தெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 77.29 சதவீதமாக உயர்வு | Dinamalar

தெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 77.29 சதவீதமாக உயர்வு

Updated : ஆக 22, 2020 | Added : ஆக 22, 2020 | |
ஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மீட்பு விகிதம் 77.29 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. தெலுங்கானாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கையை மேற்கொள்கிறது. மாநிலத்தின் நேற்று ஒரே

ஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மீட்பு விகிதம் 77.29 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



தெலுங்கானாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கையை மேற்கொள்கிறது. மாநிலத்தின் நேற்று ஒரே நாளில் புதிதாக 2,474 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது. இதனால் நோய் தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,01,865 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் கொரோனாவால் 7 பேர் பலியாகி உள்ளனர். மாநிலத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 744 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news



கடந்த 24 மணிநேரத்தில் 1,768 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,735 ஆக அதிகரித்தது. தெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 77.29 சதவீதமாக உள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில் நாட்டின் மீட்பு விகிதம் 74.30 சதவீதமாக உள்ளது. மாநிலத்தில் 22,386 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவற்றில் 15,931 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர். தினமும் 20,000 பேரின் மாதிரிகள் பரிசோதினைக்காக சேகரிக்கப்படுகின்றன. இந்நிலையில் புதிதாக 43,095 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் 2,474 பேருக்கு தொற்று உறுதியானது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X