புதுடில்லி: 'லடாக் விவகாரம் தொடர்பாக சீனாவுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் திட்டம் தயாராக உள்ளது' என, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 15ம் தேதி லடாக் அடுத்த கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். தொடர்ந்து இருநாடுகளிடையே ஏற்பட்ட உடன்பாட்டில், எல்லையில் குவிக்கப்பட்ட படைகளை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டது.
பின்னர் பேட்டியளித்த அவர், 'உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு குறித்த மாறுபட்ட கருத்துக்களால் வரம்பு மீறல் ஏற்படுகிறது. சீனர்களின் அத்துமீறல்களைக் கையாள்வதற்கான ராணுவ விருப்பம் இன்னும் தொடர்கிறது. ஆனால் ராஜதந்திர மற்றும் ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் மட்டுமே இது பரிசீலிக்கப்படும்' என்றார்.

இந்தியாவும் சீனாவும் கடந்த இரண்டரை மாதங்களில் பல சுற்று ராணுவ மற்றும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. ஆனால் எல்லை பிரச்னையை தீர்ப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. கடந்த வாரம், லடாக் விவகாரம் தொடர்பாக இந்தியாவும் சீனாவும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தின. மேலும் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தை ஒட்டிய எல்லையில் சீனா கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்திருந்தது. மேலும், 'சீன எல்லைப்பகுதிகளில் படைகளை குறைக்கும் திட்டம் எதுவுமில்லை' என, இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE