பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, விரைவில் விடுதலையாவார் என, சொல்லப்படுகிறது. இவர் தொடர்பான விபரங்களை, கர்நாடக அரசின் முக்கிய அதிகாரி ஒருவர், வாரம் ஒரு முறை, மத்திய அரசுக்கு தெரிவித்து வருகிறாராம்.சசிகலா, விடுதலையானதும் சென்னையில் தான் வசிக்கப் போகிறார். அதுவும் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனிலுள்ள வேதா நிலையத்திற்கு எதிரே உள்ள வீட்டில் தான் இருப்பார் என, கர்நாடக அதிகாரிகள், டில்லிக்கு தெரிவித்துள்ளனர்.

இன்னொரு பக்கம், பா.ஜ., தேசிய செயலர்களுள் ஒருவரான பூபேந்திர யாதவும், சசிகலா விடுதலை விஷயத்தில் சம்பந்தப்பட்டுள்ளார் என, சொல்லப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு நெருக்கமான இவர், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கும் நெருக்கமானவர்.

அ.தி.மு.க., ஒன்றுபட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என, பா.ஜ., தலைவர்கள் விரும்புகின்றனர். இதனால் தான் சசிகலா விஷயத்தில், பா.ஜ., தலையிட்டு வருகின்றது. சசிகலா, சிறையிலிருந்து வெளியே வந்த பின், தமிழக அரசியலில் ஒரு மாற்றம் வரும் என, பா.ஜ., எதிர்பார்க்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE