அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது இந்தி அரசல்ல, இந்திய அரசு: கமல் டுவிட்

Updated : ஆக 22, 2020 | Added : ஆக 22, 2020 | கருத்துகள் (79)
Share
Advertisement
AyushProgramme, MNM, KamalHaasan, Hindi, ஆயுஷ் அமைச்சகம், ஹிந்தி, இந்தி, மக்கள் நீதி மய்யம், மக்கள் நீதி மையம், கமல்ஹாசன், கமல், இந்தி அரசல்ல, இந்திய அரசு

சென்னை: மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் காணொளி வகுப்பில் இந்தியில் பயிற்சி எடுத்ததாக எழுந்த சர்ச்சைக்குறித்து கருத்து தெரிவித்த மக்கள் நீதி மையம் தலைவர் கமல், ‛இது இந்தி அரசல்ல இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம்,' என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் காணொளி பயிற்சி வகுப்பில் பல்வேறு இந்திய மாநிலங்களை சேர்ந்த சித்த, ஆயுர்வேத மருத்துவர்களும் கலந்து கொண்டுள்ளனர். அதில் இந்தியில் மட்டும் பேசியதால், இந்தி தங்களுக்கு தெரியாது என்றும் எல்லாருக்கும் புரியும்படி ஆங்கிலத்தில் பேசுமாறும் சிலர் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்தி தெரியாதவர்கள் தாராளமாக வெளியேறலாம் என அவர்கள் கூறியதாகவும், வடஇந்தியாவைச் சேர்ந்த பலருக்கும் ஆங்கிலம் தெரியாததால் பயிற்சிக் கூட்டத்தை ஆயுஷ் செயலர் இந்தியில் நடத்தினார் எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.


latest tamil news


இதுகுறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல் எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர்களின் பெருந்தன்மை. அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்கவேண்டியது அரசின் கடமை. இது இந்தி அரசல்ல. இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம். வாழிய பாரத மணித்திருநாடு. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
selvaraj - chennai,இந்தியா
23-ஆக-202023:54:56 IST Report Abuse
selvaraj என்னுடைய கருத்தில் என்ன ஆபாசம் உள்ளது அய்யா
Rate this:
Cancel
Hari - chennai,இந்தியா
23-ஆக-202015:04:32 IST Report Abuse
Hari நாங்க என்ன சிங்கள அரசு எனவ சொன்னோம் ,போயா பொய் ,கட்டுமரம் போல தமிழனுக்கு கட்டு காட்டாக ரீல் விடு போதும்.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
23-ஆக-202006:10:43 IST Report Abuse
meenakshisundaram யோவ் இது அண்ணாதுரை காலம் அல்ல -இந்த டைலாக் எடுபடாது ,இது தெரியாம கட்சி நடத்துறியே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X