறுகின்றனர்.இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, தற்போது அமலில் உள்ளது. ஊரடங்கு காலத்தில், மின் ஊழியர்களால், மின்கட்டண மதிப்பீடு செய்ய வர இயலவில்லை. இதனால், மூன்று,
மின்கட்டணம், வசூல், மின்வாரியம்

திருப்பூர்: ''மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்த வேண்டும் என்றால், ஊழியர் எண்ணிக்கை, உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு போன்றவை அவசியம்'' என்று மின்வாரிய ஊழியர்கள் கூறுகின்றனர்.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, தற்போது அமலில் உள்ளது. ஊரடங்கு காலத்தில், மின் ஊழியர்களால், மின்கட்டண மதிப்பீடு செய்ய வர இயலவில்லை. இதனால், மூன்று, நான்கு மாதங்களுக்கான மின் கட்டண தொகை கணக்கிட்டது. கட்டணத்தில் ஸ்லாப் நடைமுறை காரணமாக, தாங்கள் முன்பு செலுத்தி வந்த கட்டணத்தை காட்டிலும், மும்மடங்குத்தொகையை, மின்நுகர்வோர் செலுத்த வேண்டியிருந்தது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் தவித்த மின் நுகர்வோருக்கு, இது சுமையை ஏற்படுத்துவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், மாதந்தோறும், மின்கட்டணம் வசூல் செய்யும் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக மின்துறை அமைச்சர் கூறியிருந்தார்.


latest tamil news



இது தொடர்பாக மின்வாரியத்தினர் கூறியதாவது: மாதந்தோறும் மின்கட்டணம் வசூலிப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளன. ஊழியர் பற்றாக்குறை, உள்கட்டமைப்பு வசதி குறைபாடு போன்றவை உள்ளன. இவை நிவர்த்தி செய்யப்படும்போது, மாதந்தோறும் மின்கட்டண வசூல் என்பது எளிதாகும்.

இதை சரிசெய்யாமல் பின்பற்றினால், அது மின் வாரிய ஊழியர்களின் பணிச்சுமையை அதிகரிக்கும். மேலும், 'ஸ்லாப்' நடைமுறையிலும், மாற்றம் கொண்டு வர வேண்டியிருக்கும். எனவே, மாதந்தோறும், மின் கட்டண வசூல் நடைமுறையை தற்போது சாத்தியம் இல்லை. கொரோனா பரவல் முடிவுக்கு வந்த பின் இதை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்வதே சரியானதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
22-ஆக-202020:29:57 IST Report Abuse
Suppan இன்றைய தொழில்நுட்ப உலகில் மாதாந்திர கணக்கு சரிவராது என்று சொல்வது காதில் பூ சற்றும் வேலை. ஸ்மார்ட் மீட்டர், ஆட்டோ ரெகார்டிங் முறைகளில் மிக சுலபமாக கணக்கிடலாம். பொது மக்களே தங்கள் மீட்டர் ரீடிங்கை குறுஞ்செய்தி மூலம் அனுப்பலாம். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ரீடிங் எடுத்து கணக்கை நெறிப்படுத்த முடியும். வங்கியின் டைரக்ட் டெபிட், யு பி ஐ பெய்மென்ட் வசதிகள் மூலம் பணம் சுலபமாக வசூலிக்க முடியும். இதற்கு ஆட்கள் தேவையில்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு
Rate this:
Cancel
R S BALA - Tiruvallur,இந்தியா
22-ஆக-202019:14:25 IST Report Abuse
R S BALA மின் நுகர்வர்களுக்கு இதனால் மின்கட்டணம் குறையுமென்றால் 15 நாட்களுக்கு ஒரு முறை கூட கட்டணம் செலுத்த நாங்கள் தயார் ..
Rate this:
Cancel
22-ஆக-202019:01:48 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K மாதம்தோறும் மின் கட்டணம் என்பது சிறந்த முறை. முடியாவிட்டால் ஸ்லாப் முறையிலான கட்டணத்தை கை விட வேண்டும். இல்லையென்றால் கூடுதல் மீட்டர் ஒன்றை பொருத்தி மின் கட்டணத்தை குறைக்க வழிவகை செய்ய வேண்டும். அதற்காக ஆதார், பான் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டைகளை அடிப்படையாக கொண்டு கூடுதல் இணைப்பு தரலாம். கூடுதல் இணைப்புக்கு வீட்டு பத்திரம் வேண்டும் என்று 21 ஆம் நூற்றாண்டில் வந்து அடம் பிடிப்பது கொண்டிருப்பது சரியல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X