பொது செய்தி

இந்தியா

ரிசர்வ் வங்கி துவங்கிய நித்தியானந்தா: கரன்சியும் தயார்

Updated : ஆக 24, 2020 | Added : ஆக 24, 2020 | கருத்துகள் (41)
Share
Advertisement

பல சர்ச்சைகளிலும், வழக்குகளிலும் சிக்கியுள்ள நித்தியானந்தா சமீபத்தில் கைலாஷா என்ற தனி நாட்டினை துவங்கியுள்ளதாக யூடியூப் வாயிலாக தகவல் வெளியிட்டார்.

கடந்த விநாயகர் சதுர்த்தி நாளன்று கைலாஷா ரிசர்வ் வங்கி துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியிட்டார். அதற்கான கைலாஷா கரன்சியும் வெளியிடப்பட்டுள்ளது. தன்னுடைய இணைய பக்கத்தில். இது இந்துக்கள் மட்டுமே வாழும் கைலாஷா நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் கைலாஷா நாட்டின் 300 பக்க பொருளாதார கொள்கைகளை வெளியிட்டுள்ளார். மற்றொரு நாட்டுடன் தன்னுடைய வங்கி தொடர்பாக புரிதல் ஒப்பந்தமும் செய்துள்ளார்.latest tamil news
கைலாஷ் எங்கு உள்ளது

சென்ற வருடம் கைலாஷா என்ற தனி நாட்டினை நித்தியானந்தா துவங்கிய நிலையில், அப்படி ஒரு தேசம் இருக்கிறதா என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டுள்ளது. 'இது எல்லைகள் இல்லாத ஒரு தனி தேசம் தங்களுடைய தேசத்தில் உரிமைகளை இழந்த இந்துக்களால் உருவாகியுள்ள தேசம்' என்று நித்தியானந்தா குறிப்பிட்டுள்ளார். அதே நேரம் 'கைலாஷ்' ஈகுவாடர் அருகே டிரினிடாட் மற்றும் டோபாகோ இடையே அமைந்துள்ள தனித்தீவு என்று பத்திரிக்கையாளர்கள் கருதுகின்றனர். கைலாஷாவுக்கு என தனிக் கொடியும் பாஸ்போர்ட் உள்ளதா என அறியப்பட வில்லை.


கைலாஷா பற்றி நித்தியானந்தா

கைலாஷா பற்றி நித்தியானந்தா கூறியதாவது, 'கைலாஷா நாட்டில் குடியுரிமை பெற இந்து மதத்தை கடைப்பிடிக்க வேண்டும் அல்லது இந்து மதத்தை கடைப்பிடிக்க ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும். கைலாஷா இந்துக்களுக்கான பாதுகாப்பான சொர்க்கம். இங்கு அனைவரும் அமைதியான வாழ்க்கை வாழலாம். ஆன்மிக சிந்தனை, கலை, பண்பாடு போன்றவற்றை சுதந்திரமாக வெளிப்படுத்தலாம். இங்கு யாருடைய தலையீடும் இருக்காது. வன்முறை இல்லாத உலகமாக இருக்கும்.

கைலாஷா நாட்டில் சுகாதாரம், கல்வி, வர்த்தகம், தகவல் தொடர்பு போன்ற அனைத்திற்கும் தனித்தனி துறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நவீன நாகரீக வாழ்க்கையுடன் அரசு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் மத தலைவர் நித்தியானந்தா.' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்


கைலாஷா ரிசர்வ் வங்கி

கடந்த சனியன்று நித்தியானந்தா யூடியூப்பில் கைலாஷாவில் ரிசர்வ் வங்கி துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். அது விரைவில் செயல்படும் எனவும் ராஜிய உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ள நாடுகளில் அது செயல்படும் எனவும் தெரிவித்தார். ரிசர்வ் வங்கிக்கான கவர்னர் மற்றும் இயக்குனர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனியன்று கைலாஷா இணையத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கைலாஷா ரிசர்வ் வங்கி சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட தனி அமைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர அங்கு இந்து பொருளாதார கொள்கைகள் குறித்து 100 புத்தகங்கள் மற்றும் 360 ஆய்வு கட்டுரைகளும் வெளியிடப்பட்டுள்ளன. கைலாஷா கரன்சி வெளியிடுவதில் நாடு பெருமை கொள்கிறது. கம்போடியா, இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான் போன்ற பழங்கால 56 இந்து நாடுகளின் கொள்கைகளின் அடிப்படையில் கைலாஷா நாணயம் வெளியிடப்படுகிறது. கைலாஷா 56 நாடுகளில் எந்த ஒரு பிராந்திய உரிமைகளையும் கோரவில்லை ஆனால், அந்நாட்டின் மதமாக இருந்த இந்து மதத்திற்கு கைலாஷா புத்துயிர் அளிக்கிறது.


