அரசல் புரசல் அரசியல்: போனால் போகட்டும்...!

Updated : ஆக 24, 2020 | Added : ஆக 24, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
(பரபரப்பான கிசுகிசுப்பான சுறுசுறுப்பான குறுகுறுப்பான அரசியல் துணுக்குகள் இப்பகுதியில் இடம்பெறும்)முன்னாள் எம்.பி.., லட்சுமணன், தி.மு.க.,வுக்குத் தாவப் போறாருங்கிற தகவல் கிடைச்சதும், முதல்வர் பழனிச்சாமி, உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ., குமரகுரு மூலம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்காரு...அப்ப, அமைச்சர் சி.வி.சண்முகம், அவருடைய சகோதரர் ராதாகிருஷ்ணன் மீது, லட்சுமணன் புகார்
பழனிச்சாமி, தேர்தல்

(பரபரப்பான கிசுகிசுப்பான சுறுசுறுப்பான குறுகுறுப்பான அரசியல் துணுக்குகள் இப்பகுதியில் இடம்பெறும்)

முன்னாள் எம்.பி.., லட்சுமணன், தி.மு.க.,வுக்குத் தாவப் போறாருங்கிற தகவல் கிடைச்சதும், முதல்வர் பழனிச்சாமி, உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ., குமரகுரு மூலம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்காரு...
அப்ப, அமைச்சர் சி.வி.சண்முகம், அவருடைய சகோதரர் ராதாகிருஷ்ணன் மீது, லட்சுமணன் புகார் சொன்னாராம். அதனால, ‛இந்தப் பிரச்னையை நம்மால தீர்க்க முடியாது... அவரு, தி.மு.க.,வுக்கு போகட்டும்'ன்னு முதல்வர் பழனிச்சாமியே சொல்லிட்டாராம்.


தேர்தல் ஸ்பெஷலா இருக்குமோ...!




latest tamil news



அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கியதும், சேர்க்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், இரண்டு ஸ்கூல் பேக்குடன், பாட புத்தகங்களும் கொடுத்திருக்காங்க...
எதுக்கு இரண்டு பேக்னு புரியாம பெற்றோர்களும், குழந்தைகளும் தவிக்க, அடுத்த வருஷத்துக்கும் சேர்த்துதான்னு, ஆசிரியர்கள் சொல்லியிருக்காங்க. இது தெரிந்ததும், ‛பல லட்சம் பேக்குகளை கூடுதலா பள்ளிக் கல்வித் துறை வாங்கி, பணத்தை வீணடிச்சுருக்கு'ன்னு, தி.மு.க., குற்றச்சாட்டியிருக்கு.
தேர்தல் நெருக்கத்துல, ஸ்கூல் பேக்கும் கூட ஓட்டுக்களை வாங்கிக் கொடுக்குமோன்னு, தி.மு.க., தரப்புக்கு லேசா சந்தேகம் வந்திருக்காம்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BJRaman - Chennai,இந்தியா
25-ஆக-202021:42:37 IST Report Abuse
BJRaman ‛இந்தப் பிரச்னையை நம்மால தீர்க்க முடியாது... அவரு, தி.மு.க.,வுக்கு போகட்டும்'ன்னு முதல்வர் பழனிச்சாமியே சொல்லிட்டாராம்.... தாங்க முடியவில்லை.. ஆள விட்டா போதும்
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
25-ஆக-202011:46:07 IST Report Abuse
Malick Raja வேலூர் முன்னாள் MLA.வும் திமுகவில் ..ஆக போகப்போக தெரியும் .. அப்போது ஈபிஎஸ் "&கோ தனியாகவும் ஓபிஎஸ் &கோ தனியாகவும் பிரிந்திருக்கும் .. உன்னாலே நான் கேட்டேன் என்னாலே நீ கேட்டாய் என்று பாடுவதையும்பார்க்கலாம்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
24-ஆக-202017:35:49 IST Report Abuse
RajanRajan முருவன் அண்ணா மத்திய அரசு இ பாஸுக்கு ஆல் பாஸ் போட்டுட்டுது. உங்க தமிழகத்திலே இன்னும் என்ன தயக்கமாம் இ பாஸ் ஐ தூக்குறதுக்கு. குரானா வருமானம் எப்படியும் பெருகுமே டாஸ்மாக் கூட்டம் போல. என்னிக்கு இந்த குரானா ஊழல் வெடிச்சு சிதற போவுதோ அம்மாவழியே சரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X