அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆயுஷ் கூட்டத்தில் ஹிந்தி: கட்சிகள் கண்டனம்

Updated : ஆக 24, 2020 | Added : ஆக 22, 2020 | கருத்துகள் (62)
Share
Advertisement
சென்னை :'தமிழக யோகா மற்றும் இயற்கை மருத்துவ டாக்டர்களிடம், அநாகரிகமாக நடந்துள்ள, ஆயுஷ் துறை செயலர் ராஜேஷ் கோட்சே மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.மத்திய அரசு ஏற்பாடு செய்த இணைய வழி கருத்தரங்கில்,ஆயுஷ் அமைச்சக செயலர் ராஜேஷ் கோட்சே, ஆங்கிலத்தில் பேசாமல், ஹிந்தியில் பேசினார். தமிழகத்தைச் சேர்ந்த இயற்கை
ஆயுஷ் கூட்டத்தில் ஹிந்தி: கட்சிகள் கண்டனம்

சென்னை :'தமிழக யோகா மற்றும் இயற்கை மருத்துவ டாக்டர்களிடம், அநாகரிகமாக நடந்துள்ள, ஆயுஷ் துறை செயலர் ராஜேஷ் கோட்சே மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு ஏற்பாடு செய்த இணைய வழி கருத்தரங்கில்,ஆயுஷ் அமைச்சக செயலர் ராஜேஷ் கோட்சே, ஆங்கிலத்தில் பேசாமல், ஹிந்தியில் பேசினார். தமிழகத்தைச் சேர்ந்த இயற்கை மருத்துவ டாக்டர் ஒருவர், ஆங்கிலத்தில் பேசும்படி கூறியுள்ளார். அதற்கு, ராஜேஷ் கோட்சே, 'ஹிந்தி தெரியாதவர்கள், இந்த பயிற்சி வகுப்பை விட்டு வெளியேறுங்கள்' என, கூறியிருக்கிறார். இந்த சம்பவத்திற்கு, தமிழக கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


தி.மு.க., தலைவர் ஸ்டாலின்:தமிழக யோகா மற்றும் இயற்கை டாக்டர்களிடம் அநாகரிகமாக நடந்துள்ள, ஆயுஷ் துறை செயலர் ராஜேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்தியில் உள்ள அதிகாரிகளை வைத்து, ஹிந்தியைத் திணிப்பது தான் திட்டம் என்ற, பா.ஜ., அரசின் எண்ணத்தை, இது வெளிப்படுத்துகிறது.மத்திய அரசின் கூட்டங்கள், ஹிந்து பேசாத மாநிலங்களுக்கு இடையே, இணைப்பு மொழியாக இருக்கும் ஆங்கிலத்தில் தான் நடத்த வேண்டும் என, பிரதமருக்கு முதல்வர் அழுத்தம் கொடுக்க வேண்டும்.தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி:மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் ராஜேஷ் கோட்சே, அமைச்சகத்தின் பயிற்சி வகுப்பில், ஹந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என சொல்லிருப்பது, மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு கொள்கையை அப்படியே, பிரதிபலிப்பதாக இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு உடனே, அந்த செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் எத்தனை நாள், ஹிந்தி தெரியாது என்பதால், அவமதிக்கப்படுவதை பொறுத்துக் கொள்ளப் போகிறோம்.தமிழக


காங்கிரஸ் தலைவர் அழகிரி:ஹிந்தி பேசாத மக்களுக்கு, ஆங்கிலத்தின் வாயிலாக தான் தொடர்பு கொள்ள வேண்டும் என, ஆட்சிமொழி சட்ட திருத்தம் கூறுகிறது. அத்தகைய சட்டப் பாதுகாப்பை மீறுகிற வகையில், மத்திய ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள், ஹிந்தி மொழியை திணித்திருக்கின்றனர்.


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:ஆயுஷ் பயிற்சி முகாமில், ஹிந்தியை திணித்து, தமிழக டாக்டர்களை அவமானப்படுத்தி மிரட்டிய, மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் ராஜேஷ் கோட்சேவுக்கு, தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும். ஆங்கிலத்தில் வகுப்பு நடத்தும்படி கோரியதற்காக, மாநில அரசு பணியில் உள்ள டாக்டர்களை மிரட்டுவதும், அவர்களை பற்றி விசாரிப்பதும், அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுத வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
24-ஆக-202000:14:17 IST Report Abuse
rajan இவர்களுக்காக பரிதாபப்படுகிறேன் மிகவும் மலிவான அரசியல் செய்கிறார்கள். ஆனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. தமிழ்நாடு என்ன தனி நாடா . ஹிந்தி என்பது இந்தியனின் பொதுவான பாசை. உங்களுக்கு வேண்டுமானால் கசக்கலாம். இந்தித் திணிப்பு என்று இவர்களாகவே கூறிக்கொண்டு இதை சாக்காக மத்திய அரசை விமர்சனம் செய்ய வேண்டும் என்பது மட்டுமே இவர்களது கொள்கை. ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் மோடி அவர்களின் மாத்ரு பாஷை குஜராத்தி இந்தி அல்ல ஆனால் அவர் இந்தி பேசுவார் எழுதுவார் படிப்பார். அதுபோன்றுதான் மம்தா பேனர்ஜி அவர்களின் தாய்மொழி பங்காளி ஆனால் அவர் ஹிந்தி பேசுவார் படிப்பார் எழுதுவார். தமிழ்நாட்டைத் தவிர எல்லா மாநிலங்களிலும் மக்களுக்கு இந்தி தெரியும். ஆனால் இங்குள்ள கூட்டம் இந்தி படித்துவிட்டால் இவர்களுடைய சொத்து அழிந்து விடுவது போல் நாடகம் ஆடுகிறார்கள். இதுவரை இவர்களுடைய பள்ளிக்கூடங்களில் ஹிந்தி சொல்லிக் கொடுப்பதை நிறுத்த முடியுமா என்று பலர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. காரணம் அது யாபாரம். உன்னை யார் இவர்களுடைய பள்ளிகளில் சேர சொன்னது உங்களை வந்து விட்டார்களா என்று ஒரு வாசகர் எழுதியுள்ளார் ஆனால் இவர்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில் ஏன் இந்தி மற்றும் சமஸ்கிருதம் சொல்லித் தருகிறார்கள் என்ற வினாவிற்கு பதிலளிக்க முடியவில்லை. இந்தி மற்றும் சமஸ்கிரதத்தை வைத்து வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள் அது மட்டும் தான் அவர்களுடைய நோக்கம். இவர்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்கள் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆகவே பணம் கட்டி இந்தி கற்றுக் கொள்கிறார்கள் ஆனால் ஏழை மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் தமிழை தவிர மற்ற மொழிகளை கற்பதற்கு வாய்ப்பு இல்லை. எல்லா மாணவர்களும் எந்த மொழி வேணாலும் படிக்கலாம் அதற்காகத்தான் நவோதயா பள்ளிக்கூடங்களை மத்திய அரசு நடத்துகிறது தமிழ்நாட்டை தவிர. நவோதயா பள்ளி கூடங்கள் தமிழ்நாட்டிற்கு வந்தார் திராவிட அரசியல்வாதிகளின் வியாபாரம் படுத்துவிடும் என்பதனால் ஏழை மாணவர்கள் இந்தி கற்க முடியாமல் நவோதயா பள்ளிகளை திறக்க விடாமல் அக்கிரமம் செய்கிறார்கள். இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தான் இந்த அக்கிரமம் தலைவிரித்து ஆடும் என்று புரியவில்லை.
Rate this:
ayyo paavam naan - chennai,இந்தியா
24-ஆக-202007:28:44 IST Report Abuse
ayyo paavam naanஇவர்கள் தமிழை வைத்து பிழைப்பு நடத்தினால் கூட பரவாயில்லை யாரையும் பிழைக்க விடமாட்டேன் என்கிறார்களே வைக்கோல் போரில் படுத்து கொண்டு இருக்கிற மாதிரி உனக்கு ஹிந்தி வேண்டாம் ஓரமாய் போய் இரு படிக்க விருப்பம் இருப்பவர்களை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்? ருப்பியா என்பது ஹிந்தி என்பதால் வேண்டாம் ன்னு சொல்ல எந்த தமிழ் ஆர்வலர்கள் இருக்கிறார்களா?...
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
23-ஆக-202023:26:00 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி இங்கே தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் கட்சிகளுக்கு வாய்க்கு அவல் கொடுப்பதே சில அதிகாரிகளின் வேலையாக உள்ளது.
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
23-ஆக-202022:32:34 IST Report Abuse
Balaji சாதாரண கம்பெனி மீட்டிங்குகளே இப்போதெல்லாம் ஒன்லைன் இல் ரெக்கார்டிங்குடன் நடக்கிறது. பிறகு இந்த நிகழ்விற்கு மட்டும் ரெக்கார்டிங் இல்லையா? அதைப்பார்த்தால் உண்மை தெரிந்து விடப்போகிறது. சாட் விண்டோவில் யார் என்ன செய்தார்கள் என்பது இருக்கப்போகிறது. எனக்கு இதுவும் வேற்று அரசியல், பிளான் பண்ணி செஞ்சிட்டாங்கன்னு தோணுது. இனியும் மத்திய அரசு இப்படிப்பட்ட நினவுகளை சர்வ ஜாக்கிரதையாக, பொதுவெளியில் நடத்திவிட்டால் பிரச்சினையே இல்லை. காசுக்கு மாரடிக்கும் கூட்டம் இங்கு கலகம் உருவாக்க தயாராக தொதாக வேலை செய்ய காத்திருக்கிறார்கள். எனக்கென்ன இதுவும் அந்த ஏர்போர்ட் கனிமொயிக்கா மாட்டேன் மாதிரி ஆதாரம் இல்லாத நிலையிநை ஆதாயமாகக்கொண்டு 'ஐயோ கொல்றாங்க' நாடகம் போடும் படக்கம்பெனியின் தயாரிப்பாக இருக்குமென்றே தோன்றுகிறது.
Rate this:
ayyo paavam naan - chennai,இந்தியா
24-ஆக-202007:32:19 IST Report Abuse
ayyo paavam naanஇத்தனை காலமாக இந்த மாதிரி தான் பிழைப்பு நடத்தி கொண்டு இருக்கிறார்கள். இதில் ஒவ்வொரு துறையினரும் திமுக மற்றும் ஹிந்தி எதிர்ப்பு கட்சிகளில் சேர்ந்து அவர்களது பங்கிற்கு அரசியல் செய்கிறார்கள். மத்திய அரசின் கான்டிராக்ட்களுக்கு ஹிந்தி பேசுபவர்களிடம் பேசி பெற்று வியாபாரம் செய்வதில்லையா? சுத்த ஏமாற்று வேலை அது போகட்டும் டாக்டர்கள் ஹிந்தி பேசத்தெரியாதவர்கள் வெளியே போகலாம் என்று ஆயுஷ் துறை செயலாளர் எந்த மொழியில் சொன்னார்? என்று சொல்ல வில்லையே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X