கைலாஷா கரன்சி

கைலாஷாவில் 8 வெவ்வேறு மதிப்பிலான கரன்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு 77 வகையான தங்க நாணயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை கைலாஷ் டாலர்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு டாலரில் இருந்து, கால் டாலர், அரை டாலர், முக்கால் டாலர், பத்தில் ஒரு பங்கு டாலர் என வெவ்வேறு மதிப்புகளில் டாலர்கள் வெளியிடப்படும். அவை 56 பழங்கால இந்து நாடுகளின் நாணயங்களை பிரதிபலிக்கும்.


latest tamil news
சர்ச்சைகளில் சிக்கிய நித்தியானந்தா

நித்தியானந்தா தியானபீடம் என்ற அமைப்பினை துவங்கிய நித்தியானந்தா இந்தியாவில் இருந்த போது பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வந்தார். 2010ம் ஆண்டு திரைப்பட நடிகை ரஞ்சிதாவுடன் தனிமையில் இருந்ததாக வெளியிடப்பட்ட வீடியோவால் முதன் முதலாக சர்ச்சையில் சிக்கினார். ஆனால், அதன் பின் அதிலிருந்து வெளிவந்தார். பெங்களூரு வழக்கில் சிக்கிய நித்தியானந்தா இமாச்சல பிரேிதசத்தின் சோலன் மாவட்டத்தில் கைதானார்.

ஜாமினில் வெளி வந்த அவர் இரு வருடங்களுக்கு பிறகு அமெரிக்க பெண்மணி கொடுத்த புகாரில் சிக்கினார். கடைசியாக 2019ல் தமிழகத்தைச் சேர்ந்த தம்பதியர் தங்கள் குழந்தைகளை கடத்தியதாக வழக்கு தொடர்ந்தனர். மேலும் குழந்தைகளை குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் வைத்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் நித்தியானந்தா மீது குழந்தைகளை கடத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. அது தவிர 19 வயது பெண்ணையும் கடத்தியதாக வழக்கு அவர் மீது தொடரப்பட்டது.

நவம்பர் 2019ல் குஜராத் போலீஸ், நித்தியனந்தா இந்தியாவை விட்டு தப்பிவிட்டார் எனவும் மொத்தம் 50 முறை நீதிமன்ற விசாரணைக்கு அழைத்தும் அவர் ஒத்துழைக்கவில்லை என்றும் தெரிவித்தனர். எனவே, அவர் தற்போது ஈகுவாடர் நாட்டருகே டிரினிடாட் மற்றும் டோபாகோ இடையே அமைந்த தீவில் இருப்பதாக தெரிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-ஆக-202004:25:09 IST Report Abuse
J.V. Iyer சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வந்ததற்கு காரணம் ஒரு சில ஹிந்து எதிர்ப்பு வெறியர்களின் செயல்தான். சத்குருவுக்கும் குடைச்சல் குடுத்து கொண்டு இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் உள்ள ஹிந்து சாமியார்களுக்கு இந்த கொலைகார கூட்டங்கள் தொல்லை தருகின்றன. இதிலிருந்து மீண்டு வந்த சுவாமி நித்யானந்தாவுக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-ஆக-202019:57:49 IST Report Abuse
தமிழவேல் குப்பு, சுப்பு லாம், 50 முறை நீதிமன்ற விசாரணைக்கு அழைத்தும் வரலேன்னா விடுவானுவோளா ? அல்லது 2 முறை க்கு மேல போகாம இருக்க முடியுமா ?
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
24-ஆக-202019:25:10 IST Report Abuse
Rajagopal சந்நியாசி சம்சாரியான கதைதான் இது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X