சோனியா பதவி விலகியதாக வெளியான தகவல் தவறு: காங்., விளக்கம்

Updated : ஆக 23, 2020 | Added : ஆக 23, 2020 | கருத்துகள் (20+ 60)
Share
Advertisement
Congress, Sonia, Sonia Gandhi, Randeep Surjewala, காங்கிரஸ், சோனியா

புதுடில்லி: காங்., இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா விலகியதாக வெளியான தகவல் தவறானது என, காங்., கட்சி விளக்கம் அளித்துள்ளது.

லோக்சபா தேர்தல் தோல்வியை தொடர்ந்து, தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகினார். இதனை தொடர்ந்து, கட்சியின் இடைக்கால தலைவராக கடந்தாண்டு ஆக.,10ம் தேதி சோனியா பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்று ஒரு வருடத்தை கடந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை (ஆக.,24) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், புதிய தலைவர் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

காங்கிரசுக்கு முழு நேர தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கபில் சிபல், பூபேந்தர் சிங் ஹூடா, வீரப்ப மொய்லி, ராஜ்பாபர், மிலிந்த் தியோர், சந்தீப் தீக்ஷித், ரேணுகா சவுத்ரி, மணிஷ் திவாரி உள்ளிட்ட 23 பேர், இடைக்கால தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக வெளிவந்த தகவலை அடுத்து, காங்., இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து சோனியா விலக முடிவு செய்ததாக தகவல் வெளியானது.


latest tamil news



இதனை காங்., கட்சி முற்றிலும் மறுத்துள்ளது. இதுகுறித்து காங்., செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், 'சோனியா காங்., இடைக்கால தலைவர் பதவியில் இருந்து விலகியதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது' என விளக்கம் அளித்துள்ளார்.


நாளை செயற்குழு கூட்டம்:


இந்நிலையில், காங்., செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. காங்., கட்சி ஆளும் மாநில முதல்வர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கடிதம்:


காங்., எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் என பல பேர் தொடர்ந்து சோனியாவுக்கு கடிதம் எழுதி வருகின்றனர். இதில் ராகுலை தலைவராக நியமிக்க வேண்டும் என பலரும், சோனியாவே தலைவராக தொடர வேண்டும் என பலரும் எழுதி உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (20+ 60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-ஆக-202016:14:21 IST Report Abuse
skv srinivasankrishnaveni எப்போதுதிமுக்க்வோட கூட்டணிவைச்சானுகலோ அரேபிடிச்சது ஜனமத்து சனி பணவெறியேதான் முக்கியம் இருபாலா காட்ச்சிலேயும் தலைவிரிச்சு ஆடுறதுக்கே மெயின் ரீசன் ஒருகாலாலே நேர்மையான கட்சியாகஇருந்ததாம் காங்கிரஸ் ஆனால் நான் அரிஞ்சவரையிலே எவ்ளோனல்லவா மந்திரிகளா இருந்துருக்காங்க உதாரணம் ட்றக்.
Rate this:
Cancel
Hari - chennai,இந்தியா
24-ஆக-202009:46:24 IST Report Abuse
Hari அதுசரி இது இப்போதான் உண்மையாகும்? அதையாவது பி சிதம்பரம் போன்ற ஆக்ஸிபோர்ட பார்ட்டிகள் விளக்கம் சொன்னால் நல்லா இருக்கும்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
24-ஆக-202009:05:32 IST Report Abuse
skv srinivasankrishnaveni inthaledi enna raajivkaan thiyin மனைவி இத்தாலியன் லேடிய கான் கிரேஸ்லே தலைவியாக்கியது அந்தகூமுட்டை சீதாராம் கேசரி என்ற ஊசிப்போன உப்புமா நாடடையே இந்துக்களையே ஒளிச்சு தன மதம் பரப்பவே வந்தாளுக ராஜிவ் மனைவி என்று சொல்லு நாட்டுக்குட்டிச்சுவர் மக்கள் மண்ணாகிப்போயாச்சு மதம் மாறிய எல்லோரையம் ஒன்னு இத்தாலிக்கே துரத்தவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X