லண்டன்: இங்கிலாந்தில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற ஏலத்தில் மகாத்மாகாந்தியின் தங்க முலாம் பூசப்பட்ட கண்ணாடி ரூ.2.5 கோடிக்கு ஏலம் போனது.

இது குறித்து கூறப்படுவதாவது:இங்கிலாந்தின் கிழக்கு பிரிஸ்டல் ஏல நிறுவனம் , மகாத்மா காந்தி அணிந்திருந்த தங்க முலாம் பூசப்பட்ட கண்ணாடியை ஆன்லைன் மூலம் ஏலம் விடுத்தது. ஏலத்தின் துவக்க தொகையாக 15 ஆயிரம் பவுண்டுகள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 14லட்சத்து 71 ஆயிரத்து 180க்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்தியா, கத்தார், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து ஏலம் கேட்கப்பட்டது. இறுதியில் அமெரிக்காவை சோ்ந்த ஆன்ட்ரூ ஸ்டோவ் என்பவர் இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் எடுத்தார். இந்திய மதிப்பில் ரூ. 2 கோடியே 55 லட்சத்து 463- ஆகும்.

இது குறித்து ஏல நிறுவனம் கூறுகையில் நம்ப முடியாத பொருளுக்கு நம்ப முடியாத முடிவு என தெரிவித்துள்ளது. மேலும் காந்தியின் கண்ணாடிகளை ஏலம் விடுத்ததன் மூலம் வரலாற்று முக்கியத்துவத்தை கண்டறிந்துள்ளது. காந்தியின் கண்ணாடிகள் எல்லா எதிர்பார்ப்புகளையும், முந்தைய பதிவுகளையும் தாண்டி விட்டன. இது ஒரு சிறந்த நாள். ஏலம் எடுத்தவர்களுக்கு நன்றி என கூறி உள்ளது.

தங்க முலாம் பூசப்பட்டடுள்ள காந்தி கண்ணாடியானது,. காந்தி 1920ம் ஆண்டில் தென் அமெரிக்காவில் இருந்த போது தனது பிரிட்டன் நண்பருக்கு வழங்கி இருந்ததாகவும், அவை இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகருக்கு அருகே உள்ள மங்கோட்ஸ் பீல்டு என்ற கிராமத்தை சேர்ந்த முதியர் ஒருவரிடம் இருந்துள்ளது. தற்போது கிழக்கு பிரிஸ்டல் ஏல நிறுவனத்தின் அலுவலக போஸ்ட் பாக்சில் இருந்தது. என தெரிவித்துள்ளது. இந்த ஏல தொகை மூலம் காந்தியின் கண்ணாடியை வைத்திருந்தவர் தன்னுடைய வாழ்க்கை யை மாற்றி அமைத்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE