இஸ்தான்பூல்: துருக்கியின் இஸ்தான்பூல் நகரில் உள்ள சோரா தேவாலயத்தை மசூதியாக மாற்ற அந்நாட்டு அதிபர் தயிப் எர்டோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த மாதம் ஹாகியா சோபியா என்ற தேவாலயம் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் 70 ஆண்டுகளுக்கு முன் அருங்காட்சியகமாக மாற்றம் செய்யப்பட்ட சோரா தேவாலயத்தையும் மசூதியாக மாற்ற அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

முதன்முதலில் 4ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சோரா தேவாலயம், பூகம்பம் காரணமாக சேதம் அடைந்து 200 ஆண்டுகளுக்கு பின் புதுப்பிக்கப்பட்டது. 14ம் நூற்றாண்டின் பைசண்டைன் மொசைக்கால் ஆனது மற்றும் பைபிளில் இடம் பெற்றுள்ள சம்பவங்களின் காட்சிகளை பிரதிபலிக்கும் ஓவியங்களை இது கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதிபரின் உத்தரவைத் தொடர்ந்து ஆக.,21 வெள்ளியன்று ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகைக்காக சோபியா அருங்காட்சியகத்திற்கு வந்தனர். ஹாகியா சோபியா போன்று இதுவும் பிரசித்தி பெற்ற மசூதியாக இனிமேல் மாறும் என அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE