மனிதநேயம் ஒரு அறுந்துவிடாத மாயசங்கிலி: கொரோனா துயரத்தை துடைக்கும் மனங்கள்

Updated : ஆக 23, 2020 | Added : ஆக 23, 2020 | கருத்துகள் (4) | |
Advertisement
திருநெல்வேலி : விளிம்பு மனிதர்களுக்கு உதவ துாரம் ஒரு பொருட்டல்ல..ஏழ்மை ஒரு காரணமல்ல என நிரூபித்திருக்கிறார் சைக்கிளில் டீ விற்று பிழைப்பு நடத்தும் இளைஞர் தமிழரசன். சென்னையில், கணவன் இல்லாமல் இரண்டு குழந்தைகளுடன் வறுமையில் வாடிய பெண் ஒருவருக்கு சொந்த செலவில் தையல் மெஷின் வாங்கி கொடுத்து, பலரது பாராட்டையும் பெற்றுள்ளார்.தமிழரசன் வாழ்க்கை பின்னணியே ஒரு சோகம்
மனிதநேயம்,மாயசங்கிலி , கொரோனா, மனங்கள்,தமிழரசன்

திருநெல்வேலி : விளிம்பு மனிதர்களுக்கு உதவ துாரம் ஒரு பொருட்டல்ல..ஏழ்மை ஒரு காரணமல்ல என நிரூபித்திருக்கிறார் சைக்கிளில் டீ விற்று பிழைப்பு நடத்தும் இளைஞர் தமிழரசன். சென்னையில், கணவன் இல்லாமல் இரண்டு குழந்தைகளுடன் வறுமையில் வாடிய பெண் ஒருவருக்கு சொந்த செலவில் தையல் மெஷின் வாங்கி கொடுத்து, பலரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

தமிழரசன் வாழ்க்கை பின்னணியே ஒரு சோகம் இழையோடும் கதைதான். துாத்துக்குடியில் பிறந்தவர். தந்தை, தாய் யாரென்றே தெரியாமல் அருப்புக்கோட்டை ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவர். அவர்கள் உதவியோடு திண்டுக்கல் கல்லுாரியில் பி.எஸ்.சி.,கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்றவர். 22 வயதில் வேலைவாய்ப்பிற்காக பட்டப்படிப்பு சான்றிதழ்களோடு சென்னை சென்றவர், அங்கு யாரையும் தெரியாததால் மெரினா கடற்கரையில் பொழுதை கழித்தார். ஒரு நாள் இரவில் சான்றிதழ்கள், சொற்ப பணம், உடைகள் இருந்த பையோடு திருடு போனதால் மீண்டும் 2020ல் கொரோனா துவங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு மதுரைக்கு வந்தார்.

பசியும், பட்டினியுமாக தம்மைப்போலவே நிறைய பேர் கொரோனா காலத்தில் தவிப்பதை உணர்ந்தவர் பலரிடமும் யாகசம் பெற்று கிடைக்கும் பணத்தில் தினமும் 30 பேருக்கு சாப்பாடு பார்சல்கள் தரும் நற்பணியை துவக்கினார். பின்னர் சிலரது உதவியால், ஒரு சைக்கிள், ஒரு டீ கேன் வாங்கி தற்போது தினமும் காலையும் மாலையும் டீ வியாபாரம் மேற்கொள்கிறார். மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே கல்லணையில் வசிக்கிறார். தற்போதும் ஆதரவற்றோருக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு அளிக்கும் பணியை தொடர்கிறார்.


latest tamil newsசென்னை சோழிங்கநல்லுார், காந்திநகர் ஏரிக்கரையில் வசிக்கும் சூரியகலாவிற்கு 8 வயதில் மகன், 5 வயதில் மகள் உள்ளனர். கணவர் விட்டுச்சென்றதால் வீட்டுவேலைகள் செய்து பிழைத்துவந்தார். கொரோனா காலம் வீட்டு வேலைக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. வயிற்றுப்பாடுக்கு கூட வழியின்றி தவித்தவர், தமக்கு தையல் தெரியும் என்பதால் யாராவது தையல் மெஷின் வாங்கித்தந்தால் என் குழந்தைகளை பசியின்றி காப்பாற்றுவேன் என உதவிகள் கேட்டார். சென்னை புரசைவாக்கத்தில் வசிக்கும் உதவும் கைகள் அமைப்பை சேர்ந்த வெங்கடேசன், இந்த தகவலை முகநுால், சமூகவலைத்தளங்களில் தெரிவித்தார். இதனை அறிந்த டீ விற்கும் மதுரை இளைஞர் தமிழரசன் அந்த பெண்மணிக்கு தமது செலவில் ரூ 18 ஆயிரம் மதிப்புள்ள தையல் மெஷின் வாங்க பணம் அனுப்பினார்.


latest tamil newsஇதுகுறித்து வெங்கடேசன் கூறுகையில், எனக்கு தமிழரசன் போன் செய்து தையல் மெஷின் வாங்க உதவுவதாக தெரிவித்தார். எனக்கு தமிழரசன் யாரென்றே தெரியாது. யாராவது தொழிலதிபர் அல்லது அதிகம் சம்பளம் வாங்கும் அதிகாரியாக இருக்கக்கூடும் என குரலை வைத்து கற்பனைசெய்திருந்தேன். பணத்தை தையல் மெஷின் வழங்கும் நிறுவனத்திற்கு அனுப்ப செய்தேன். அவரும் பணத்தை அனுப்பிவிட்டார். பிறகுதான் தமிழரசன் குறித்து விசாரித்த போது தினமும் டீ விற்கும் மனிதநேய இளைஞர் என்பதை புரிந்துகொண்டேன். தற்போது சூரியகலா தையல் மெஷினை கொண்டு பிழைப்பு நடத்தி வருகிறார். நானும் நண்பர்கள் மூலம் அவரது குடும்பத்திற்கு 45 தினங்களுக்கு தேவையான அரிசி மளிகை பொருட்கள் வாங்கிகொடுத்தேன் என்றார்.


latest tamil news


மீண்டும் தமிழரசனிடம் பேசினோம். நீங்களோ டீ விற்பனை செய்து வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். யாரென்றே தெரியாத ஒரு குடும்பத்திற்கு அதுவும் 18 ஆயிரம் உதவுவது பெரிதல்லவா என்றோம். நிச்சயமாக.. நான் தற்போது நடத்தும் வாழ்க்கையே பலரது உதவியில் வந்ததுதான். வெங்கடேசன் குரலில் உண்மையிருந்தது. உதவவேண்டும் என்ற எண்ணம் வந்தது. 18 ஆயிரம் ரூபாய் எனது ஒரு மாத உழைப்பாகும். இருப்பினும் தற்போதைய மனதின் நிறைவை ஒரு உதவியால் மட்டுமே பெற முடிகிறது என்றார்.

தமிழரசன், வெங்கடேசன் போன்றவர்களால்தான் சூரியகலா போன்ற விளிம்பு மனிதர்கள், குரலற்றவர்களின் மனங்களை நசிந்துபோகாமல் செய்யமுடிகிறது.

உதவிகள் புரிய முயற்சித்த இருவரையும் நீங்கள் பாராட்ட தமிழரசன் 6379476932, வெங்கடேசன் 9840914739.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
23-ஆக-202019:28:50 IST Report Abuse
S. Narayanan இப்படிப்பட்ட மனித நேயம் கொண்ட மனிதர்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை. கடவுள் அவருக்கு சகல சௌகர்யங்களையும் கொடுத்து வாழ உதவ வேண்டும். வெங்கடேசனுக்கு அந்த லார்டு வெங்கடேசன் நிச்சயம் நல்ல வழிகாட்டுவார்.
Rate this:
Cancel
Thiru, Coimbatore - Coimbatore,இந்தியா
23-ஆக-202019:22:47 IST Report Abuse
Thiru, Coimbatore அன்பு வணக்கங்கள்❣️🙏🏻 இருக்கறவனே இந்த காலத்தில கம்முனு இருக்கும்போது நீங்க செய்யுற பணிய நினைச்சா உங்கள் பாதம் தொட்டு வணங்கலாம்னு இருக்கு..❣️ கடவுள் உண்மையா உங்கள மாதிரி மனிதர்களில் தான் இருக்கிறார்🙏🏻🙏🏻🙏🏻 எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி தாங்கள் செய்யும் இந்த நற்பணி என்றும் தொடரட்டும் ❣️🙏🏻 வணங்குகின்றேன்...🙏🏻🙏🏻🙏🏻
Rate this:
Cancel
vasan - doha,கத்தார்
23-ஆக-202019:06:24 IST Report Abuse
vasan வாழ்க வளமுடன்....இன்னும் நிறைய சமூகத்திற்கு செய்ய ஊக்கப்படுத்தும் செய்தி வாழ்க்கை எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை உணர்த்தும் செய்தி..மற்றும் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்தும் செய்தி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X